NewsBlog

Tuesday, December 3, 2013

காலப்பெட்டகம் : போபால் பேரழிவு: 'ஒரு கருப்பு நாள்!'


மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் அமெரிக்காவின் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் இருந்து விஷ வாயு கசிந்து ஆயிரக் கணக்கானோரை பலி கொண்ட நாள் டிசம்பர் 3, 1984. மறக்க முடியாத நாள்.

  • அசம்பாவிதம் நிகழ்ந்த இரவோடிரவாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,295.
  • கடுமையாய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000
  • விபத்தைத் தொடர்ந்து பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.27 லட்சத்துக்கும் மேல்.

உலகின் மிகப் பெரிய பேரழிவாக இந்த சம்பவம் கருதப்படுகிறது.


ஆலையின் தலைவர் வாரன் ஆண்டர்சன் (92) அமெரிக்காவிற்கு தப்பி ஓடிவிட்டார். அந்த கொலைக் குற்றவாளியை ஒப்படைக்க அமெரிக்க மறுத்து வருகிறது. நமது நாடு 7,700 கோடி இழப்பீடு வேண்டும் என்று ஒரு பேச்சுக்கு கேட்டதோடு சரி. குற்றவாளியை கைது செய்து கொண்டு வர பெரிய அளவில் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

பேரழிவான விபத்தைத் தொடர்ந்து 'டோ கெமிக்கல்ஸ்' என்னும் நிறுவனம் யூனியன் கார்பைடை வாங்கியது. அதன் பின்னும் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வருவதாக இல்லை. 


இந்த கொடிய விபத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடித்தள மக்கள் புற்றுநோய் மற்றும் முழுமையான சிறுநீரக செயலிழப்புக்கு ஆளானார்கள். ஆனால், மத்திய அரசோ வெறும் 2000 புற்றுநோயாளிகளுக்கும், 1000 சிறுநீரகம் பாதிக்கப்பட்டோருக்கும் உதவித்  தொகையாக 2 லட்சம் கொடுக்கப்படும் என்று அறிவித்தது.

ஏறக்குறைய 30 ஆண்டுகளாகியும் பாதிக்கப்பட்டோர் இன்னமும் மாசு நீரையே குடித்து வருகிறார்கள். மூடிக் கிடக்கும் அந்த நிறுவத்தில் உள்ள நூற்றுக் கணக்கான டன் நச்சு கழிவுகள் இன்னும் அகற்றப்படாமல் காற்றிலும், நீரிலும் கலந்து மக்களை மெல்லக் கொன்றுக்கொண்டிருக்கின்றன.

பாதிக்கப்படுவது அடித்தள மக்களாக இருப்பது போபால்வாசிகள் செய்த பாவமல்ல!


0 comments:

Post a Comment