‘இனவெறி இலங்கையை
காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து நீக்க வேண்டும்!’ - என்ற கோரிக்கையை முன்வைத்து 31.10.2013
பிற்பகலில், சென்னை, எண்ணூர், அசோக்லேலண்ட் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜான் (எ) முருகப்பிரியன்
முன்னிலை வகித்தார். என்.எஸ். விஜயக்குமார் தலைமை வகிக்க வீர.இராமலிங்கம் வரவேற்புரையாற்றினார்.
'உச்சிதனை முகர்ந்தால்' திரைபடத்தின் இயக்குநரான புகழேந்தி தங்கராஜ் சிறப்புரையாற்ற பிரபாகர்
நன்றி நவின்றார். கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக இரா.வந்தியத்தேவன் இருந்தார். கண்டன ஆர்ப்பாட்ட
கூட்டத்தில் திரளாக தொழிலாளர் தோழர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக அமைச்சரவை 11 ஆவது முறையாக மாற்றம். முன்னாள் சுகாதாரக்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பள்ளிக்கல்வித்துறை அமைச்சரானார்.
சுகாதாரத்துறையின் புதிய அமைச்சராக, சி.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளியன்று இவர்கள் ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
அடுத்த மாதம் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கிறார். காங்கிரஸ் உயர்நிலைக்குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை ஏவுவதற்கான ஒத்திகை நவ. 3 இல், ஆரம்பிக்கிறது. இதற்கான 56 மணி நேர கவுண்ட் டவுன் தொடங்கியது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான பொத்தானை அழுத்துவதை தவிர்த்த மற்ற அனைத்து நடைமுறைகளும் இந்த ஒத்திகையில் மேற்கொள்ளப்படும் என்று பி.எஸ்.எல்.வி - சி -25 திட்ட இயக்குனர் பி.குன்னி கிருஷ்ணன் கூறினார்.
0 comments:
Post a Comment