சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!
இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.
சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.
வடசென்னையில் சூரிய கிரணம்
21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.
காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?
சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.
டிராகன் பழச் செடியை கவாத்து செய்வது எப்படி?
How To Prune Dragon Fruit ....
Tuesday, October 6, 2020
தற்சார்பு என்பது இதுதான்!
வாய்ப்பில்லை ராசா.. வாய்ப்பில்லை!
'''''''''''''''''''''''''''''''''''''''''
நான் மஞ்சள் விவசாயி அல்ல.
இருந்தாலும் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
பெரியது ஹைபிரிட் ரகம். நாட்டுரகம் சின்னதாகத்தான் இருக்கும்.
பிசு பிசுனு இருக்குங்கறீங்க.! பின்னே, அதிலுள்ள நீர்சத்து எங்க போகும்.?!
தை-மாசில இருந்து அறுவடை ரெண்டு மூணு மாசம் மட்டுமே நடக்கும்.
விதைக்காக நிழல்ல ஒரு அம்பது நாள் வெச்சிருக்கலாம்.
அப்பவே முளைப்பு வந்துரும்.
வருஷம் 365 நாளும் பச்சை மஞ்சள் வேணும்னா சீதோஷ்ணநிலைக்கு தகுந்தமாதிரி தானே விளையும்.!? அதுபோக நிலஅமைப்பு மண்ணுக்கு மண். அதிலுள்ள சத்துக்களுக்கு தகுந்தபடிதான் விளைச்சல் இருக்கும்.
மஞ்சள்தூள் அரைக்கறவங்களுக்கு பொடி மஞ்சள். பெரிய மஞ்சள் வேறுபாடெல்லாம் இல்லை. பெரிச விட பொடிதான் சீக்கிரம் அரைபடும்.
பசு மஞ்சளை வேகவைத்து பங்குனி சித்திரை வெயிலிலேயே முப்பது நாட்கள் போல் கடும் வெயிலில் காயவைத்து கைகளால் உடைக்க முடியாத அளவு கெட்டியான பின்தான் மூட்டை பிடிப்பார்கள்!
கிலோ 90 ரூபான்னு விலை சொல்றாங்கனு சொல்றீங்க.
பல்க்கா ஒரு ஏக்கர் மஞ்சளையும் எடுத்துகிட்டா 15 ரூபாக்கே கொடுப்பாங்க!
வாங்கறது ஒருகிலோ ரெண்டுகிலோ. அதுக்கு தினம் கொஞ்சமா அறுவடை செஞ்சு கொரியருக்கு பேக் பண்ற வேலையெல்லாம் விவசாயிக்கு சாத்தியமில்லாதது! இன்று பெண் வேலையாட்கள் கூலி தினம் 300 ரூபாய். நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் யாரும் இப்ப வேலை செய்யறதே இல்லை.!
நீர்சத்து குறைஞ்சா மஞ்சள் சுருங்கத்தானே செய்யும்.!
யோசிங்க.ப்ளீஸ்.
நுகர்வோர் காசை வாங்கி எந்த விவசாயியும் ஏமாத்தி கடனை கட்டப் போறதில்லை. கோடீஸ்வரனும் ஆகப்போறதில்லை!
முப்பது ‘குரோ பேக்’ வாங்கி சித்திரை வைகாசில ஒவ்வொரு பேக்லேயும் ஒரு விதைமஞ்சள் ஊணி வைங்க. ஒரு வருஷம் அதுக்கு வேலை செய்ங்க. உங்க உழைப்புக்கான கூலிய போடுங்க. மஞ்சள் விளைவிக்கறதுல உள்ள பிரச்சனைய பாருங்க.
அப்படி விளைந்ததை மாதத்திற்கு இரண்டு பைகளாக அறுவடை செய்து ப்ரெஷ்ஷா சாப்பிடுங்க. ஆரோக்கியமா இருங்க!
வேளாண் மசோதா நிறைவேறி கார்ப்பரேட் மரபணு மாற்றிய மஞ்சள் கொடுப்பான். நாங்களும் ஒரே சைஸ்ல விளைய வெச்சு குடுப்போம்.
அப்பவும் உங்களுக்கு நேரடியா கொடுக்கமுடியாது.
அவனுக்கு 50 ரூபாய்க்கு விப்போம். அவன் இந்தக் கமெண்ட்டையெல்லாம் படிச்சுப்பாத்துட்டு முகம் சுருங்காம இருக்க பண்ணும் (மேக்அப்) வைத்தியத்தையெல்லாம் மஞ்சள்ல ஏத்தி கிலோ 500 ரூபாய்னு விப்பான்.
நீங்களும் ‘குர்குமின்’ 6% இருக்குதுன்னு கேள்வியே கேக்காம வாங்கி சாப்பிடுவீங்க. ஆறாவது மாசமே கேன்சர் வரும்!
தயவுசெய்து யாரும் தவறாக நினைக்கவேண்டாம். இதுனாலேயேதான் நான் எந்தப் பொருளும் தற்போது விற்பதில்லைங்க.
இவ்ளோ பெரிய விளக்கம் உங்களுக்கு புரியற மாதிரி சொல்ல என்னால முடியுது. ஒரு மணிநேரம் அவுட். அதுக்குள்ள அஞ்சுதடவை போனை வெச்சுட்டு போய்வேலைய பாத்துட்டு வந்தேன்.
எல்லோருக்கும் அது சாத்தியமுமில்லை. நேரமுமிருக்காதுங்க.!
Dry ஆன பொருளா இருந்தா கெட்டுப்போகாது.
பச்சையான பொருள்களெல்லாம் அழுகறது. பூசணம் பிடிப்பதுனு எல்லா பிரச்சனையும் இருக்கும்!
சகவிவசாயியா விவசாயத்துல இருக்கற அதை மார்க்கெட்டிங் பண்றதுல இருக்கற சிக்கலை சொன்னேன்!
இதுக்கும் மேல மாடு-கன்னு பிரச்சனை. மோட்டார் பிரச்சனை. அதுக்கு சரிபண்ண ஆட்கள் கிடைக்காமனு ஒவ்வொரு நாளும் விவசாயிகள் சந்திக்கிற பிரச்சனைகள் ஏராளம்.
ப்ளீஸ் புரிஞ்சுக்குங்க எல்லோரும்!
கட்டுபடியே ஆகாத விலையில் போடற முதலீட்டை எடுக்க முடியாத நிலையிலும் இன்னும் விவசாயம் செய்யறவங்க நல்லாருக்கணும்னு வேண்டிக்குங்க.
ஏன்னா இன்றுவரை விவசாயத்தில் நீடிப்பதே பெரும் சாதனையாத்தான் நினைக்கிறோம். ஏதோ ஒரு 5% பேர் பணக்கார விவசாயிகளா இருக்கலாம். எல்லோரும் அப்படி அல்ல. பணக்காரனா இருக்கறவன் இந்த நோண்டு வேலையெல்லாம் செய்யமாட்டான்.
அத்தனை ரசாயன மருந்தையும் ஊத்தி விளையவைப்பான். வேகவைப்பான். மூட்டை போட்டு குடோன்ல ஸ்டாக் வெச்சு மாதம் ஒருமுறை செல்பாஸ் வெச்சு விலையேறும் வரை பத்து வருஷமானாலும் ஸ்டாக் வெச்சிருந்து வித்துட்டு போயிருவாங்க.
அவங்க பார்வைல அறம் வழுவாம இருக்கணும்னு இயற்கையை விவசாயம் செய்யறவங்க எல்லாம் பொழைக்கத் தெரியாத லூசுக.
விவசாயம் மட்டுமே செய்பவர்கள் இப்பவும் காட்டை வித்துதான் கடன் கட்டறோம்..!
பூமாரி. ஹெர்பீ இவங்கெல்லாம் யாருன்னே எனக்குத்தெரியாது.
திருமூர்த்தியும் அல்லி அக்காவையும் வேணா தெரியும்.
கார்ப்பரேட் ஆசுபத்திரில. மால்ல நகைக்கடைல ஜவுளிக்கடைல.. வாழ்வியலுக்கு பத்துகாசு பிரயோனம் இல்லாத தற்கால கல்விக்கூடங்களுக்கு லட்சலட்சமா செலவழிப்பீங்க!
ஆனா, ஆரோக்கியத்துக்கு செலவழிக்க இத்தனை கணக்கா.?!
அங்கங்க இருக்கற விவசாயிகளை தத்தெடுத்துகிட்டு உங்க தேவைகளை சொல்லி விளைய வெச்சு சாப்பிட்டு ஆரோக்கியமா இருங்க.!
உங்களுக்காவது இந்தவாய்ப்பு கிடைச்சிருக்கு பயன் படுத்திக்குங்க.
உங்க வாரிசுகளுக்கு நோ சான்ஸ்.!
ஆமாம்.. வாய்ப்பில்லை ராசா..! வாய்ப்பேயில்லை!!
(நன்றி: Parimala Devi - https://www.facebook.com/parimala.devi.7777)
Monday, September 28, 2020
கொரோனா வைரஸ் சானிடைசர் தரமானதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி?
மெத்தைல் ஆல்கஹால் போன்ற நச்சுத்தன்மை மிக்க பொருட்கள் கொரோனாவுக்கு பயன்படும் கிருமி நாசினியில் கலக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நல்ல சானிடைசரை கண்டுபிடிக்கும் எளிய வழியை, அழகியல் தோல் சிகிச்சை நிபுணரான டாக்டர் ரின்கி கபூர் தெரிவிக்கிறார்.
"ஒரு கிருமிநாசினி பயன்பாட்டுக்கு பொருத்தமானதா இல்லையா என்பதை நீங்களே கண்டுபிடிக்கலாம். இதற்கு ஒரு ஸ்பூன் கோதுமை மாவு எடுத்து, அதில் கிருமிநாசினியை சேர்க்க வேண்டும். மாவு ஒட்டும் தன்மைக்கு மாறினால், அந்தக் கிருமிநாசினி நல்லதல்ல. மாவு உலர்வாகவே இருந்தால், கிருமிநாசினி பயன்பாட்டுக்கு பொருத்தமானது'' என்று தெரிவிக்கிறார் டாக்டர் கபூர்.
(ஆதாரம்: பிபிசி)
Saturday, January 17, 2015
செங்காந்தல் - கார்த்திகைப்பூ
![]() |
| படம்: இக்வான் அமீர். இடம்: சென்னை - எண்ணூர், காட்டுப்பள்ளி |
Sunday, September 21, 2014
வீட்டுக்கொரு பப்பாளி வளர்ப்போம்! இலவச மருந்தகம் அமைப்போம்!!
ஆம்… பப்பாளி ஒரு சிறந்த மலமிளக்கி! மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பெரும் பகுதி வயிற்றுப் பிரச்சனைகளுக்கான அருமருந்து.
முழுமையாய் வாசிக்க: http://goo.gl/EV4rmA
Wednesday, December 4, 2013
உடல் நலம்: 'நீரழிவு நோய்க்கு எளிய மருத்துவம்'
- வரக்கொத்தமல்லி (தனியா) அரை கிலோவும்
- வெந்தயம் கால் கிலோவும்
Saturday, November 23, 2013
உடல் நலம்: ‘ரத்தபுஷ்டிக்கு’ எளிய வழி...!
"வாப்பா, இம்ரான்! இப்படி வந்து உட்கார்!" - தாத்தா அவன் அமர ஒரு பாயைப் போட்டார்.
மாணிக்கம் தாத்தா நிறையப் படிப்பவர். இயற்கையை நேசிப்பவர். இயற்கை மருத்துவம்கூட நிறைய தெரிந்து வைத்திருப்பவர்.
இம்ரான் சொன்ன எல்லாவற்றையும் கேட்ட தாத்தா சொன்ன எல்லோருக்குமான மருத்துவ அறிவுரைதான் இது:
"நமது உடலில் ஹீமோகுளோபின் குறைச்சலால்தான் இந்த சோம்பல், களைப்பு எல்லாம் ஏற்படுகின்றன.
நாம் உண்ணும் உணவிலிருந்து நமது உடல், தனக்குத் தேவையான சத்துக்களை எந்தெந்த அளவு தேவையோ அந்தளவுகளை பிரித்து எடுத்துக் கொள்கிறது. மீதியை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்ணும் போதும் இதே நிலைதான்; தேவைக்கு அதிகமான சத்துக்களை நமது உடல் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை.
நமது உடலில் நிகழும் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் செல்லும் ரத்தம் நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ஏற்று உற்சாகம் பெறுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ஏற்று, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
நம் உடலில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரத்த சுழற்சி இது.
சரி..! உடலில் ஹீமோகுளோபின் குறைந்துவிட்டால் அதிகரிப்பது எப்படி?
ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது.
உலர் திராட்சைப் பழங்களை வாங்கி மூன்று பழங்களை ஒரு டம்ளரில் போட்டு நீர் ஊற்றுங்கள். இரவு முழுவதும் பழங்கள் நீரில் ஊற வையுங்கள். இப்போது மூன்று வேளைக்கான இயற்கை மருந்து தயார்!
கீழே உள்ள பட்டியலில் உள்ளபடி நாள்தோறும் காலை 6மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி என்று பழங்களையும், நீரையும் பயன்படுத்துங்கள்:
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஹீமோகுளோபின்களை மேற்கண்ட எளிய இயற்கையான மருத்துவத்தால் எந்தவிதமான பக்கவிளைவும் இல்லாமல் குறைந்த செலவில் அதிகரித்துக் கொள்ள முடியும்!" - என்று முடித்தார் மாணிக்கம் தாத்தா.
இம்ரானும் தாத்தாவுக்கு நன்றி சொல்லிவிட்டு நாட்டு மருந்துகடை நோக்கி எழுந்து சென்றான்.
Thursday, October 17, 2013
Sunday, June 2, 2013
உடல் நலம்: 'காக்க.. காக்க.. கல்லீரல் காக்க!'
நாம் அன்றாடம் பருகும் தண்ணீர், உட்கொள்ளும் பல்வேறு உணவுப் பொருட்கள், 100 சதவீதம் சுத்தமானது என, சொல்ல முடியாது. இவற்றில் கலந்துள்ள வேதிப்பொருட்கள், நாட்கணக்கில் உடம்பில் சேர்ந்தால், அவை நஞ்சாக மாறி, உடலுக்கு ஊறு விளைக்கும் அபாயம் உள்ளது. இந்த அபாயத்தை தவிர்க்கும் பணியை, கல்லீரல் மேற்கொண்டு வருகிறது.
- மது பழக்கம், வெறும் வயிற்றில் மது அருந்துவது,
- உடம்பில் அளவிற்கு அதிகமாக சேரும் கொழுப்புச் சத்து,
- உடல் பருமன்,
- உயர் ரத்த அழுத்தம்,
- நீரிழிவு நோய், "ஹெப்படைட்டிஸ் பி’ வைரஸ் தாக்கம்
- தினமும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்வது,
- சத்தான உணவுகளை தேவையான அளவு உட்கொள்வது,
- மதுப் பழக்கத்தை தவிர்ப்பது,
- "ஹெப்படைட்டிஸ் பி’ தடுப்பூசி போட்டுக் கொள்வது
Saturday, April 20, 2013
உடல் நலம்: 'இனி முகம் சிவக்க.. கண் கலங்க வேண்டாம்!'
Saturday, April 13, 2013
உடல் நலம்: 'உணவுக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன?'
“உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு!” – என்பார்கள். ஆனால், உணவு உண்ட உடன் தூங்குவது உடல் நலத்துக்கு நல்லதல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள்.




























