NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Showing posts with label வெல்டன் ஜீ. Show all posts
Showing posts with label வெல்டன் ஜீ. Show all posts

Tuesday, July 8, 2014

வெல்டன் ஜீ: 'இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை!'



அன்றைய தினம், போரூரில் அடுக்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தவுடன், முதல் அரை மணி நேரத்தில் அங்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்ட பலரில் அவனும் ஒருவன். 

இரவெல்லாம் ஓயாத கத்தல், கதறலுக்கு மத்தியில் வெறும் கைகளாலேயே பலரை உயிருடன் மீட்டுள்ளனர் இத்தகைய பல நண்பர்கள்.

அதன்பிறகு, தீயணைப்புப் படையினரும், மற்ற துறையினரும் வந்து அந்தப் பொறுப்பினை ஏற்று மீட்புப் பணிகளைத் தொடர்ந்திருக்கிறார்கள்.

இவன் காலில் கல் விழுந்து அடிபட்டு, மறுநாள் வீட்டுக்கு வந்திருக்கிறான்.

எனது நண்பன் அங்கு நடந்த சம்பவம் ஒன்றினைச் சொன்னான்:

'விபத்து நடந்த அந்த ஆரம்பக் கட்டத்திலேயே அங்கு நூற்றுக்கும் மேலான பொதுமக்கள் வந்திருந்து மீட்புப் பணிகளில் உதவிடும்போது, யாரோ ஒருவர் நூற்றுக்கணக்கான் பிஸ்கெட் பாக்கட்டுகளை வாங்கி வந்து மீட்புப் பணியிலிருந்தவர்களுக்குத் தந்துள்ளார்.

இன்னுமொருவர், ஓடிச் சென்று தெருவில் சென்று கொண்டிருந்த டீ விற்கும் சைக்கிளை அப்படியே அழைத்து வந்துள்ளார். டீ வண்டிக்காரர் அங்கிருந்த எல்லோருக்கும் டீ கொடுத்துள்ளார்.

நண்பர், தனது பாக்கெட்டிலிருந்து ஐநூறு ரூபாயை எடுத்து டீ வண்டிக்காரருக்கு தர முயல, அவரோ,

"அய்யே.. இப்போ இதுதான் ரொம்ப முக்கியமா? நா ஓடிப் போய் இன்னொரு கேன் டீ கொண்டுட்டு வரேன். நீ போய், மாட்டிட்டு இருக்கவங்க யாரையாவது தூக்க முடியுமான்னு பாரு.. அத்த வுட்டுட்டு, காசு கொடுக்குது பாரு"

இதை அவன் என்னிடம் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டு,

"நாம நினைக்கிற மாதிரி இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை போலிருக்குடா!" - என்றான்.

"அதைத்தாண்டா, சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, என வெவ்வேறு வடிவத்தில இலக்கியம் சொல்லுது!" - என்றேன்.

சொல்லி விட்டு, மறுபடியும் யோசித்தேன்.

'ஒருவேளை இதைத் (மட்டும்) தான் நமது இலக்கியங்கள் சொல்ல வேண்டுமோ?! "


- தகவல்:  Nasar Ali Ali
Nasar Ali Ali


Monday, September 23, 2013

வெல்டன் ஜீ : 'சமூக ஒழுக்கத்தைத் தரும் நம்பிக்கைகள்'


மூட நம்பிக்கைகளை ஒழிக்கச் சட்டம் இயற்றினால் நன்றே. அதேநேரத்தில், மூட நம்பிக்கையையும், மத நம்பிக்கையையும் கவனமாகப் பிரிக்க வேண்டும். 

குறிப்பாக, மூட நம்பிக்கை ஒழிப்பு என்ற பெயரில் இறை நம்பிக்கையே கூடாது என்பதுபோல ஒரு மாயை உருவாக்கப்படுவது ஏற்கத் தக்கதல்ல. காரணம், மத நம்பிக்கைகளைப் பேணி பாதுகாக்கும் உரிமை என ஐ.நா.மன்றத்தின் சர்வதேச மனித உரிமைகள் சாகனத்தின் ஷரத்து 18 மற்றும் நமது மாண்பமை இந்திய அரசயல் சாசனத்தின் ஷரத்து 25 - ம், உறுதி செய்துள்ளன. 

ஒரு சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை ஒரு தனிமனிதனோ அல்லது அரசியல் ரீதியான சட்டங்களாலோ மட்டுமே மாற்றிட முடியாது என்பது மனிதனின் பல்லாயிரம் ஆண்டு கால அனுபவம். 

ஆனால், இறை நம்பிக்கையினால் 'பிறருக்கு நன்மை செய்தும் வாழ்பவன் துயரற்ற வாழ்வை அடைவான்!'- என்ற நம்பிக்கை காரணமாக சமூகத்தில் ஓரளவாவது மனிதாபிமானமும், சகிப்புத்தன்மையும் நிலவுவதை மறுக்க இயலாது. 

இதை ஒரு சமூகவியலாளரின் மொழியில் சொன்னால்.. மத நம்பிக்கைகள் ஒரு மறைமுகமான சமூக ஒழுக்கத்தினைத் தருகிறது என்பதும் உண்மையே!

- ஆர். திருமூர்த்தி, கோயம்பத்தூர் - 6
(ஆதாரம்: தி இந்து - 23.09.2013 - 'இப்படிக்கு இவர்கள்' பகுதி)

Sunday, April 7, 2013