NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Showing posts with label செய்திகள்: வாசிப்பது பாமரன். Show all posts
Showing posts with label செய்திகள்: வாசிப்பது பாமரன். Show all posts

Friday, October 30, 2020

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெயரில் முழக்கமா?

 

பிரான்ஸ் நாட்டில், சர்ச்சைக்குரிய வகையில் நபிகளார் குறித்து கார்ட்டூன்கள் வெளியிடப்பட்டதைக் கண்டித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் காவாஜா ஆஸிப் உள்ளிட்ட எம்.பி.க்கள் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர். 
 
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு மற்றும் எதிர்க்கட்சி இரண்டுமே தனித்தனி தீர்மானங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சித்தன.
 
விவாதம் நடந்துகொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி அவையில் எழுந்து உரையாற்ற முயற்சித்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் "ஓட்டிங், ஓட்டிங்…" என்று முழக்கம் எழுப்பினார்கள். அவர்களது கோரிக்கை அரசுத் தரப்புத் தீர்மானத்துக்குப் பதிலாக தங்கள் தரப்புத் தீர்மானத்தை சமர்ப்பித்து ஓட்டெடுப்புக்கு அனுமதிக்கவேண்டும் என்பதே ஆகும்.
 
இந்த முழக்கம் எழுப்பும் இரண்டு நிமிடக் காட்சி இந்தியத் தொலைக்காட்சி ஊடகங்களிலும், மின்னணு தளங்களிலும், பிரபல சமூக ஊடக கணக்குகளிலும் தவறாக, வெளியிடப்பட்டது. இந்த முழக்கம் எந்த சூழ்நிலையில் எழுப்பப்பட்டது என்ற எந்த விளக்கமும் இல்லாமலே இது வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
 
"ஓட்டிங் ஓட்டிங்..." என்று பாகிஸ்தான் எம்.பி.க்கள் முழக்கமிட்ட நிலையில், அவர்கள் "மோடி... மோடி" என்று முழக்கம் எழுப்பியதாக டைம்ஸ் நவ், இந்தியா டிவி, எக்கனாமிக் டைம்ஸ் மற்றும் குறிப்பிட்ட பிரபல சமூக ஊடக கணக்குகள் தவறாகக் கூறின. பிரதமர் இம்ரான் கானுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் மோடி பெயரை முழக்கமிட்டதாக இந்த ஊடகங்கள் தவறாக குறிப்பிட்டன.
 
இப்படி தவறாக வெளியிடப்பட்ட செய்தியை எக்கனாமிக் டைம்ஸ் தனது இணையதளத்திலிருந்து நீக்கிவிட்டது. டைம்ஸ் நவ் தனது டிவீட்டை டெலீட் செய்துவிட்டது. ஆனால், டைம்ஸ் நவ் தளத்தில் இது தொடர்பான கட்டுரை, குறிப்பிட்ட காணொளியோடு தொடர்ந்து காணப்பட்டது.

(Source: BBC)


Wednesday, September 16, 2020

இந்திய அரசியல் தலைவர்கள், அதிகாரிகளை வேவு பார்க்கும் சீனா: பிரபல நாளேடு தகவல்

 

இந்தியாவில்  குறிப்பாக சுமார் 10 ஆயிரம் பேரை சீனாவின் ஷென்ஸெனைச் சேர்ந்த தொழில்நுட்ப  நிறுவனமான ஜென்ஹுவா வேவு பார்ப்பதாக பிரபல ஆங்கில நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ்  வெளியிட்ட புலனாய்வுச் செய்தியில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்திய  குடியரசு தலைவர், பிரதமர், இந்திய கேபினட் அமைச்சர்கள், மாநில  முதல்வர்கள், சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள், முப்படை  தலைமைத் தளபதி, முப்படை தளபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி,  நீதிபதிகள், பிரபல தொழிலதிபர்கள் என ஒரு பெரிய பட்டியலில் இருப்பவர்கள்,  சீன நிறுவனத்தால் வேவு பார்க்கப்பட்டுள்ளதாக அந்த நாளிதழின் புலனாய்வுச்  செய்தி விவரிக்கிறது.

இந்த பட்டியலில், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், கிராம தலைவர்கள் கூட இருப்பதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த  விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்தை தெரிந்துகொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ்  முற்பட்டதாகவும் ஆனால், அந்த நிறுவனத்தின் இணையதளம் பிறகு  மூடப்பட்டதாகவும் அந்த நாளிதழ் கூறுகிறது.

ஆனால்,  வேவு பார்க்கப்படும் நாடுகள் பட்டியலில், இந்தியா மட்டுமின்றி பிரிட்டன்,  ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருப்பவர்களும் உள்ளனர்.

இந்தியன்  எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி போலவே, லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி  மெயில் நாளிதழ்,  பிரிட்டனில் அரசி, பிரதமர் உள்பட 40 ஆயிரம் பிரபலங்கள்  வேவு பார்க்கப்பட்டதாகக் கூறி அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில்,  பிரபல ஏபிசி ஊடக நிறுவனம், அதன் தளங்களில் அந்நாட்டின் அரசுத்துறைகளில்   முக்கிய பதவிகளை வகிக்கும் 35 ஆயிரம் பேர் வேவு பார்க்கப்படுவதாகக் கூறி  செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, December 17, 2013

செய்திகள்: வாசிப்பது பாமரன்: 'மனித உரிமை மீறலில் காவல்துறை முதலிடம்'


10.12.2013 செவ்வாய் கிழமை, மனித உரிமை நாளையொட்டி சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய அரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஜெயந்தி பேசியதாவது: 

1997ஆம் ஆண்டு துவக்கப்பட்ட மனித உரிமை ஆணையத்தில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல் குறித்து நாள்தோறும், 80 முதல் 100 புகார்கள்வரை பெறப்படுகின்றன. அவற்றில் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் வைத்து துன்புறுத்துதல், போலியாக வழக்கு பதிவு செய்தல் உட்பட 95 விழுக்காடு புகார்கள் காவல்துறை சார்ந்த புகார்களாக உள்ளன. 

இது தவிர சான்றிதழ்கள் பெற பணம் கேட்டதாக வட்டாட்சியர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மாணவர்களை துன்புறுத்திய ஆசிரியர்கள், நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் உள்ளிட்ட புகார்களும் பெறப்படுகின்றன.

மனித உரிமை மீறல் குறித்து பொதுமக்கள் கடிதம் மூலமாகவோ அல்லது 143, பசுமை வழிச்சாலை (கிரீன் வே ரோடு), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை என்ற முகவரியில் நேரிலோ மனித உரிமை ஆணையத்திடம் தங்களது புகாரை தெரிவிக்கலாம்.

அளிக்கப்படும் புகாரின் தன்மையைப் பொருத்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு பரிந்துரை செய்யப்படும்"


Friday, December 13, 2013

செய்திகள் வாசிப்பது பாமரன்: 'ஹவாலாவில் இந்தியா 5ஆம் இடம்'


'ஹவாலா' எனப்படும் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பணம் கடத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 

2002 முதல் 2011 ஆம் ஆண்டுவரை ஊழல், வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றங்கள் மூலம் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட பணத்தின் மதிப்பு 34,304 கோடி டாலர்களாகும் அதாவது நமது பணத்தில் சுமார் ரூ.21,25,304 கோடி.

2011 ஆம் ஆண்டில் மட்டும் 8,493 டாலர்கள் அதாவது சுமார் ரூ.5,26,183 கோடி சட்ட விரோதமாக கடத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலகிலேயே அதிக அளவு சட்ட விரோத பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஐந்தாவது நாடாக இந்தியா திகழ்கிறது.

முதல் நான்கு இடங்களை முறையே சீனா, ரஷ்யா, மெக்ஸிகோ, மலேசியா ஆகிய நாடுகள் வகிக்கின்றன.

இந்தத் தகவலை வாஷிங்டனைச் சேர்ந்த 'குளோபல் ஃபைனான்சியல் இன்டகிரிட்டி' என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Monday, December 2, 2013

செய்திகள் வாசிப்பது: பாமரன் : ' என்னய்யா நடக்குது இங்கே?'



ஒரு பக்கம் கல்யாணம் பண்ணிக்காம குடும்பம் நடத்துலாம்னு சொல்றீங்..!

திரும்புற இடமெல்லாம் சாராயக் கடை திறந்துவிட்டிருக்கீங்க..! 

'பார்' நைட் டான்ஸீன்னு ஆம்பள, பொம்பளகள கூத்தடிக்க விட்டிருக்கீங்க..!

குடிபோதையிலே இரண்டு பேரும் எசகு ... பிசகா நடந்துட்டப் பிறகு அவன் கெடுத்துட்டான்.. இவன் கெடுத்துட்டான்னு கூச்சல் போடறீங்க..!

ஆம்புளையா.. பொம்புளையான்னு டெஸ்ட் வேற பண்றீங்க..! 

அணி அணியாய் வந்து ஆர்ப்பாட்டம் செய்றீங்க..!

என்னய்யா நடக்குது இங்கே..?

எரியற கட்டையை இழுத்துட்டா தானா அடுப்பு அணைஞ்சுடப் போகுது. இதுகூடவா தெரியாது உங்களுக்கு..!

உங்கள இந்த பாமரனாலே புரிஞ்சுகவே முடியலே சாமி..! ஆளவிடுங்க..! கூலி வேலைக்கு நேரமாகுது..! நாளெல்லாம் உழைச்சாதான் ஒரு வேள கஞ்சியாவது குடிக்க முடியும். 

நீங்க மெத்த படிச்சவங்க.. உங்க பிரச்னைகள நீங்களே தீர்த்துக்க முடியாதா என்ன?

Thursday, October 31, 2013

செய்திகள்: 'வாசிப்பது பாமரன்'

‘இனவெறி இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து நீக்க வேண்டும்!’ - என்ற கோரிக்கையை முன்வைத்து 31.10.2013 பிற்பகலில், சென்னை, எண்ணூர், அசோக்லேலண்ட் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜான் (எ) முருகப்பிரியன் முன்னிலை வகித்தார். என்.எஸ். விஜயக்குமார் தலைமை வகிக்க வீர.இராமலிங்கம் வரவேற்புரையாற்றினார். 'உச்சிதனை முகர்ந்தால்' திரைபடத்தின் இயக்குநரான புகழேந்தி தங்கராஜ் சிறப்புரையாற்ற பிரபாகர் நன்றி நவின்றார். கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக இரா.வந்தியத்தேவன் இருந்தார். கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தில் திரளாக தொழிலாளர் தோழர்கள் கலந்து கொண்டனர்.


தமிழக அமைச்சரவை 11 ஆவது முறையாக மாற்றம். முன்னாள் சுகாதாரக்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பள்ளிக்கல்வித்துறை அமைச்சரானார். 


சுகாதாரத்துறையின் புதிய அமைச்சராக, சி.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளியன்று இவர்கள் ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.




அடுத்த மாதம் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கிறார். காங்கிரஸ் உயர்நிலைக்குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.



செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை ஏவுவதற்கான ஒத்திகை நவ. 3 இல், ஆரம்பிக்கிறது. இதற்கான 56 மணி நேர கவுண்ட் டவுன் தொடங்கியது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான பொத்தானை அழுத்துவதை தவிர்த்த மற்ற அனைத்து நடைமுறைகளும் இந்த ஒத்திகையில் மேற்கொள்ளப்படும் என்று பி.எஸ்.எல்.வி - சி -25 திட்ட இயக்குனர் பி.குன்னி கிருஷ்ணன் கூறினார்.


Wednesday, October 30, 2013

செய்திகள்: 'வாசிப்பது ... பாமரன்'



முஸ்லிம்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜனவரி 28 இல், சிறைநிரப்பும் போராட்டம் நடத்த இருக்கிறது. கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவளிக்க தயார் என்கிறார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன்.



தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இனிப்புகளின் விலை 30 விழுக்காடு அளவு உயர்ந்துள்ளது. உற்பத்திச் செலவு அதிகரிப்புதான் காரணம் என்கிறார்கள் ஓட்டல் உரிமையாளர்கள்.



வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாள் 31.10.2013. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அக்.1 முதல் அக். 31 வரை வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தங்களுக்காக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

தனியார் வங்கிகள் தொடங்கு வதற்கான அனுமதியை பரிசீலனை செய்ய ரிசர்வ் வங்கி தீவிரம் காட்டிவருகிறது. வங்கிகள் தொடங்க இதுவரை 26 தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஜனவரி மாதம் அனுமதி பெறும் நிறுவனங்களின் பட்டியல் வெளியாகும் எனத் தெரிகிறது. டாடா குழுமம், ரிலையன்ஸ், பிர்லா குழுமம், எல் அண்ட்டி, பஜாஜ் போன்ற 26 நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


சியாரா லியோன் சர்வதேச கப்பல் பதிவுக் கழகம் இந்தியக் கடலோரக் காவல் படைக்கு தூத்துக்குடியில் பிடிபட்ட அமெரிக்க கப்பல் சம்பந்தமாக ஒரு கடிதம் எழுதியுள்ளது. “அமெரிக்க கப்பலை இந்தியா சட்டவிரோதமாக பிடித்து வைத்துள்ளது. கப்பலையும், அதில் இருந்தோரையும் உடன் விடுவிக்க வேண்டும்! புழல் சிறையில் இருக்கும் கப்பல் ஊழியர்களுக்க சரியான உணவு வழங்கப்படவில்லை! சரியான மருத்துவ வசதிகள் செய்து தரப்படவில்லை!”- என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.



முன்பு 100 ரூபாய் கொடுத்து வாங்கிய அதேபொருளை இப்போது 108 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டால் அந்த 8 விழுக்காடு பணவீக்கம் அதிகரித்துள்ளது என்று பொருள். பணவீக்கத்தை கணக்கிட உலகம் முழுவதும் இரண்டு முறைமைகள் கையாளப்படுகின்றன. 1) மொத்த விற்பனை விலைப்பட்டியல் பணவீக்கம் அதாவது Whole Sale Price Index Inflation சுருக்கமாக WPI. 2) நுகர்வோர் விலைப்பட்டியல் பணவீக்கம் அதாவது Consumer Price Index Inflation சுருக்கமாக CPI. நமது நாட்டில் மொத்த விற்பனை விலைப்பட்டியல் பணவீக்கம் (WPI) முறைமை பயன்படுத்தப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் நுகர்வோர் விலைப்பட்டியல் பணவீக்கம் (CPI) முறைமையை பயன்படுத்துகிறார்கள்.