NewsBlog

Friday, December 13, 2013

காலப்பெட்டகம்: பங்களா தேஷ் ஜமாஅத் தலைவர் படுகொலைக்கு முஸ்லிம் அமைப்பு கண்டனம்'

பங்களா தேஷ் ஜமாஅத் இஸ்லாமி தலைவர் ஷஹீத் அப்துல் காதர் முல்லாஹ் (ரஹ்) வியாழன் அன்று இரவு, '1971ல் அந்நாட்டு பிரிவினையின் போது நடந்த அசம்பாவிதங்களுக்கு காரணம்!' - என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆளும் அரசால் படுகொலை செய்யப்பட்டார். அதைக் கண்டித்து இந்திய முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.


சிறுபான்மை உரிமைக்களுக்கான கண்காணிப்பு குழு (Civil Liberties Monitoring Committee) (CLMC). இது சம்பந்தமாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை: 

"அப்துல் காதர் முல்லாஹ்வுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். ஒரு அரசாங்கமே திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலையாகும். நீதியின் பெயரால் அரங்கேற்றப்பட்ட கொடிய மனித தன்மையற்ற படுகொலை இது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தவாறு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

அத்தோடு முல்லாஹ் மற்றும் இதே குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சிறையில் இருப்பவர்கள் ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. 1971 நடந்த சம்பவங்களையொட்டி 2010ல் அரசாங்கமே சுயமாக உருவாக்கிய அமைப்புதான் 'போர்க் குற்ற தீர்ப்பாயம்'. ஆனால், இந்த அமைப்பை, ஐநாவின் மனித உரிமை அமைப்பு (UNHRC) சட்டபூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்பதும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது என்பதும் முக்கியமானது. ஏனெனில் இந்த தீர்ப்பாயம் சர்வதேச அளவில் எந்த வரையரைகளையும் பின்பற்றாத தகுதியற்ற அமைப்பாகும். இதன் விசாரணை சம்பந்தமாக ஐநா மனித உரிமை அமைப்பு, பங்களா தேஷ் அரசாங்கத்துக்கு கண்டனம் கூட தெரிவித்தது. இஸ்லாமிய இயக்கத்தாரையும், எதிர்கட்சி தலைவர்களையும் ஒழிக்கவே இந்த தீர்ப்பாயம் அமைக்கப்பட்டதாக அனைவராலும் இந்த அமைப்பு குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சந்தர்பத்தில், அப்துல் காதர் முல்லாஹ்வை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஹஸீனாவின் இந்த அரசியல் பழிவாங்கல் போக்கைப் புரிந்து கொண்டு அவருக்கு தக்க பதிலடி தர வேண்டும் என்றும் பங்களா தேஷ் மக்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்!"

- இவ்வாறு அந்த கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment