NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Showing posts with label ஓஹோ.. பேஷ்.. பேஷ்... Show all posts
Showing posts with label ஓஹோ.. பேஷ்.. பேஷ்... Show all posts

Thursday, April 3, 2014

ஓஹோ.. பேஷ்.. பேஷ்: 'சில நேரங்களில் சில முடிவுகள்'


"விரும்பிய தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்குச் சென்றுவிட்டதால் தேர்தலில் போட்டியிடும் சூழல் உருவாகவில்லை!" - என்று பாஜக தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் புதன் அன்று கூறியது:

"தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு உரிய வாய்ப்புகளை பாஜக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. 5 கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததால், நாங்கள் விரும்பிய தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்குச் சென்றுவிட்டன. அதனால்தான், நான் தேர்தலில் போட்டியிடவில்லை. சில நேரங்களில் இது போல அமைந்துவிடுவது சகஜமானது!"

Saturday, October 19, 2013

ஓஹோ.. பேஷ்.. பேஷ்: 'இனி இந்தியா குஜராத்தான்!

"நாட்டின் எதிர்கால நம்பிக்கையாகத் திகழ்வது குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான்!" - என்று மூத்த பத்திரிகையாளர் சோ கூறினார்.

ஓஹோ..! பேஷ்.. பேஷ்... நாடெல்லாம் குஜராத் கலவரங்கள் உருவெடுக்கும் என்று சோ எச்சரிக்கிறாரா?


Saturday, October 12, 2013

ஓஹோ.. பேஷ்.. பேஷ்:'கனவு காணுங்கள் மலாலா!'


கனவு காணுங்கள் மலாலா!
பாகிஸ்தான் பிரதமராக அல்ல
அமெரிக்க அதிபராக!

ஏகாத்பத்தியத்தின் 
சமநிலை ஆகி..
உலகின் பல்லாயிரம்
நிஜ மலாலாக்களின் 
கனவுகளைச் சிதைத்து
பிணங்கள் மீது
அரியணை அமைக்கலாம்
அதுதான்!