NewsBlog

Thursday, August 8, 2013

கவிதை: "இது உறவின் பிரிவோ?"


  • வேரும் விழுதும் வட்டம் தாண்டாதிருக்க காதும் காதும் வைத்தது போல கிளைகள் மட்டும் இங்கே கூடி பேசிக் கொள்வதென்ன? தங்களின் விதைக்காலக் கதைகளையா
  • ஒருவேளை விட்ட சொந்தத்தை வளர்ந்தப் பின் இவைகள் வளர்க்கின்றனவோ?!
  • தட்டுப்பட்டும் தடுக்காமல் இருக்கின்றனவே; இதில் மரங்களுக்கும் மகிழ்ச்சித்தானோ!
  • இந்த கூடலின் அழகு கோபுர வாயில் போல கொஞ்சம் நுழைந்தால் தெரிகிறதே வீடும் உறவும்! நிழலும் நிம்மதியும்!
  • ஒட்டிய கிளைகளும் கொட்டிய இலைகளும் உணர்த்துவதுதான் என்ன? உறவின் பசுமையோ! பிரிவின் வெறுமையோ!
  • எல்லாம் புரிந்தும் இன்னும் மௌனமேன்
  • உள்ளேஇன்னும்ஒட்டிக்கிடக்கும்வேர்களுக்குத்தெரியவில்லை 
  • ஊரறியஎப்படிவெளியேஉரைப்பதென?
 - இத்ரீஸ் யஃகூப்
 


0 comments:

Post a Comment