கொஞ்ச நாளைக்கு முன்பு எனது அலுவலகத்திற்கு டிசைன் செய்ய இருவர்
வந்தார்கள். போட்டோவை எல்லாம் கொடுத்தார்கள். நான் அதை ஆல்டர்
பண்ணிக்கிட்டு இருந்தேன்.
அதில் ஒரு போட்டோல இருந்தவர் மட்டும்
பார்ப்பதற்கு இசுலாமியர் போல் இருந்தார். ஆனால் அவரும் இந்து தான்.
அதைப் பார்த்த ஒருவர், "என்னடா... முஸ்லிம்
மாதிரி... தீவிரவாதி மாதிரி இருக்கான்!"- என்றார்.
அவரிடம் நான் விவாதித்து
இருப்பேன். என்னோடு வேலை பார்க்கும் என் இசுலாமியர் நண்பரின் முகத்தை
பார்த்தேன். எந்த சலனமும் இன்றி வேலை செய்து கொண்டு இருந்தார்.
என் நண்பரை
சங்கடப்படுத்த விரும்பாமல் நானும் அமைதியாகி விட்டேன். அந்த சம்பவம்
இன்றுவரை என் நெஞ்சை அறுத்துக் கொண்டே இருக்கிறது...
அப்போது என் மனதிற்குள் தோன்றியது " இவர் தீவிரவாதிகளை நேரில் பார்த்திருக்க மாட்டார், அவர்களோடு பேசியிருக்க மாட்டார், அவர்களின் குணாதிசயம் என்ன என்பதும் இவருக்கு தெரியாது. அதுபோலவே முஸ்லிம்களோடும் பழகி இருக்கமாட்டார், முஸ்லிம்களின் எண்ணம், சிந்தனை, நேயம் இவை எதுவும் இவருக்கு தெரியாது. ஆனால் முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்ற நம்பிக்கை அதாவது பொதுப்புத்தி மட்டும் அசைக்க முடியாமல் இருக்கிறது!"
அவரது எண்ணத்திற்கு அடிப்படை காரணம்,
அப்போது என் மனதிற்குள் தோன்றியது " இவர் தீவிரவாதிகளை நேரில் பார்த்திருக்க மாட்டார், அவர்களோடு பேசியிருக்க மாட்டார், அவர்களின் குணாதிசயம் என்ன என்பதும் இவருக்கு தெரியாது. அதுபோலவே முஸ்லிம்களோடும் பழகி இருக்கமாட்டார், முஸ்லிம்களின் எண்ணம், சிந்தனை, நேயம் இவை எதுவும் இவருக்கு தெரியாது. ஆனால் முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்ற நம்பிக்கை அதாவது பொதுப்புத்தி மட்டும் அசைக்க முடியாமல் இருக்கிறது!"
அவரது எண்ணத்திற்கு அடிப்படை காரணம்,
- எல்லோரும் சொல்கிறார்கள்,
- எல்லோரும் நம்புகிறார்கள்
- நாமும் சொல்வோம்,
- நாமும் நம்புவோம்
- என்ற பொதுப்புத்தி தானே...?
இந்த
பொதுப்புத்தியை மாற்ற என் சகோதரர்களாகிய இசுலாமியர்களிடம் என்ன திட்டம்
இருக்கிறது?
இந்த பொதுப்புத்தி உங்களை வாழவிடாமல் சீரழிக்கிறது என்பதை
உணருகிறீர்களா?
உணர்ந்து கொண்டால் மட்டும் போதுமா??
என்ன செய்யப்
போகிறீர்கள்???
மாற்று சிந்தனையை உருவாக்குங்கள்; உங்களோடு பயணிக்க எம்
போன்றவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடு....!
- அங்கனூர் தமிழன் வேலு
- அங்கனூர் தமிழன் வேலு
அருமையான பதிவு நண்பரே மதவெறிகளை நீக்கிவிட்டு சமத்துவமாய் பழகினால்தான் இதற்கு முடிவுகட்டமுடியும் நன்றி...
ReplyDeleteதிரு வேலு அவர்களே
ReplyDeleteமுதலாவதாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக நீங்கள் எழுப்பியுள்ள குரலுக்கு மிக்க நன்றி. என்னுடைய கருத்தானது இது போன்ற தவறான கருத்துக்கள் பரவ மீடியா ஒரு முக்கிய காரணமாகும். உண்மையான புள்ளி விவரங்களை எடுத்து வைப்பதன் மூலமும் , தர்க்க ரீதியான வாதங்களின் மூலமும் இவர்களுக்கு உண்மையை எடுத்து சொல்லலாம் . முதலில் பத்திரிக்கைகளில் வருவது பாதிக்கு பாதி பொய் என்பதை எடுதுக்கட்டுகளின் மூலம் எடுத்துரைக்க வேண்டும். உதாரணம் பின் வருமாறு :
தீவிரவாதிகளுக்கு எல்லாம் தாடி இருக்கும் என்றால் , கீழே குறிப்பிடப்பட்டுள்ள தீவிரவாதிகளுக்கு ஏன் தாடி இல்லை என்று வினவ வேண்டும்.
http://www.vinavu.com/2010/08/17/hindu-terrorist/
இந்த செய்திகளை மீடியா ஏன் அடக்கி வாசிக்கிறது என்ற கேள்வி எழுப்ப வேண்டும். இந்த குற்றங்களுக்கு முதலில் முஸ்லிம்களின் மீது தான் பழி போடப்பட்டது என்பதை புரிய வைக்க வேண்டும்.
இதைப் போல இன்னும் எத்தனையோ உத்தரனங்களை திரட்டி அவர்களுக்கு விளக்கினால் தன ஓரளவு விழிப்புணர்வு ஏற்படும். (இன்ஷா அல்லாஹ் )
ReplyDeleteMuslims should communicate with the rest of the society.They should convey their ideology and aim to the main stream.At the same time they should have the patience to explain, if someone criticized them or their philosophy. Up to my knowledge, lake of this only they have to face all those things
ReplyDeleteமிகவும் அருமை தோழரே உங்களை போன்ற நல் உளங்கள் எங்களோடு இருக்கும் வரை எந்த ஒரு மதவாத சக்தியும் ஒன்றும் செய்துவிட முடியாது.
ReplyDelete