“மக்கள்
எங்கள் மீது வைத்திருக்கும் அதீதமான நம்பிக்கையின் வெளிப்பாடுதான் தேர்தல் வெற்றிகள்
மூலம் எங்கள் மீது சுமத்தியிருக்கும் பொறுப்புகள். மக்களின் ஒத்துழைப்பைக் கொண்டு மக்களுக்கு
நாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றியாக வேண்டும். இதில் எங்களது
முக்கிய குறிக்கோள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகும்!”- இப்படி சொன்னது
யார் தெரியுமா?
ஐந்தாவது
முறையாக திரிப்புரா தேர்தல்களில் வெற்றிவாகைச் சூடி, முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட
இடதுசாரி இயக்கத்து மூத்த தலைவர் மணிக் சர்க்கார்தான்!
திரிபுரா
சட்டமன்றத்தின் மொத்த 60 தொகுதிகளில் இடதுசாரி கூட்டணி 50 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தேர்தல்
பிரச்சாரத்தின் போது, ‘இந்தியா டுடே’யின் துணை ஆசிரியர் ‘கௌஸிக் தேகா’ மணிக் சர்க்காரை
பிரத்யேகமாக பேட்டிக் கண்டார். அவர் கேட்ட ஒரு கேள்வி வித்யாசமானது. அதற்கான பதிலும்
சிந்திக்க வைப்பது.
இதோ
அந்த கேள்வியும் – பதிலும்:
?கேள்வி: “தேர்தல் பிரச்சாரத்தின் போது, நீங்கள்
உங்கள் அரசின் சாதனைகளைச் சொல்லாமல் காங்கிரஸை கடுமையாக விமர்சித்து பேசுவது ஏன்?”
!பதில்: “எனது மக்கள் எனது அரசு அவர்களுக்கு என்ன
செய்தது என்று நன்றாகவே அறிவார்கள். அதை நான் ‘சுயதம்பட்டம் அடித்துக் கொள்ள வேண்டிய
அவசியமே இல்லை. ஆனால், இளைய தலைமுறைக்கு ‘காங்கிரஸ் தங்கள் மாநிலத்துக்கு செய்தது என்ன?’
- என்று வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய முக்கிய பொறுப்பு உள்ளது .... “
நான்காவது
முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட மணிக் சர்க்கார் குறித்து சில முக்கியத் தகவல்களைத்
தெரிந்து கொள்ள வேண்டியது இந்திய இளந்தலைமுறையினர் மீதுள்ள பொறுப்பாகும். நமது நாட்டில்
இன்னும் ஆதர்ஷ புருஷர்களாக சில தலைவர்கள் வாழ்கிறார்கள்
என்று ஜனநாயக அமைப்பை பலப்படுத்தி நம்பிக்கைத் தரும் தகவல்கள் அவை:
- இந்தியாவின் மிக ஏழையான.. அதேநேரத்தில் மிகத் தூய்மையான தலைவர் மணிக் சர்க்கார்.
- மாநிலத்து முதல்வராக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பவர்.
- இவருக்கு சொந்தமாக ஒரு வீடுகூட இல்லை.
- மணிக் சர்க்காரின் வங்கி இருப்பு வெறும் ரூபாய் 6,500 மட்டும்தான்!
- முதல்வர் பொறுப்புக்கான ஊதியம் முழுவதையும் கட்சிக்கான நன்கொடையாக கொடுத்துவிடுகிறார். கட்சி தரும் குறைந்த பட்ச உதவித் தொகையான ரூபாய் 5,000 பெற்றுக் கொள்கிறார்.
- மணிக் சர்க்காரின் இல்லத்தரசி அரசு வாகனத்தை ஒருநாளும் பயன்படுத்துவதில்லை. ரிக்ஷாவில் எந்தவிதமான ‘பந்தா’வும் இல்லாமல் சர்வசாதாரணமாக பயணிப்பதை ‘அகர்தலா’வாசிகள் நன்கறிவார்கள்.
- மணிக் சர்க்காரின் பரம அரசியல் எதிரிகளும் அவரது தூய்மையையும், எளிமையையும் மனம் விட்டு பாராட்டுகிறார்கள்.
மணிக்
சர்க்காருக்கு கம்பீரமான ஒரு ‘சல்வியுட்’ அடித்த கையோடு அவரவர் மாநிலத்து முதல்வர்களோடு
ஒப்பிட்டு பார்த்துக் கொண்டால் ஒரு மாற்றத்துக்கான வழி பிறப்பதாக இருக்கும்.
பிரதமராக வருவதற்கு தகுதியானவர்
ReplyDeletehi voters!.. please compare this person with nara modi and rahul gandhi
ReplyDelete