NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, October 4, 2020

இதோ வந்துவிட்டார்கள் உங்கள் வாசல்முன்!

இதோ
வந்துவிட்டார்கள்
அவர்கள்

நேற்று ஏஎம்யூ
இன்று ஜேஎன்யூ
நாளை
உங்கள் வீட்டு
வாசல் முன்

இதோ வந்துவிட்டார்கள்
அவர்கள்..
உங்கள் வாசல் முன்..!
அய்யகோ..
கேட்க நாதியற்ற
கையறு நிலையில்
நீங்கள்..!

நெஞ்சம் பதறும்
உங்கள் கண்முன்..
வாழ்நாள் முழுக்க
பணயம் வைதது
சம்பாதித்த சொத்து-சுகங்கள்
தீ வைத்து கொளுத்தப்படலாம்!
ஈரல் குலை.. கண்மணிகளின்
கற்புகள் பறிபோகலாம்..!
வாரிசு கனவுகளின் வயிறுகள்
கிழிக்கப்படலாம்..
"அம்மா-அப்பா" என்று
யாழினும் இனிதாய்
உறவுகளைத்
தொடுக்கும்
எதிர்க்கால கனவு சிசுக்கள்
சுவறுகளில் மோதி
தலை உடைத்து
வீசப்படலாம்..!
தனயன் முன்
தாயின் மானம், மரியாதை
பறிக்கப்படலாம்.
உங்கள் சின்னஞ்சிறார்கள்
வல்லுறவுக்காளாகலாம்!
நேற்றைய குஜராத்
மீண்டும் உயிர் பெற்றெழலாம்!

இதோ வந்துவிட்டார்கள் அவர்கள்
மனுதர்மம் ஏந்தி கொண்டு
ஓராயிரம் வஞ்சக திட்டங்களுடன்
உங்கள் சொந்த உதிரங்களை
ஓரணியில் படையாய்
திரட்டி கொண்டு
சர்வ ஆட்சி அதிகாரத்துடன்
இதோ வந்துவிட்டார்கள்
அவர்கள்..

நேற்று.. ஏ.எம்.யூ
இன்று ஜேஎன்யூ
நாளை உங்கள் வாசல் முன்..

இதோ வந்துவிட்டார்கள அவர்கள்
மனுதர்மம் ஏந்தி கொண்டு
பாபா அம்பேத்கரின்
சமதர்ம சட்டங்களை வீசி எறிந்து..
ஆர்ப்பரிப்பு... கொக்கரிப்போடு
இதோ வந்துவிட்டார்கள் அவர்கள்.

நேற்று ஏ.எம்.யூ
இன்று ஜே.என்.யூ
நாளை
உங்கள் வீட்டு
வாசல் முன்
இதோ வந்துவிட்டார்கள் அவர்கள்

அய்யகோ..
கேட்க நாதியற்ற
கையறு நிலையில்
நீங்கள்..!

(அண்மையில், டெல்லி ஜாமியா மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வகுப்புவாத அத்துமீறல் சம்பந்தமாக எனது மற்றொரு வலைப்பூவில் https://pamarannews.blogspot.com/2020/01/blog-post.html எழுதிய கவிதை இது. ஹதாரஸ் பாலியல் வல்லுறவு சம்பவத்துக்கு முற்றிலும் பொருந்தும் கவிதை. வகுப்புவாதிகள் குறிப்பிட்ட இனத்துக்கு மட்டும் எதிரிகள் அல்ல. மனித இனத்துக்கே எதிரியானவர்கள் என்பதை நினைவில் கொள்ளவும் - இக்வான் அமீர்)

Tuesday, January 21, 2014

கவிதை: 'யுத்தம் ஒன்று வரும்!'



"இன்னும்..
புலிகளும் வரும்..
எலிகளும் வரும்..
செடி, கொடி, தாவரங்களும் வரும்
வியூகம் அமைத்து போர்த்தொடுக்க..!

மனித இனம்
சுயநலங்களால் ஆக்கிரமித்துக் கொண்ட..
அவைகளின் ஜன்ம பூமியை
மீட்டெடுக்க..!”


- சின்னக்குயில்

Monday, December 30, 2013

கவிதை: 'தொடரும்.... உயிர்ப்பின் உறவுகள்!'



இயற்கை வளம் பெற
உழைத்துழைத்து ஓய்ந்தது 
இந்த பெரு விருட்சம்!

எங்கிருந்து வந்ததோ
அங்கேயே அந்த ஆத்மா
சென்றடைந்தது!

உலகை மலடாக்கும்
ஏகாத்பத்தியத்தின் பேராசை யுத்தத்தை
மௌனமே மொழியாக்கி
இயற்கை வேளாண்மையால்
தடுத்தாற் கொண்டீர்  நீர்!

தாய் மண் பாராம்பர்ய வித்தாய்
விதைப்பட்டுக் கொண்டே இருப்பீர் நீர்!
மீண்டும்.. மீண்டும் 
பூமியை பிளந்து
முளைத்தெழும் வித்துக்களாய்...
உயிர் பெறுவீர் நீர்!

பூக்களின் அழகிலும்,
துளிர்களின் அரும்பிலும்,
உலகின் செழிப்பிலும்
இனியும், 
ஓர் உயிர்ப்பின் உறவுகள்
தொடரும்..
உலகம் உள்ளவரை!

- 'சின்னக்குயில்'

Monday, December 9, 2013

கவிதை:'கனவுகளைத் தொலைத்துவிட்ட குழந்தையின் குரல்'


அச்சுறுத்தப்படும் தாய் நாட்டில்..
சுக்கலான இதயத்தோடு நான்!

எடுங்கள் வாளை..
வீசுங்கள் என்னைக் காக்க..
கனவுகளைத் தொலைத்துவிட்ட
பச்சிளம் குழந்தை நான்!
தனிமையில் அழுகிறேன்
கண்ணீரை துடைப்பீரோ?

காப்பாற்றுங்கள்..!
காப்பாற்றுங்கள்..!!
என் குரல் கேட்கிறதா?
என் தேவை வாழும் உரிமை!
தாக்குதலை நிறுத்துங்கள்
வாழ அனுமதியுங்கள்!

'குற்றவாளி.. குற்றவாளி..!'
என்று சொல்வோர்
இன்னும் குற்றத்தை
நிரூபிக்க காணோம்!
நாங்கள்
ஒப்புக் கொள்ளாதோரை
தடுத்து நிறுத்துவது எப்படி?

சோகமும், கோபமும்
பொங்கி வந்து
என்ன லாபம்?
மன உணர்வுகள்
கொடுமைகளைத்தான்
தடுக்குமா?




நீதியும் சமாதானமும்
வார்த்தைத் தோரணமா?
குருதிப் பொங்கும் உலகில்
மனித நேயம் வாழுமா?
அப்பா சொல்கிறார்
நிகழ்வுகள்
நான் அறியா வயசென்று!















ஆய்வுகளும், அனுமதிகளும்
கட்டுப்படுத்துமா
என் நாட்டை?
எங்கள் எண்ணெய் வளம் சுரண்டி
மாற்றம்தான் சாத்தியமா?
சர்வதேச சட்டமாவது
மண்ணாங்கட்டியாவது
சட்டாம் பிள்ளையிடம்!

என் வயதுக்கு மிஞ்சி
இன்னும் பல பிரச்னைகள்!
போரின் அச்சம்தான்
புதைந்துள்ளது; சதா எனக்குள்!
நான் என்ன செய்ய?
விண்ணைத் தொடுகின்றன வினாக்கள்!













என் சூரியன் அஸ்தமிக்க
அவர்கள் வானத்தில் இருட்டடிக்கிறார்கள்!
என் பிஞ்சு மனம் நிரம்பியுள்ளது; பேரச்சத்தால்!
என் அப்பாவி
முகம் முழுக்க
கண்ணீர் ஓடைகள்!

என் மனதின் ஓலம்
"காப்பாற்ற வாருங்கள்!"
என் கனவுகளின்
அமைதி தேவதை
சதா சிரித்துக் கொண்டு!
என் எதிர்காலத்தை
தொலைத்துவிட்டும்
நம்பிக்கையில் இன்னும் நான்!

முழு உலகின்
ஒரே அரியணைக்காக
ஜனநாயக முகமூடியில்
ஒரு சர்வாதிகரியின்
'கிறுக்குத்தனம்' போர் இது!
யார் காப்பது ..
எனது மனித உரிமைகளை!
எல்லாம் இழந்த பின் ..
காத்திருந்து என்ன பயன்?














இராக்கிய குழந்தை
உங்கள் முன்
இதோ நான்!
அச்சுறுத்தப்படும்
தாய் நாட்டில்....
சுக்கலான இதயத்தோடு!
எடுங்கள் வாளை..
வீசுங்கள்
என்னைக் காக்க..

கனவுகளை தொலைத்துவிட்ட
பச்சிளம் குழந்தை நான்!
தனிமையில் அழுகிறேன்
கண்ணீரைத் துடைப்பீரோ?
காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்..!
என் குரல் கேட்கிறதா?

மூலம்:  'மாய் ஹம்தி அலி டெசவ்கி'
(இராக்கிலிருந்து கண்ணீர் கவிதை)
 
தமிழில் : இக்வான் அமீர்

(வெளிச்சம் 2004 இல், சிறப்பு மலரில் வெளியானது)

Tuesday, October 22, 2013

கவிதை: "மீண்டும் எதிர்ப்பார்ப்போடு நான்!"





கும்மிருட்டாய்
எனது மனதின் அத்தனை
சோகங்களையும்
தாங்கியவாறு
குடைப் பிடித்தது
கரும்மேகம்!

இதுவும் கடந்து போகும்
என்பதை நிஜமாக்கி
மழை மேகம்
நகர்ந்தபோது..
நிர்மலமாய் தெளிவடைந்த
என் மனம்
லேசாய் மிதக்கிறது
அதோ அந்த
வெண்மேகமாய்!

அய்யகோ..
பூமித்தாயின் மடியைச்
செழிப்பாக்க வந்த
கார் மேகம்
தன் கடமை
தவறியதைக் கண்டு
நெஞ்சு பதைபதைக்க
சோகத்துடன்
நிற்கிறேன்
மீண்டும் நான்
இன்னொரு கடப்பை
எதிர்நோக்கி!

-    - சின்னக்குயில்

Sunday, October 13, 2013

கவிதை: 'இனி நடப்பதில் என்ன அச்சம்!'




சிறைப்படுத்தத் துடிக்கும்
மனித சமூகத்திலிருந்து
அனல் பறக்கும்
கோஷங்கள் முழங்கும் 
போராளியே!
வெல்க உனது முழக்கம்!

உன் தலைமுறையை
மீட்டெடுக்க..
களத்தில் நிற்கிறாய் நீ!
இதுவும் ஓர் அறப்போர்தான்
அஞ்சாதே நீ!

நாளைய வரலாறு உன்னை
‘கோழை’ என தூற்றாதிருக்க..
அரசு ஏடுகளில்
உனது பேர் எதுவாக
பதிவானாலும்
உனது கல்லறையில் மட்டும்
'மனித உரிமைப் போராளி' இவன்
என்ற பதிவுகள் அழுத்தமாய்
தடம் பதிக்கும் கலங்காதே நீ!

இழப்பதற்கு ஒன்றுமே
இல்லாத போது..
இனி நடப்பதில்
என்ன அச்சம்?

- 'சின்னக்குயில்'

Monday, October 7, 2013

கவிதை:'முடியாத முடிவுகள்!'




சென்ற முறை
ஊருக்குப்போய் திரும்புகையிலே - அவள்
தன் சிரம் தாழ்த்தி
கை அசைத்தாள்...
சோகத்தில்!
சைகையில் கேட்டேன் ...
ஏனம்மா கலங்குகிறாய்?

என் தோழி புளியம்மாள் இல்லை!
அவள் தோழி அரசம்மாளும் இல்லை! - இனி
நீங்கள் திரும்பி வரும்போது
நானுமிருப்பேனோ தெரியவில்லை
அதான் ... சொல்லியவள் அழுதாள்
பாவி மகளவள்..!
கண்ணீர் சிந்தும்போதும்
கருணை நிழல் தர மறக்கவில்லை!

நன்றாய் புரிகிறது ...
கால ஓட்டத்தில்
புண்ணியங்களும் கறைந்து விடும்!
நன்மைகளும் மறைந்துவிடும்!
அதுபோல்.. நீயும் ஒருநாள்..
காணாமல் போய்விடுவாய்..
என்பதை நான் 
அவளிடம் எப்படி சொல்ல? 

யாவற்றிற்கும்.. 
முடிவே முடிவாகிப் 
போகும்போது..
கண்ணீர் துடைக்கத்தான்
யார் வருவாரோ  
தெரியவில்லை!

பேதை அவளின் 
அழுகை நின்ற பாடில்லை!
கையறுப் பெண்ணாய் அவள்
தலைவிரிக் கோலமாய்
அழுதழுது புலம்பி நிற்பதை
சகிக்கவும் முடியவில்லை! 

புளியம்மாள் .............புளிய மரம்
அரசம்மாள் ...............அரசமரம்
அழுது நின்ற அவளோ ...
சாலையோர நிழல்தரும்
மிச்சமுள்ள மரம்! 
வெட்ட காத்திருக்கும் 
மிச்சமுள்ள ஒரு மரம்
Iskandar Barak


Thursday, August 8, 2013

கவிதை: "இது உறவின் பிரிவோ?"


  • வேரும் விழுதும் வட்டம் தாண்டாதிருக்க காதும் காதும் வைத்தது போல கிளைகள் மட்டும் இங்கே கூடி பேசிக் கொள்வதென்ன? தங்களின் விதைக்காலக் கதைகளையா? 
  • ஒருவேளை விட்ட சொந்தத்தை வளர்ந்தப் பின் இவைகள் வளர்க்கின்றனவோ?!
  • தட்டுப்பட்டும் தடுக்காமல் இருக்கின்றனவே; இதில் மரங்களுக்கும் மகிழ்ச்சித்தானோ!
  • இந்த கூடலின் அழகு கோபுர வாயில் போல கொஞ்சம் நுழைந்தால் தெரிகிறதே வீடும் உறவும்! நிழலும் நிம்மதியும்!
  • ஒட்டிய கிளைகளும் கொட்டிய இலைகளும் உணர்த்துவதுதான் என்ன? உறவின் பசுமையோ! பிரிவின் வெறுமையோ!
  • எல்லாம் புரிந்தும் இன்னும் மௌனமேன்? 
  • உள்ளேஇன்னும்ஒட்டிக்கிடக்கும்வேர்களுக்குத்தெரியவில்லை 
  • ஊரறியஎப்படிவெளியேஉரைப்பதென?
 - இத்ரீஸ் யஃகூப்