சிறைப்படுத்தத்
துடிக்கும்
மனித சமூகத்திலிருந்து
அனல் பறக்கும்
கோஷங்கள் முழங்கும்
போராளியே!
வெல்க உனது முழக்கம்!
உன் தலைமுறையை
மீட்டெடுக்க..
களத்தில் நிற்கிறாய்
நீ!
இதுவும் ஓர் அறப்போர்தான்
அஞ்சாதே நீ!
நாளைய வரலாறு உன்னை
‘கோழை’ என தூற்றாதிருக்க..
அரசு ஏடுகளில்
உனது பேர் எதுவாக
பதிவானாலும்
உனது கல்லறையில்
மட்டும்
'மனித உரிமைப் போராளி'
இவன்
என்ற பதிவுகள்
அழுத்தமாய்
தடம் பதிக்கும் கலங்காதே நீ!
இழப்பதற்கு ஒன்றுமே
இல்லாத போது..
இனி நடப்பதில்
என்ன அச்சம்?
- 'சின்னக்குயில்'
0 comments:
Post a Comment