இந்நிலையில், கடந்த, 8 ஆம் தேதி கண்மாய்க்குள் பல ஆட்டு மந்தைகள் , மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது சிவசங்கின் மந்தைக்குள் பால்ராஜின் ஆடுகளில் ஒன்று, நுழைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கு தரப்பினர், பால்ராஜை தாக்கி அனைவர் முன்னிலையில், அவரை சிவசங்கு காலில் விழுந்து, மன்னிப்பு கேட்க செய்துள்ளனர். இந்தக் காட்சியை காணொளியாக்கி சமூக ஊடகங்களில் பரப்பினர்.
இதையறிந்த பால்ராஜ், 11 ஆம் தேதி மாலை கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனையடுத்து கயத்தாறு போலீசார், பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, சிவசங்கு உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து, இன்று 13.10.2020 (செவ்வாய்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தி சிறையில் அடைத்தனர்.
சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!
இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.
சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.
வடசென்னையில் சூரிய கிரணம்
21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.
காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?
சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.
டிராகன் பழச் செடியை கவாத்து செய்வது எப்படி?
How To Prune Dragon Fruit ....
Tuesday, October 13, 2020
தூத்துக்குடி: ஆடு மந்தையில் நுழைந்துவிட்டதாக கூறி காலில் விழ வைத்த சாதீயம்
Saturday, October 10, 2020
பனையோடு நான்..!
ஒருநாள் தம்பி குமார் - விஜயகுமார் வேல்முருகன், எங்கள் வீட்டின் மாடி தோட்டத்திற்கு வந்திருந்தபோது, எதேச்சையாக எடுத்த முடிவுதான் அது – ‘பனை விதைகள் நடுவது என்று’
அதற்கு முன்னர் பனை மரத்தின் பலன்களை இருவருமே அறிந்து வைத்திருந்ததும் கூடுதல் பயனாக அமைந்தது.
60-களின் துவக்கத்தில், நான் மூன்றாவது நான்காவது வகுப்புப் படிக்கும்போதே அறிமுகமாகியிந்த தோழன்தான் பனை மரம். எனது வீட்டிற்கு மிக அருகில் இருந்த பள்ளிக்கு பத்து, பதினைந்து பாதுகாவலர்களாக வரிசைக்கட்டி நின்றிருந்தார்கள் அந்த பனைத் தோழர்கள். வீட்டில் மின்சாரம் இல்லாத காலத்தில் இரவின் கும்மிருட்டில் வீசும் பலத்த காற்றில் பனை ஓலைகளின் உரசல்கள் பயம் தந்த காலம் அது.
இருள் விலகாத அந்த கருக்கலில் யார் முந்தி செல்கிறார்களோ அவர்கள் நிச்சயம் சில பனம்பழத்துடன் திரும்புவது திண்ணம். அநேகமாக அந்தப் போட்டியில் அதிகமாக வெல்வது நானாகவே இருக்கும். ஏழ்மையின் பசியும், பனம்பழத்தின் சுவையும் பல இரவுகளை உறங்காத இரவுகளாக்க பனம் பழம் சேகரிப்புப் போட்டியில் நான் வெல், எந்தத் தடையுமிருக்காது! விறகடுப்பில் பனம் பழத்தைச் சுட்டு, முகமெல்லாம் பழச்சாற்றைப் பூசிக்கொண்டு, 'பனம்புலி'யாக வளர்ந்த நாட்கள் அவை.
இதைத் தொடர்ந்து, ஆந்திரத்தில் வாழ்ந்து வந்த எனது பாட்டியை பள்ளி விடுமுறையில் சந்திக்க செல்லும்போதெல்லாம் சரியான பேருந்து வசதியில்லாமல் நடந்து செலல வேண்டியிருக்கும். ஒரு பத்து கிலோ மீட்டருக்கும் குறையாத அந்த கிராமப்பகுதிகளைக் கடந்து செம்மண் சாலையில் நடந்து செல்ல வேண்டும். அப்போதெல்லாம் வழி நெடுக காணப்படும் இதே பனைமரங்கள்தான் 'சல சல' பனை ஓலை உரசல் ஒலியால், தோழமையாக தனிமையைப் போக்கி பாட்டியின் கிராமத்துக்கு சலிப்பில்லாமல் கொண்டு சேர்க்கும்.
இத்தகைய ஒரு சூழலில்தான் ஒருமுறை பாட்டி, “(சுவரை ஒட்டியிருந்த திறந்தவெளி) குளியலறையில், செம்மண் பாறைகளுக்கிடையில் ஒரு பனம் மரம் வளர்வதாக” - சொன்னாள்.
“அதை பிடுங்க வேண்டாம்..!” – என்ற எனது சொல்லை, வேத வாக்காக ஏற்ற அவள், கிழங்கு நிலையில் இருந்த அந்த பிஞ்சு மரத்தை பிடுங்கிடாமல் பாதுகாத்து வளர்த்து வந்தாள்.
ஒவ்வொரு பள்ளி விடுமுறையின் போதும், அந்த ஒற்றைப் பனை மரத்தின் வளர்ச்சி என்னை ஒத்ததாகவே இருந்தது. என்னோடு பனையும் வளர்ந்து, சில ஆண்டுகளில் நெடுமரமாக.. இளைஞியாகிவிட்டது.
ஒற்றைப் பனைமரம் அந்த கிராமத்தில் முதன்முறையாக ஒரு வீட்டில் வளர்ந்து காய்த்து நின்ற அதிசயமும் நடந்தது.
அந்த பனைமரத்தின் ஒய்யாரமும், சலசலப்பும் என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்யும். அதனுடனான எனது பரிச்சயம் எனது பாட்டியின் மரணத்துடன் முடிவுக்கு வந்தது.
தனது ஒரே மகனை அந்த ஒற்றைப் பனைமரத்துடன் ஒப்பிட்டு புலம்பிவந்த எனது பாட்டியின் ஆசையை எனது தந்தை புரிந்து கொள்ளவில்லை. அதனால்தான், அந்த குக்கிராமத்து வீட்டை சொற்ப விலைக்கு விற்றுவிட்டார். அந்நிலையில் மீண்டும் அந்த வீட்டையும் பனை மரத்தையும் பார்க்க நான் சென்றிருந்தேன். வானளாவி கம்பீரமாக வளர்ந்து நூங்குகளாக பனைமரம் காய்த்திருந்தது. அதன் பிறகு நான் மேற்கொண்ட பயணத்தில் அந்தப் பனைமரம் கொல்லப்பட்டிருந்தது ஒரு சோகமான வரலாறு.
எனது இளம் பிராயம்தொட்டு பனைமரத்துடன் எனக்கிருந்த தொடர்பு மீண்டும் வடசென்னை காட்டுப்பள்ளி வனத்துக்கு நான் ஒளிப்படங்கள் எடுக்கவும், காட்டுயிரி ஆய்வுக்காக செல்லும்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
நூற்றுக் கணக்கான பனைமரங்களும், சவுக்கும், முந்திரியும் அடர்ந்த காடு அது.
அனல் மின்சாரம் என்ற பெயரில் பல ஏக்கர் வனங்கள் கையகப்படுத்தப்பட்டு https://www.youtube.com/watch?v=1NrfuRgf8wg அழிக்கப்படும் வேளையில்தான் எனது மாடி தோட்டத்தில் குமாருடன் அந்த சந்திப்பு நடந்தது. ஒரு லட்சம் பனை விதை நடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
ஏற்கனவே நமது நாட்டின் பாரம்பர்ய வேளாண்முறைகள் பக்கம் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த https://www.youtube.com/watch?v=JtvoDYT_KH4&t=15s எனது கவனமும் தீவிரமானது. இதற்காக நான் எடுத்துக் கொண்ட சிரத்தைகள் பலருக்கு வேலையற்றவனாக என்னைக் காட்ட எனக்குக் கிடைத்த ஒரே துணை குமாரின் உதவிகளோடு, Pasumai Kudaram பசுமைக் கூடாரம் https://www.facebook.com/Pasumai-Kudaram-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-1820117441612952/?ref=br_tf மூலமாக ஆக்கப் பூர்வமான பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Sunday, August 10, 2014
Thursday, April 10, 2014
Tuesday, April 8, 2014
Friday, April 4, 2014
Thursday, March 27, 2014
Monday, March 24, 2014
Saturday, March 22, 2014
Thursday, March 20, 2014
Saturday, March 15, 2014
Tuesday, March 4, 2014
Saturday, February 15, 2014
Saturday, February 8, 2014
விழிகள்: 'குப்பைக் கிளறும் கொக்குகள்!'
குத்துஒக்க சீர்த்த இடத்து’
அதாவது காலத்தை எதிர்பார்க்க வேண்டிய பருவத்தில் கொக்கைப் போலக் காத்து இருந்து காலம் வாய்த்தபோது கொக்கு மீனை குத்தினாற் போலத் தவறாமல் செய்ய வேண்டிய செயலைச் செய்து முடிக்க வேண்டும்!' என்கிறார் வள்ளுவர். (காலம் அறிதல்:490)
இத்தகைய கொக்குகளின் நிலை இன்று சொல்லிக் கொள்வதாய் இல்லை.
ஒருகாலத்தில் ஜனசந்தடியற்ற வயல்வரப்பு, குளம், குட்டைகளில் தங்கள் வாழ்வாதாரத்தைக் தேடிக் கொண்ட கொக்குகள் அதற்கு அடுத்ததாய் பெருகி வரும் சூழல் மாசுக்களால் தங்கள் வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள நவீன மனிதர்களின் அத்தனை முன்னேற்ற சாதனங்களையும் பழக்கப்படுத்திக் கொண்டன.
தற்போதோ பெருகிவரும் தொழிற்சாலைகளின் விளைவாக நீர் மாசு பட்டதால் கொக்குகளின் உணவு அரிதாகிவருகிறது.
கொக்குகள் குப்பைகளைக் கிளறுகின்றன என்றால் நம்புவீர்களா?
நம்பிதான் ஆக வேண்டும் இதோ சாட்சி.
சென்னை, எண்ணூர் கடற்கரை சாலையில் சத்தியவாணி முத்து நகரை ஒட்டி கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை கிளறும் கொக்குகள் இதோ!
காடுகளைத் தாண்டி யானைகள் வருவது ஆபத்துதான்! வனங்களை விட்டு புலிகள் போன்ற கொடிய விலங்குள் எல்லைகளைத் தாண்டக் கூடாதுதான்!
ஆனால் படி தாண்டலுக்கு விலங்குகள் மட்டுமா காரணம்? வனங்களை பிடுங்கிக் கொண்டால் வனவாசம் போக விலங்குகளுக்கு இடம் ஏது?
இனி கொக்குகள்கூட வீடுகளை நோக்கி படையெடுக்கலாம் எச்சரிக்கை!
படங்கள்: இக்வான் அமீர்
காணொளிக்கு:
http://www.youtube.com/watch?v=yVVIsYEFAWQ&feature=youtu.be

















