NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Monday, December 30, 2013

கவிதை: 'தொடரும்.... உயிர்ப்பின் உறவுகள்!'



இயற்கை வளம் பெற
உழைத்துழைத்து ஓய்ந்தது 
இந்த பெரு விருட்சம்!

எங்கிருந்து வந்ததோ
அங்கேயே அந்த ஆத்மா
சென்றடைந்தது!

உலகை மலடாக்கும்
ஏகாத்பத்தியத்தின் பேராசை யுத்தத்தை
மௌனமே மொழியாக்கி
இயற்கை வேளாண்மையால்
தடுத்தாற் கொண்டீர்  நீர்!

தாய் மண் பாராம்பர்ய வித்தாய்
விதைப்பட்டுக் கொண்டே இருப்பீர் நீர்!
மீண்டும்.. மீண்டும் 
பூமியை பிளந்து
முளைத்தெழும் வித்துக்களாய்...
உயிர் பெறுவீர் நீர்!

பூக்களின் அழகிலும்,
துளிர்களின் அரும்பிலும்,
உலகின் செழிப்பிலும்
இனியும், 
ஓர் உயிர்ப்பின் உறவுகள்
தொடரும்..
உலகம் உள்ளவரை!

- 'சின்னக்குயில்'

Action Replay - Looking Back At 2013: இந்திய அதிகார வர்க்கம், காவல்துறை.






 


(Thanks: The Times Of India/30.12.2013/Ahmedabad Edition)

Wednesday, December 25, 2013

கருத்துப்படம்: 'அனுதினமும் வெல்கிறது..!'


  • "சுமை சுமந்து சோர்ந்திருப்போரே..
  • நீங்கள் எல்லோரும் 
  • என்னிடத்தில் வாருங்கள்.!
  • நான் உங்களுக்கு 
  • இளைப்பாறுதல் தருகிறேன்..!"
  • வேதாந்த வசனங்களை 
  • வென்று கொண்டிருக்கிறது...
  • சொல்லாமல், செயலில்...
  • அனுதினமும்... தாய்மை..!"

விருந்தினர் பக்கம்:' இந்திய கிருஸ்துமஸ் கதை!'

குழந்தை யேசுவும், அவரது தாயார் கன்னி மேரியும் உலக மக்களை ரட்சிப்பவர்களாக உண்மையிலேயே இருக்கலாம். ஆனால், என்னைப் பொருத்தவரை அவர்களை 'பெத்லஹேமின்' இடையர் குடும்பத்து முக்கிய கதாப் பாத்திரமாகவே பார்க்கிறேன். கன்னி மேரிக்கு பிறகு அந்த குடும்பத்தார் மட்டுமே பரலோகத்தின் தடபுடலான உபசரிப்புகளை கண்டிருப்பார்கள். விண்ணுலகத்தின் பேரொளியில் குளிக்கும் பாக்கியத்தையும் பெற்றிருப்பார்கள். அதன் பிறகு, "ஏழை, எளியோர் பாக்கியவான்கள்; அவர்களின் இருப்பிடம் சுவனமாகும்!" - என்று உபதேசிக்க யேசுவுக்கு 32 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. 

ஒரு மேய்ப்பனைவிட ஏழையை எங்கும் காண முடியாது. அதேபோல, ஒரு இடையனைவிட கடினமான வாழ்க்கையை வாழ்பவர் வேறு யாராகவும் இருக்க இயலாது. குறிப்பாக பண்டைய நாட்களில் இன்றைய இஸ்ரேல், பலஸ்தீனம் போன்ற பகுதிகளில் வசித்த இடையர்களுக்கென்று சொந்தமாக மேய்ச்சல் பிராணிகளை கொண்டிருந்தது மிகவும் சொற்பம்தான். செல்வந்தர்களின் பிராணிகளைதான் அவர்கள் குழுக்களாக இருந்து மேய்ப்பார்கள். அவற்றின் ரோமம் வெட்டி எடுக்கும் பருவம்வரை அல்லது அந்த பிராணிகள் விற்கப்படும்வரை மேய்க்கும் தொழில் அவர்களைச் சார்ந்ததாகவே இருந்தது. தங்கள் உயிரினும் மேலாக, உடலை உறையச் செய்யும் குளிரில் அந்த மந்தைகளை பாதுகாத்து வந்தார்கள்.

ஜான் தயாள்
இந்தியாவின் 5 லட்சம் கிராமங்களைச் சார்ந்த பழங்குடியினரை பைபிளின் இந்த மேய்ப்பர்களாகவே அடையாளம் காணலாம். உடலை மறைப்பதற்கும்கூட ஒழுங்காய் அணியும் ஆடைக் கூட இல்லாத அவலநிலையில் வசிப்பவர்கள் இவர்கள். ஒதுங்க வீடில்லை. அடுத்த வேளை உணவு எங்கே என்பதும் நிச்சயம் இல்லை. 

தலைவர்களின் பொய்யான வாக்குறுதிகளும், நிறைவேற்ற முயன்று முடியாத வாக்குறுதிகளுமாய் இந்த தலித்துகள், பழங்குடியினர், மீனவர்கள் மற்றும் நிலமற்ற ஏழைகள் மிகக் குறைந்த கூலிக்கு இடுப்பொடிய வேலை செய்ய வேண்டிய நிர்பந்தமான வாழ்க்கையாகிவிட்டது. இந்தியாவின் வளர்ச்சி என்னும் கதை இதுவரை இவர்களைப் புறக்கணித்தே புனையப்பட்டிருக்கிறது.

நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும், வறுமைக்கோட்டுக்குக் கீழே அல்லாடும் இவர்ககள் அனுதினமும் எதிர்கொள்ளும் வாழ்க்கை, காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும், அரசும் அதன் நிர்வாகத்துறையும் காட்டும் மகிழ்ச்சி பொங்கும் முகங்களைவிட்டும் வெகுதூரத்தில் உள்ளது. பெரு நகரங்களின் மேல்தட்டு, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை விட்டும் மிக மிக விலகி... யாருடைய மனசாட்சியும் உறுத்தாமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமையானது.

செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்பலாம், சந்திரனில் மனிதர்களை குடியேற வைக்கலாம். ஆனால், உலகளவில் இந்தியாவோ வறுமை ஒழிப்பு, சுகாதாரம் மற்றும்  சமூக சமத்துவம் ஆகியவற்றின் பட்டியல் வரிசையில் பின்தங்கியே உள்ளது. சிசு மரணங்கள், இளம் பெண்களின் பேறுகால சாவுகள் மற்றும் சிசு-தாய் ஆகியோரின் ஊட்டச் சத்து குறைபாடு மரணங்கள் ஆகியவற்றில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. தொழில் வளர்ச்சியில் பெரும் சாதனைப் படைப்பதாக சொல்லப்படும் குஜராத்தில் இந்த கொடுமைகளின் புள்ளிவிவரம் இன்னும் மோசமாக இருக்கிறது. 

சொந்த அரசாங்கத்தாலும், பன்னாட்டு நிறுவனங்களாலும் தங்கள் நிலமும், காடுகளும், நீராதாரமும் சுரண்டப்படுவதை கண்டு தலித்துகளும், பழங்குடியினரும் வாழ்வின் கடைக்கோடிக்கே தள்ளப்பட்டு நிராசையில் இருக்கிறார்கள். அவர்களின் அற்புதமான மலைவளம் கனிமவளத்துக்காகவும், எண்ணெய் வளத்துக்காகவும் சமதளமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆறுகளின் குறுக்கே அணைகள் எழுப்பப்பட்டு அவர்களின் வசிப்பிடங்கள் எல்லாம் ஜலசமாதியாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனால், அப்படி உற்பத்தி செய்யப்படும் புனல் மின்சாரத்தை அவர்களின் கிராமங்கள் ஒரு நாளும் பயன்படுத்தியதில்லை; அதற்கான வசதியும் அரசாங்கத்தால் செய்துதரப்படவில்லை. அவர்களில் ஓரிருவருக்கு மட்டும் வேலைவாய்ப்புகள், பெரும்பான்மையினர் வேலையின்மையின் உழல அதிலும் பெரும்பான்மையினர் கொத்தடிமைகளாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது பெண்கள் பாலியல் வக்கிரங்களுக்கான பதுமைகளாக பயன்பட, இளந்தலைமுறையினரோ கல்லாதவர்களாக வளர்கிறார்கள்.

ஒடுக்கப்படுவோரின் கனவுகள் கனவுகளாகவே இருக்கின்றன. எளிமையான கனவுகள்தான் அவை. பசியற்ற வயிறுகளும், நோயற்ற உடல்களுமான கனவுகள்; எல்லோருக்கும் குடிக்க சுத்தமான குடிநீர், இருக்க ஒரு இடம் வேண்டிய கனவுகள். இதற்கும் மேலாக மானத்தோடும், கண்ணியத்தோடும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்ற கனவுகள்!

இந்த கனவுகளை அரசாங்கம் நிறைவேற்றும் என்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரையும் தென்படவில்லை! 

நம்பிக்கையற்ற ஒரு சூழல்; கைவிடப்பட்ட மக்கள் அனைவரும் ஒரு 'மீட்பருக்காக' யேசுவின் வாக்களிக்கப்பட்ட இரட்சிப்பு போன்ற ஒன்றுக்காக  எதிர்நோக்கி காத்திருக்கும் வேளை இது.

கிருஸ்துமஸின் நோக்கும், மேய்ப்பர்களுக்கான அந்த மீட்சிக்கான வாக்கும் நமக்கும் சேர்த்துதான்.

அனைவருக்கும் சந்தோஷம் பொங்கும் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

- ஜான் தயாள்,
(Secretary-General of the All India Christian Council)

(Source: TwoCirlces.net)


Tuesday, December 24, 2013

முக்கிய செய்திகள் - வாசிப்பது மிஸ்டர் பாமரன்: 'மாணவர் கைது நடவடிக்கைக்கு எதிராய் மனித உரிமை ஆணையத்திடம் புகார்'


குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 20 தேதி சென்னை வருகைத் தந்தார். அவருக்கு எதிராய் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகச் சொல்லி, கல்லூரி மாணவர்கள் ஜோதி லிங்கம், ரமேஷ், மோகன சந்திரன், லாமன்,  மற்றும் தமிழ் இனியன் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த இயக்குனர் கவுதமனும் சூளைமேட்டிலுள்ள அவரது வீட்டிலிருந்து நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். பின்னர் இவர்கள் அனைவரும் விடுதலைச் செய்யப்பட்டனர்.

இது சம்பந்தமாக அடையாறில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் இயக்குனர் கவுதமன் புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: 

நள்ளிரவில் போலீஸார் அத்துமீறி கைது செய்ததுடன், அவர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டனர். இதற்கு காரணமான காவல் உதவி ஆணையர் ஞானசேகரன், ஆய்வாளர் ஶ்ரீகாந்த் ஆகியோர் மீதும் இவர்களுக்கு உத்திரவிட்ட காவல ஆணையர் ஜார்ஜ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!" - என்று கூறியுள்ளார்.

குடியரசு தலைவர் வருகையைக் கண்டித்து போராட்டம் நடத்தலாமா என்று மாணவர்கள் கூடி ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். அந்த கூட்டத்தின் முடிவில் போராட்டம் வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், கூட்டம் நடத்தியதை அறிந்து காவல்துறையினர் கைது செய்துவிட்டனர்.

அதிகாலை 2 மணியளவில், மாணவர்களின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் அவர்களின் சட்டையைப் பிடித்து இழுத்தும் காரணம் கேட்ட வீட்டு உறுப்பினர்களை அநாகரிகமாக திட்டுயும் உள்ளனர்.  

கைது செய்யப்பட்டவர்களை ஒரு லாட்ஜில் அடைத்து வைத்திருந்த நிலையில், தகவல் பத்திரிகைகளுக்கு கசிந்ததும் அங்கிருந்து வேறொரு இடத்துக்கு அப்புறப்படுத்தியுள்ளனர். 

அந்த நடவடிக்கையின் போது சூளைமேட்டைச் சேர்ந்த தமிழ் இனியனை ஆய்வாளர் ஶ்ரீகாந்த் அடித்ததாக சொல்லப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் உள்ள நிலையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல, மனித உரிமை ஆணையத்துக்கு புகார் சென்றுள்ளதால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

நடப்புச் செய்தி: 'பயணம் ரத்தானாலும் குடும்பத்தார் பயணிக்கலாம்!'


ஒருவர் திடீரென ரயில் பயணத்தை ரத்து செய்துவிட்டால், அவருக்குப் பதிலாக அந்த குடும்பத்தைச் சேர்ந்த மற்றொருவர் இனி பயணிக்கலாம்.  குடும்ப உறுப்பினர்களின் பெயர் ரேஷன் கார்டில் உள்ளவர்கள் மட்டுமே பெயர் மாற்றம் செய்யப்பட்டு இப்படி பயணிக்க முடியும். 

  • 24 மணி நேரத்துக்கு முன்னதாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். பயணிகள் பெயர்ப் பட்டியல் (சார்ட்) தயாரான பிறகு யாரும் பெயர் மாற்றம் செய்ய முடியாது.
  • சலுகைக் கட்டணத்தில் முன்பதிவு டிக்கெட் எடுத்திருந்தால், சலுகைக் கட்டண பயணத்துக்கு தகுதி இல்லாதவர்,  பெயர் மாற்றம் செய்து பயணிக்க முடியாது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் உள்ள தலைமை முன்பதிவு மேற்பார்வையாளரிடம் உரிய காரணத்தைத் தெரிவித்தும், ரத்த சொந்தம் என்பதற்காக ரேஷன் கார்ட்டை காண்பித்தும் பயணிப்பவருக்கான பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.

மற்ற ரயில் நிலையங்களாக இருந்தால், உதவி வர்த்தக மேலாளரிடம் பெயர் மாற்றம் செய்து தரும்படி கோரலாம்.

(ஆதாரம்: தி இந்து, முதல் பக்கம்)


Vizhigal -'Challanger - சவால்'

Monday, December 23, 2013

என் கேள்விக்கு என்ன பதில்?: 'ஆட்சி பிடிக்க முடியவில்லையே ஏன்?'

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன் மர்ஹீம் ஜமீல் அஹ்மது சாஹெப் அவர்களிடம் கேட்ட கேள்வியும், அதற்கான பதிலின் கருத்துப் பிழிவும்.

கேள்வி: "பெரும்பான்மையினர் வாழும் நாட்டில் பெரும்பான்மையைச் சார்ந்த சங்பர்வார் கட்சியினர் ஆட்சி பிடிக்க முடியவில்லையே ஏன்?"

பதில்: "வாய்மை, நீதி, நேர்மைகளின் அடிப்படையில்தான் இந்த பிரபஞ்சம் கட்டமைக்கப்பட்டுள்ளது சகோதரரே! பொய்மையால் அதிகாரத்தை எப்படி பிடிக்க முடியும்? அந்த அதிகாரம்தான் எப்படி நிலைத்திருக்கும்?" 

இதற்கு விளக்கம் அடியிற் கண்ட போஸ்டர். (இதில் உள்ள வாசகங்கள் உண்மைதானா? நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்)








Saturday, December 21, 2013

பெஸ்ட் கிளிக்:'காமிராவின் ஊடே உலகம்!'

அழகின் அற்புதம்

இறையருள் சொரியும் காலை

தலைக்காய்ந்தவர்கள்

ஹலோ பாஸ்!

அங்காடி (சென்னை, எண்ணூர், தாழங்குப்பம்)

அண்ணா கிளம்பிட்டாருங்கோ..!

எம்பி.. எம்பி.. குதிங்க சார்..!

கவலையில்லாத மனிதர்கள்

Thursday, December 19, 2013

News in English:'Massacre Of Justice'

New Delhi: A public hearing was held at Jantar Mantar challenging the series of Patna High Court verdicts that acquitted all accused in massacres by the Ranveer Sena. 

The hearing was addressed by survivors and eyewitnesses of the Bathani Tola, Laxmanpur Bathe and Nagari Bazaar massacres, and family members of the victims. A delegation of the massacre survivors was accompanied by eminent citizens and activists, including several writers, intellectuals and journalists, over the past month.


Several survivors of the Laxmanpur Bathe and Nagari Bazaar massacres spoke of their long struggle for justice, battling all the efforts to terrorise them into silence.

Bathani Tola massacre survivor Naeemuddin Ansari, who lost 6 family members in the massacre recalled that President KR Narayanan had in 1997 called the Bathe massacre a 'national shame.' "We hope President Mukherjee too will raise his voice for the cause of justice against this second national shame – the acquittal of all the accused. The High Court refused to believe us, saying that we cannot be ‘survivors’, we should all have been dead had there been a massacre! Now the very fact that we are alive is being used to deny us justice,” he said. 

Another survivor Oghraj said, “I have personally identified several among those who led the assault in my village. And now the High Court refuses to believe me, and says I am a liar! We were filled with terror when the murderers were acquitted, fearing retaliations. But now we have decided we just have to fight, we can’t turn back”.

The jury at the public hearing included Prof. Nandini Sundar of DU, Profs. Sona Jharia Minz and YS Alone of JNU, Prof Nawal Kishor Choudhury of Patna University, and JNUSU VP Anubhuti Agnes Bara,  Chittaranjan Singh, PUCL and others. Among those who addressed the gathering were CPI(ML) General Secretary Dipankar Bhattacharya, CPRM General Secretary Taramani Rai, and Atul Dighe of Lal Nishan Party (Leninist). The proceedings were conducted by Revolutionary Youth Association General Secretary Ravi Rai.

Terming the acquittals a 'massacre of justice', CPI(ML) GS Dipankar Bhattacharya said the erstwhile Laloo-Rabri regime and the current Nitish Kumar regime had betrayed the massacre victims alike, and protected the perpetrators.

(Source:TwoCircle.net)

நடப்புச் செய்தி: 'காவல்துறையா? அரசியல் சேவைத்துறையா?'

லல்லுவின் பாதங்களைக் கழுவும் காவல்துறை அதிகாரிகள்

முக்கிய செய்திகள்: வாசிப்பது மிஸ்டர் பாமரன் - சர்ச்சைக்குரிய திரைக்கதையும், தஸ்லிமாவும்'



ஆகாஷ் ஆத் வங்க மொழி தொலைக்காட்சி சானல். இதில், சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் எழுதிய திரைக்கதையின் அடிப்படையில் ஒரு தொடர் வியாழன் அன்று ஒளிப்பரப்பாக இருந்தது. இந்நிலையில் தங்கள் உணர்வுகள் பாதிக்கப்படுவதாக முஸ்லிம் சமயத்தாரிடையே எழுந்த எதிர்ப்பையொட்டி இந்த தொடர் நிறுத்தப்படுவதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை காரணம் காட்டி காவல்துறையும் அத்தொடரை நிறுத்தும்படி அறிவுறுத்தியது.

Dusahobas என்னும் அத்தொடரின் தயாரிப்பாளர் முகநூலில், 'ஆகாஷ் ஆத் தொலைக்காட்சி, ஒளிப்பரப்ப தயாராக இருந்தும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் நாங்கள் அத்தொடரை நிறுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். நேயர்கள் தங்களுக்கு நேர்ந்த சங்கடங்களை பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். இது சம்பந்தமான விவரங்களை தொடர்ந்து முகநூலில் பதிவேற்றம் செய்கிறோம்!" - என்று தெரிவித்துள்ளார்.


பெண்ணுரிமைகள் குறித்தும், பெண்ணாதிக்கம் குறித்தும் பேசும் இத்தொடர் நிறுத்தப்பட்டது குறித்தும் தில்லியில் இருக்கும் தஸ்லீமா நஸ் ரீனுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் டுவிட்டரில், "முஸ்லிம் பழமைவாதிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து எனது மெகா சீரியல் தடை செய்யப்பட்டது சௌதியில் வசிக்கும் உணர்வையே எனக்கு தருகிறது!" - என்று கூறியுள்ளார்.


தஸ்லீமாவின் 'Dusahobas' தொடருக்கு 22 முஸ்லிம்  அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. கொல்கத்தா திப்பு சுல்தான் மசூதியின் தலைமை இமாம், மௌலானா நூருற் றஹ்மான் பர்கத்தி ஆகியோர் இதில் அடங்குவர்.


'மில்லத் இத்திஹாத் பரிஷத்' முஸ்லிம் அமைப்புகள் கூட்டமைப்பாகும். இது கொல்கத்தாவிலிருந்து செயல்படுகிறது. இந்த அமைப்பின் பிரதிநிதிகள் 'Dusahobas' தொடரின் தயாரிப்பாளரான அசோக் சுரானா மற்றும் அவரது மகள் இஸ்ஹிதா சுரான ஆகியோரை நேரிடையாக சந்தித்து சர்ச்சைக்குரிய தொடரை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார்கள்.  பின்னர் செய்தியாளார்களை சந்தித்த அவர்கள், "தஸ்லிமா மலிவான விளம்பரத்துக்காக அத்தொடரை எழுதினார் என்றும், தொலைக்காட்சி நிறுவனமும் தனது  TRP (Television Rating Point) க்காக அதை ஒளிபரப்பியதாகவும்" - குற்றம் சாட்டினார்கள்.

'Dusahobas' என்பதற்கு 'தாங்க இயலாத பிணைப்பு' (unbearable cohabitation) என்பது பொருளாகும்.

( Source: Twocircles.net and http://indiatoday.intoday.in/)




 







Wednesday, December 18, 2013

பெஸ்ட் கிளிக்: 'மனமில்லை!'

விடிந்தும் இரவை பிரிய சந்திரமுகிக்கு இன்னும் மனம் வரவில்லை

சுற்றுச்சூழல்:'சொரி கொட்டாய் குடிநீர்'


வட சென்னையை உருக்காலை, வாகன உற்பத்தி தொழிற்சாலை, அனல் மின் நிலையங்கள், உரம் மற்றும் இரசாயன தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துக்  கொண்டது போதாதென்று கண்டெய்னர் போக்குவரத்துகளால் ஏக சூழல் மாசுவால் போர்த்தப்பட்ட பரிதாபமான நகரமாகும் இது. 

இங்கு காற்று, நிலத்தடி நீர் கடும் மாசுபட்டிருக்கும் நேரத்தில் எண்ணூர், முகத்துவாரக் குப்பத்தில் அமைந்துள்ள இந்த 'சொரி கொட்டாய்' (சொரி மீன்கள் எனப்படும் ஜெல்லி மீன்கள் சேகரிக்கப்பட்ட கொட்டகை) அருகே சுவையும், சுத்தமுமான நீர் கிடைக்கிறது. பக்கத்திலேயே உப்பு நீர் கொண்ட எண்ணூர்  கடற்கழி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நடப்புச் செய்தி: 'வியாபாரிகள் சங்க தேர்தல்கள்'

சென்னை, எண்ணூரில் வியாபாரிகள் சங்க தேர்தல் 22.12.2013, ஞாயிறு அன்று நடைபெற இருக்கிறது. அது சம்பந்தமாக வைக்கப்பட்டிருக்கும் கட்அவுட்டுகள். 





நடப்புச் செய்தி:'ஒட்டு மரமாய் ஒட்டப்பட்ட கை!'


'மா, கொய்யா, சப்போட்டா' போன்ற மரங்களில் ஒட்டு மர வீரிய செடிகளை உருவாக்குவது போலவே அறிவியலும் மனிதனின் உடற்கூறுகள் சம்பந்தமாக அபரீத வளர்ச்சி அடைந்துள்ளதற்கு இந்த உண்மை சம்பவம் ஒரு உதாரணம்.

சீனாவில் நடந்தது இது. தொழிற்சாலையில் துண்டான கையை, காலில் ஒட்ட வைத்து வளர்த்து பின்னர் அதை வாலிபருக்கு மீண்டும் பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். 

சீனாவின் ஹூனான் மாகாணம். அதில் ஷாங்டே என்ற ஊர். அந்த ஊரைச் சேர்ந்தவர் ஜியாவோ வெய் (20). இவர் அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்பவர்.

கடந்த நவம்பர் 10ம் தேதி அன்றுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த விபத்து நடந்துவிட்டது. 

வேலை செய்து கொண்டிருந்த எந்திரத்தில் ஜியாவோ வெய்யின்  வலது கை சிக்கிக் கொண்டு துண்டானது. வலியில் அலறி துடித்தவரை, சக தொழிலாளர்கள் மீட்டனர். 

மணிக்கட்டு வரை துண்டான கையின் விரல் பகுதி இயந்திரத்துக்குள் விழுந்து விட்டது. அதை எடுத்துக் கொண்டு ஷாங்டேவில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். 

அங்கு ஜியாவோ வெய்யைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கையை அறுவை சிகிச்சையின் மூலம் மீண்டும் ஒட்ட வைப்பது கடினம் என்று கைவிரித்து விட்டனர். மேல் சிகிச்சைக்காக மண்டல மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர். அந்த மருத்துவமனையை அடைய கிட்டதட்ட இரண்டு மணி நேரம் ஆனது.


ஜியாவோ வெய்யின் நிலையை கண்ட மருத்துவர்கள், நிலைமை உண்மையிலேயே கடினமானதாக இருப்பதைக் கண்டார்கள். சக மருத்துவ வல்லுநர்களோடு ஆலோசனை செய்தார்கள். நேரடியாக மணிக்கட்டை கையில் பொருத்த முடியாது என்பதால், வேறு மாதிரியான முயற்சியில் இறங்கினார்கள். அது ஒரு பரிட்சார்த்தமான முயற்சிதான். அதில் வெற்றியும் இருக்கலாம். தோல்வியடைந்தும் போகலாம்.

அதன்பின் மருத்துவர் குழு துண்டான ஜியாவோ வெய்யின் கையை அவரது இடது காலில் கணுக்கால் அருகே அறுவைச் சிகிச்சையின் மூலமாக ஒட்டுச் செடியை ஒட்ட வைப்பது போல வைத்து பொருத்தினார்கள். சிதைந்துபோய் இருந்த திசுக்களும், செல்களும் உயிர் பெற வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதுவரை விபத்தில் பாதிக்கப்பட்ட வலது கரத்தை தகுந்த மருந்துகள் மூலம் பாதுகாத்தனர். 

ஒரு மாதத்துக்கு பிறகு துண்டான கையின் அனைத்து செல்களும் உயிர் பெற்றன. 

இதனால் மகிழ்ச்சி அடைந்த மருத்துவர்கள், காலில் வளர்ந்திருந்த மணிக்கட்டை மீண்டும் அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றி வலது கையில் பொருத்தினர். 

தற்போது ஜியாவோ வெய்யின் வலது கரம் வழக்கம் போல் நன்றாக செயல்படுகிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். கை திரும்ப கிடைத்த மகிழ்ச்சியில்  கண்ணீரோடு அவர் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

இது குறித்து இங்கிலாந்து மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கையில், "உண்மையில் இது ஒரு மருத்துவ அதிசயம்! மருத்துவ உலகின் மிகவும் அரிதான சாதனை இது. இதை செய்த சீன மருத்துவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்!"- என்கிறார்கள். 
(Source: The Independent)


நடப்புச் செய்தி: 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்தானே?'


தேவயானி கோப்ரகடே
 கோபித்துக் கொண்ட குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் 'சொப்புக்களை' தூக்கி எறிந்து ஆட்டத்தை கலைத்து விடுவது போல உள்ளது இந்திய அரசின் செயல்! அமெரிக்காவின் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே பொது இடத்தில் கைது செய்யப்பட்ட விவாகரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை விளையாட்டுத்தனமாய் உள்ளது. 

நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றும் தேவயானி கோப்ரகடேவை, விசா மோசடி வழக்கில் அந்த நாட்டு போலீஸார் கடந்த வியாழக்கிழமை பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு திரும்பியபோது பொது இடத்தில் கைது செய்து கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

இதற்கு பதிலடியாக, 

  • அமெரிக்க தூதரகங்களில் பணிபுரிவோர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டைகளை உடனடியாக தர வேண்டும் என்று இந்தியா உத்திரவிட்டுள்ளது.
  • அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த விமான நிலையத்துக்கான 'அனுமதி சீட்டுக்கள்' அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் உள்ள அமெரிக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விசா விவரங்கள், அந்த பள்ளிகளில் பணிபுரியும் இந்தியர்களின் ஊதியம் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசுக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
  • அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் இந்தியர்கள் குறித்த விவரங்கள், அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் குறித்தும் தகவலைத் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • அமெரிக்க தூதரகம் சார்பில் இறக்குமதி செய்யப்படும் மது உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் இனி விமான நிலையத்தில் சோதனையிட்டு சரிபார்த்த பிறகே அனுமதிக்கப்படும்.
  • டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சாலையில் தடுப்புகளை வைத்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இப்போது எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, அந்த தடுப்புகள் அனைத்தும் செவ்வாய்க்கிழைமை அகற்றப்பட்டன.  அந்த தூதரகம் அமைந்துள்ள பாதையை பொது போக்குவரத்துக்கு போலீஸார் திறந்துவிட்டனர். 

இத்துடன் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டில் இருந்து வந்துள்ள 5 எம்.பிக்களுடனான சந்திப்பை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே செவ்வாய்க்கிழமை அதிரடியாக ரத்து செய்துள்ளார்.  இதற்கு முன்னர் சொல்லிவைத்தாற் போல இதே காரணத்துக்காக அமெரிக்க எம்.பிக்கள் குழுவினருடனான சந்திப்பை மக்களவைத் தலைவர் மீரா குமார் திங்கள்கிழமை ரத்து  செய்தார். 

இந்நிலையில், "இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில், விதிமுறைகள் முறையாக பின்பற்றுட்டுள்ளன" - என்று அமெரிக்கா கூறியுள்ளது. 'வியன்னா தீர்மானத்தின்படி தூதரக ரீதியான பிரச்னைகளுக்கு மட்டுமே அமெரிக்க சட்டத்திலிருந்து சில விலக்குகள் அளிக்க வழிவகை உள்ளது. தனிநபர் என்ற முறையில் குற்றம் சாட்டப்பட்ட தேவயானிக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது!" - என்று செவ்வாய் அன்று அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேரி ஹார்ஃப்
ஆக, இந்திய துணைத் தூதர் தேவயானி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் தன்மை என்ன? அதில் உண்மை உள்ளதா? இல்லையா? என்ற உண்மையை கண்டறிவதை விட்டு, பதில் தருகிறேன் என்று சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்ளக்கூடாது. 

ஒருவேளை இந்தியா தற்போது அமெரிக்காவுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகள் சட்ட ரீதியாக சரியானவைதான் என்றால், இதுவரை அந்த சட்டம் அமல்படுத்தப்படாதது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது. 

சட்டத்தின் முன் அனைவரும் சமம்; குற்றமிழைப்பதற்கான தண்டனை அவரவர் வகிக்கும் பதவிகளின் தகுதிக்கு ஏற்ப மாறுவதில்லை என்பதுதான்  உண்மை. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்திய துணைத் தூதர் தேவயானி விசாரணை முடிவில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் அவர் தண்டிக்கப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும்?




Tuesday, December 17, 2013

சிறப்புக் கட்டுரை: 'சோகத்தின் நறுமணம் அனு தின வாழ்கையாகிப் போனவர்கள்!'


உடலை உறைய வைக்கும் பனி பொழிவு மனித வாழ்கையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. சராசரி மனித வாழ்க்கையே பெரும் தள்ளாட்டமாக இருக்கும்போது, வெட்ட வெளியில் வாழ்வைக் கழிக்கும் அவர்கள் நிச்சயமாக வானவர்கள் அல்ல! வேண்டுமானால் இப்படி சொல்லலாம்: 'நாளை பிணங்களாகப் போகும் இன்றைய நடை பிணங்கள்!' ஏற்கனவே இழக்கக் கூடாத அனைத்தையும் இழந்து பரிதவிக்கும் அவர்கள் கண் எதிரிலேயே கண்ணின் கருமணிகள் கடும் குளிர்தாளாமல் இறப்பெய்திக் கொண்டிருக்கிறன. முறையான முகாம்களும், மருத்துவ வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளும் இல்லாத திடல்களில் புதிய புதிய மண்ணறைகள் நாள்தோறும் பிஞ்சு ஆத்மாக்களின் இழப்பால் பூத்துக்  கொண்டிருக்கின்றன! ஆம்.. சோகத்தின் நறுமணம்  அனுதின வாழ்க்கையாகிப் போன துரதிஷ்டசாலிகளின் ஷாம்லி மாவட்டத்தின் முகாம்கள் அவை. முஸாபர்நகர் கலவரத்தால் வாழ்க்கை நிலைகுலைந்து போனவர்களின் துக்கமும், துயரமும் நிறைந்த முகாம்கள்!

முஸாபர்நகர் கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முகாம்களில் இறப்பெய்தி கொண்டிருக்கும் குழந்தைகள் சம்பந்தமாக உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. இந்நிலையில் உ.பி மாநில அரசோ எதற்கும் அசைந்து கொடுக்காத 'டெர்மினேட்டர்' ரோபோவாக உள்ளது. இந்த உதாரணம் கூட பொருத்தமாக இருக்காது! ஏனென்றால் டெர்மினேட்டர் ரோபோ ஒரு குழந்தையின் உயிர்காக்கும் வேற்றுலகவாசியாக வருகிறது. அதை விட மட்டமாக மனம் கல்லாகிப் போயிருக்கிறது உபி அரசு. 


மேற்கு உபியின் முக்கிய நகரமும், கரும்பு மற்றும் வெல்ல உற்பத்திக்கு பேர் போனதுமான மாவட்டம் ஷாம்லி. இந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முஸாபர்நகர் கலவரங்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் முகாம்களின் பரிதாபகரமான நிலைமைதான் இது.  இதுவரை 50 குழந்தைகள் இறப்பெய்திருக்கிறார்கள். உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகுந்த மருத்துவ வசதிகளைச் செய்து தர ஒரே ஒரு மருத்துவர்கூட இதுவரை மாநில அரசு நியமிக்கவில்லை என்பது பரிதாபமானது.

முஸாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 700 குடும்பங்களைச் சேர்ந்த கிட்ட தட்ட 4500 பேர் மலக்பூரின் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். உபியின் சுகாதார அமைச்சகத்தைச் சேர்ந்த டைரக்டர் ஜெனரல், டாக்டர் ஏ.எஸ்.ரதோர் மிகவும் அரிதினும் அரிதாக மலக்பூர் முகாம்களுக்கு செல்கிறார். அப்படி சென்றும் இறப்பெய்திக் கொண்டிருக்கும் குழந்தைகளின் மரணங்களின் உண்மையான தகவலை சொல்ல மறுக்கிறார். மலக்பூரில் கடும் குளிரால் பாதிக்கப்பட்டு மரணமுற்ற 16 குழந்தைகளை அடக்கம் செய்துள்ள புதிய மண்ணறைகளை காணக்கூட அவர் விரும்பவில்லை.

டாக்டர் ராதோரின் நிலைதான் இப்படி என்றால், ஷாம்லி மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரியான டாக்டர் லோகேஷ் குமார் குப்தாவோ மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறார். ஸீனைதி முகாம் பக்கம் வந்த அவர் காரிலிருந்து இறங்கி முகாம்களில் இருப்போரின் பிரச்னைகளை காது கொடுத்து கேட்கவும் தயாராக இல்லை. ஆக, அரசு எந்திரம் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னைகளை காது கொடுத்தும் கேட்க மறுத்து வருகிறது. அவர்களின் துன்பங்கள், துயரங்கள் சில்லிடும் பனிக்காற்றில் உறைந்து புதையுண்டு கொண்டிருக்கின்றன.


ஸீனைதி முகாம், மலக்பூர் முகாமிலிருந்து வெறும் 4 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு 6 பச்சிளம் குழந்தைகள் குளிரைத் தாளாமல் இறப்பெய்தின. இந்த மரணங்களையும் சுகாதாரத் துறை கணக்கில் எடுக்க மறுத்து வருகிறது. 

"என்னுடைய குழந்தை நச்சு பாம்புக் கடியால் இறந்துவிட்டது!" - என்கிறார் கலங்கிய கண்களோடு அக்பரி. இவரது குழந்தை 'ஸாதில்'தான் பாம்பு கடிக்கு பலியானது. இன்னும் ஐந்து குழந்தைகள், நான்கு வயதான ஃபாத்திமா, ஆறு வயது பிர்தௌவ்ஸ், ஐந்து வயது ஜோயா, இருபதே நாள் கைக் குழந்தையான பைரோஸ், பிறந்து வெறும் ஒன்பதே நாளான உமர் பலியானோர் பட்டியலில் அடங்குவர். 

இதேபோல, ஷாம்லியின் மூன்றாவது முகாமான 'நூர்பூர் - புர்கான்' முகாமிலும் மலக்பூர் மற்றும் ஸீனைதி முகாம்களின் நிலைமைதான். 1300 பேர் தவியாய் தவிக்கும் இந்த முகாமில் இதுவரை ஐந்து குழந்தைகள் குளிரைத் தாங்க முடியாமல் இறப்பெய்தின என்பது சோகமானது.

சமத்துவம், பாதுகாப்பு, நல்லாட்சி என்று போலியான முழக்கங்கள் மூலம் முலாயம் சிங்கும் முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறார் என்பதையே இந்த மரணங்களும், மனிதர்களின் அடிப்படை தேவைகளுக்குக் காட்டும் அலட்சியங்களும் நினைக்கத் தோன்றுகின்றன.

    (Source: Twocircles.net)








செய்திகள்: வாசிப்பது பாமரன்: 'மனித உரிமை மீறலில் காவல்துறை முதலிடம்'


10.12.2013 செவ்வாய் கிழமை, மனித உரிமை நாளையொட்டி சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய அரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஜெயந்தி பேசியதாவது: 

1997ஆம் ஆண்டு துவக்கப்பட்ட மனித உரிமை ஆணையத்தில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல் குறித்து நாள்தோறும், 80 முதல் 100 புகார்கள்வரை பெறப்படுகின்றன. அவற்றில் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் வைத்து துன்புறுத்துதல், போலியாக வழக்கு பதிவு செய்தல் உட்பட 95 விழுக்காடு புகார்கள் காவல்துறை சார்ந்த புகார்களாக உள்ளன. 

இது தவிர சான்றிதழ்கள் பெற பணம் கேட்டதாக வட்டாட்சியர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மாணவர்களை துன்புறுத்திய ஆசிரியர்கள், நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் உள்ளிட்ட புகார்களும் பெறப்படுகின்றன.

மனித உரிமை மீறல் குறித்து பொதுமக்கள் கடிதம் மூலமாகவோ அல்லது 143, பசுமை வழிச்சாலை (கிரீன் வே ரோடு), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை என்ற முகவரியில் நேரிலோ மனித உரிமை ஆணையத்திடம் தங்களது புகாரை தெரிவிக்கலாம்.

அளிக்கப்படும் புகாரின் தன்மையைப் பொருத்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு பரிந்துரை செய்யப்படும்"


Monday, December 16, 2013

சுற்றுச் சூழல்: ''மனித வாழ்வு இருண்ட பின்.. ஒளி தந்து என்ன பயன்?'



சென்னை எண்ணூரில் உள்ள அனல் மின் நிலையம் போதாதென்று அத்திப்பட்டிலும் அமைக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையங்களால் (வெளியேற்றும் சாம்பல் கழிவுகளால்) காற்றும், நீரும் மாசடைந்து இருண்டு வரும் வடசென்னை வாழ் மனித வாழ்கை.