நமது மக்களவையில் ஏழை – எளியோர்க்கான உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றியிருக்கிற இதேவேளையில், வடக்கு கரோலினாவின் அரசு ஏழை – எளியோர்க்கு உணவளித்தால் கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்று சட்டமியற்றியிருக்கிறது.
வடக்கு கரோலினாவின் ‘டவுன்டவ்ன் ராலி’யில், (Downtown Raleigh) வார இறுதியில் பல ஆண்டுகளாக வீடில்லாத ஏழை – எளியோர்க்கு உணவளித்து சேவையாற்றுகிறது ஒரு தொண்டு நிறுவனம். ஏறக்குறைய 70 க்கும் குறையாத ஏழைகளின் பசியாற்றலுக்கு இது உதவுகிறது.
ஆனால், திடுப்பென்று நகர்புறத்து சட்ட பிரிவுகளைச் சுட்டிக் காட்டி காவல்துறை தொண்டு நிறுவனங்களின் சேவைக்கு தடைவிதித்துள்ளது. சட்டங்களை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது. அப்படி சமய உணர்வுகளைப் பாதிக்காமல் தொண்டு செய்ய நினைப்போர் கிராமப்பகுதிகளைத் தேர்வு செய்யும்படியும் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அம்பலப்படுத்தும் இந்த ஏழ்மை நிலையை மூடிமறைக்கவே அரசாங்கத்தின் நடவடிக்கைகள். இன்னும் இதைப்போன்ற ஏராளமான முட்டாள் சட்டங்கள் இருப்பதாக சமூக விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
(ஆதாரம்: www.newsobserver.com)
(ஆதாரம்: www.newsobserver.com)
0 comments:
Post a Comment