NewsBlog

Saturday, April 13, 2013

உடல் நலம்: 'உணவுக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன?'



“உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு!” – என்பார்கள். ஆனால், உணவு உண்ட உடன் தூங்குவது உடல் நலத்துக்கு நல்லதல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மருத்துவ ரீதியாகப் பார்த்தால், சாப்பிட்ட உடனே, அந்த உணவு செரிப்பதற்கு தேவையான சக்தியைக் கொடுக்க வயிற்றுப்பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாயும். இதனால், மூளை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்களுக்கு சென்ற ரத்தத்தின் அளவு குறையும். அதனாலேயே ஒருவித மயக்கம் ஏற்படுகிறது. இதுதான் உண்மை!

சரி உணவு உண்ட பிறகு செய்ய வேண்டியது என்ன?

இதோ ஒரு எளிய பட்டியல்:

உணவு உட்கொண்ட உடனேயே பழங்கள் சாப்பிடாமல் ஒரு மணி  நேரம் கழித்துதான் சாப்பிட வேண்டும்.

சாப்பிட்டவுடன் புகைப்பது கூடாது. இது மிகவும் ஆபத்தானது என்பது ஆய்வுகள் நிருபிக்கின்றன. இதனால் புற்றுநோய்கள் வரும் ஆபத்துக்கள் உண்டு.

உணவுக்குப் பின் தேனீர் அருந்துவது செரிமானம் தரும் என்று சிலர் அப்படி செய்வது நல்லதல்ல. தேனீரில் அதிகளவு அமிலச்சத்து உள்ளது. இது உட்கொண்ட உணவின் புரோட்டீன் பொருட்களை இறுகச் செய்து விடும். இதன் விளைவாக உணவு எளிதில் செரிமானம் ஆகாமல் போய்விடும்.

உண்டவுடன் சிற்றுறக்கம் கொள்வது வாயுத் தொல்லை உள்பட பல உடல் உபாதைகளுக்கு காரணமாகிவிடும்.

சிலர் உணவு உண்டபின் இடுப்பு பெல்ட்டை தளர்த்தி விடுவார்கள்.. இப்படிச் செய்தால் குடல் சிக்கல் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உணவுக்குப் பிறகு, குளிப்பவர்களும் உண்டு.  இது உணவுப் பொருள் செரிமானம் ஆக தேவையான ரத்த ஓட்டம் கிடைக்காமல் செய்துவிடும்.

அதேபோல, உணவுக்குப் பிறகு சிறிது தூரம் காலாற நடக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அதுவும் சரியான பழக்கமல்ல என்கிறது நவீன அறிவியல். இதனால், நாம் உண்ணும் பொருட்களில் உள்ள சத்துகள் நமது உடலுக்கு முழுமையாகக் கிடைக்காது.

சரி.. சாப்பிட்ட பிறகு என்னதான் செய்வது? கொஞ்ச நேரம் அமைதியாக அமர்ந்திருக்கலாம். வாய்ப்பிருந்தால் நல்லவற்றை தொலைக்காட்சியில் பார்க்கலாம். நல்ல நூல்களை வாசிக்கலாம். குறைந்த பட்சம் மனைவி மக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கலாம்.

0 comments:

Post a Comment