NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Showing posts with label உலகம் சுற்றும் பாமரன். Show all posts
Showing posts with label உலகம் சுற்றும் பாமரன். Show all posts

Friday, September 25, 2020

இந்த நல்லவரும், அந்த கெட்டவரும்



ஒரு அரிய நிகழ்வு அது. 12 ஆண்டுகளில் முதன்முறையாக நடந்த ஒரு துரதிஷ்டவசமான சம்பவம்.

இருப்பினும் அந்நாட்டு அதிபர் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறார். பாதிக்கப்பட்ட வெளிநாட்டு அதிபருக்கு கடிதம் எழுதி மன்னிப்பும் கேட்கிறார். அவமானகரமான சம்பவம் அது. மக்களை ஏமாற்றமடைய செய்த சம்பவம் என்றெல்லாம் மனம் நொந்து வருந்துகிறார் ‘பெத்தண்ணா’ அமெரிக்காவுக்கே சவால் விடும் அந்த மனிதர்.

யார் அவர்? என்ன நடந்தது என்கிறீர்களா?

இப்படி தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னிடம் கடிதம் மூலம் சொல்லி மனம் வருந்தி மன்னிப்பு கேட்டிருக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.  

அவர் மன்னிப்பு கேட்குமளவுக்கு அப்படி என்னதான் நடந்தது?

கொரோனா தொற்று காரணமாக எல்லையை முடக்கியுள்ள வட கொரியா, நோய்த்தொற்று தங்கள் நாட்டுக்குள் வராமல் இருக்க, யார் எல்லைக்குள் நுழைந்தாலும், அவர்களை "சுட்டுக் கொல்ல" உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருநாட்டு எல்லை அருகே ரோந்து கப்பலில் இருந்து காணாமல் போன தங்கள் நாட்டு அதிகாரி, பின்னர் வட கொரிய கடல் பக்கம் கண்டெடுக்கப்பட்டதாக தென் கொரியா கூறியிருந்தது.

வட கொரிய வீரர்கள் அவரை சுட்டு, பின்னர் அவரது உடலின் மீது எண்ணெயை ஊற்றி எரித்துள்ளதாக தென் கொரிய தரப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.

தென் கொரியாவின் மீன்வளத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் வட கொரிய எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் ரோந்து கப்பலில் இருந்து கடந்த திங்கட்கிழமை காணாமல் போனார்.

இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான 47 வயது மதிக்கத்தக்க அந்த அதிகாரி வட கொரியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக நம்பப்படுகிறது.

அவர் கப்பலில் தனது ஷூக்களை விட்டுவிட்டு, உயிர் கவசத்தை எடுத்துச் சென்றுள்ளார்.

பின்னர் வட கொரிய ரோந்து கப்பல் அவரை அவர்களது நாட்டு எல்லைக்குள் மிதக்கும் சாதனத்தை பிடித்தவாறு, கண்டெடுத்தனர்.

வட கொரிய அதிகாரிகளால் அவர் விசாரிக்கப்பட்டு, பின்னர் அவரை சுட்டுத் தள்ளுவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முகக்கவசம் அணிந்த சில வட கொரிய வீரர்கள், அந்த அதிகாரியை எரித்ததாக தென் கொரியா கூறுகிறது. ஆனால், அந்த நபர் வந்த மிதக்கும் சாதனத்தை மட்டுமே எரித்ததாக வட கொரிய தரப்பு கூறியுள்ளது.

இதுதொடர்பாக வட கொரியா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் தென் கொரியா வலியுறுத்தி இருந்த நிலையில், கிம் ஜாங்-உன் எழுதிய இந்த கடிதம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இத்தனைக்கும் கிம் ஜாங் உன் முதலாளித்துவ நாடுகளால் பெரும் வில்லனாக சித்தரிக்கப்படுபவர். உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக சொல்லப்பட்டவர். அத்தகைய கெட்டவர்தான் நடந்த செயல்களுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

ஆனால், இந்த சம்பவத்தை உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்திய நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி சர்க்காருடன் கொஞ்சம் ஒப்பிட்டு பாருங்கள்.

குஜராத் கலவரங்களில் ஆயிரக்கணக்கில் சிறுபான்மை இன மக்கள் தீயிட்டும், கற்பழித்தும் கொல்லப்பட்ட போதும் மனம் கலங்காதிருந்தவர். ஒரு வருத்தமும் தெரிவிக்காதவர். சுற்றிலும் தனது குடிமக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, இனம், மொழி, சமயம் என்று பாகுபாடுகளால் மௌனம் சாதிப்பவர். அந்த பிரிவினையை ஒன்றையே அரசியல் வழிமுறையாக்கியுள்ள சங்பரிவார் திட்டத்திற்கொப்ப மொத்த நாட்டையும் பின்னோக்கி செலுத்தி கொண்டிருப்பவர். இவரைதான் நல்லவர் என்கிறார்கள் சிலர்.

என்னத்த சொல்ல? கேட்டால் 'ஆன்டி-இண்டியன்' என்பார்கள். 
 
(செய்தி ஆதாரம்: பிபிசி)

Wednesday, July 9, 2014

பலஸ்தீனம்: காஸாவின் மீது இஸ்ரேல் கொலைவெறி;100 க்கும் அதிகமான தடவை குண்டுவீசி தாக்குதல்


செவ்வாய் கிழமை அதிகாலை காஸாவின் ரபாஹ், கான் யூனுஸ் போன்ற  நகரங்கள் மீது நூறுக்கும் மேற்பட்ட தடவைகள் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி கொலை வெறித் தாக்குதல் நடத்தின.


  
 
மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 23 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 90 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். குண்டுவீச்சால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாயின.

Thursday, August 29, 2013

உலகம் சுற்றும் பாமரன்: " தருமம் செய்தால்... கம்பி எண்ண வேண்டியதுதான்!"


நமது மக்களவையில் ஏழை – எளியோர்க்கான உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றியிருக்கிற இதேவேளையில், வடக்கு கரோலினாவின் அரசு ஏழை – எளியோர்க்கு உணவளித்தால் கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்று சட்டமியற்றியிருக்கிறது.
வடக்கு கரோலினாவின் ‘டவுன்டவ்ன் ராலி’யில்,  (Downtown Raleigh) வார இறுதியில் பல ஆண்டுகளாக வீடில்லாத ஏழை – எளியோர்க்கு உணவளித்து சேவையாற்றுகிறது ஒரு தொண்டு நிறுவனம். ஏறக்குறைய 70 க்கும் குறையாத ஏழைகளின் பசியாற்றலுக்கு இது உதவுகிறது.
ஆனால், திடுப்பென்று நகர்புறத்து சட்ட பிரிவுகளைச் சுட்டிக் காட்டி காவல்துறை தொண்டு நிறுவனங்களின் சேவைக்கு தடைவிதித்துள்ளது. சட்டங்களை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது. அப்படி சமய உணர்வுகளைப் பாதிக்காமல் தொண்டு செய்ய நினைப்போர் கிராமப்பகுதிகளைத் தேர்வு செய்யும்படியும் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அம்பலப்படுத்தும் இந்த ஏழ்மை நிலையை மூடிமறைக்கவே அரசாங்கத்தின் நடவடிக்கைகள். இன்னும் இதைப்போன்ற ஏராளமான முட்டாள் சட்டங்கள் இருப்பதாக சமூக விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். 

(ஆதாரம்: www.newsobserver.com)


Tuesday, August 6, 2013

உலகம் சுற்றும் பாமரன்: "இனி வலியில்லாமல் தொழலாம்..!"


“மூட்டு வலிக்காரர்கள் இனி வலியில்லாமல் தொழலாம்!” – என்கிறார் ஐம்பது வயதாகும் அத்னான் பியாரிசன். துருக்கியைப் பூர்விகமாகக் கொண்ட ஜெர்மன்வாசியான இவர் மற்றவரைப் போலவே முதுமை மூட்டு வலியால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர். இந்த வேதனையிலிருந்து பிறந்தது ஒரு விடிவு.
ஆம்… இனி மூட்டு வலிக்காரர்கள் வலியில்லாமல் தரையில் நின்று, குனிந்து, சிரம்பணிந்து தொழலாம். இதற்கான பிரத்யேக தொழுகை விரிப்பை வடிவமைத்துள்ளார் அத்னான்.
தோற்றத்தில் சாதாரண தொழுகை விரிப்பைப் போலவே இருக்கிறது. தொழும் போது முக்கியமாக தரையில் உடல் எடையைத் தாங்கும் பாதம், முட்டி மற்றும் முன்னெற்றி ஆகிய இடங்களில் பிரத்யேகமான பஞ்சடைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“ஒரு வகை பிரத்யேகமான பஞ்சால் வடிவமைக்கப்படும் இந்த தொழுகை விரிப்பு ஒருகாலும் சேதமடைவதில்லை!” – என்று தெரிவிக்கும் அத்னான் அதன் கலவையை மட்டும் கேட்டுவிடாதீர்கள்! அது தொழில் ரகசியம்!” – என்கிறார் சிரித்துக் கொண்டே.
2009-இல், காப்புரிமைக்காக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த பிரத்யேக தொழுகை விரிப்பு துருக்கியின் மூன்று நகரங்களிலிருந்து தற்போது தயாரிக்கப்படுகிறது.
“ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் தொழுகை விரிப்புகளை நாங்கள் விற்பனை செய்கிறோம்!” – என்கிறார் 10 வயதிலேயே ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்துவிட்ட அத்னான்.
மூட்டு வலிக்கான இந்த தொழுகை விரிப்பை சிறிய பை வடிவில் மடித்து வைத்துக் கொள்ள முடியும்.இணைய தளம் வழியே பொதுவாக விற்கப்படும் இந்த பிரத்யேக தொழுகை விரிப்புக்கான நேரடி விற்பனை நிலையங்கள் ஜெர்மனி, துருக்கி, குவைத் மற்றும் துபாயில் உள்ளன.
39.50 யூரோ (ரூபாய் 3207.49) இன்னும் சில நாடுகளில் 52 டாலர் (ரூபாய் 3161.78) என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த மூட்டு வலிக்கான தொழுகை விரிப்பு ஆடம்பரம் மற்றும் விளையாட்டுப் பொருட்களின் பட்டியலில் சிங்கபூர் மற்றும் அமெரிக்க நாடுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது.


Thursday, February 7, 2013

தீரா பகை..



வாழ்க்கை முழுவதும் போரிலேயே கழிந்துவிட்டது, காண்ஸ்டாண்டிநோபிளை ஆண்ட இரண்டாம் 'பாஸில்' சக்ரவர்த்திக்கு! 40 ஆண்டுகள் தொடர் போருக்குப் பிறகு, அதன் மீது வெறுப்பு ஏற்பட்டது. 

1014-ஆம், ஆண்டு போரை முடிவுக்குக் கொண்டு வர பல்கேரிய அரசருக்கு சமாதான தூது அனுப்பினார் பாஸில்.

தன்னிடமுள்ள 15,000 பல்கேரிய போர்க் கைதிகளையும் விடுவித்து விடுவதாகவும் அறிவித்தார்.



ஆனால், பல்கேரிய மக்களை கடுமையாய் வெறுத்த இரண்டாம் பாஸில் 15,000 கைதிகளில் 150 பேரைத் தவிர மற்ற கைதிகளின் இரண்டு கண்களையும் குத்தி குருடாக்கினார். 150 பேரின் ஒரு கண் மட்டும் குருடாக்கப்பட்டது. ஒரு கண் பார்வையிழந்த அவர்களது தலைமையில் நூறு நூறு பேர் கொண்ட குழுவாக கைதிகள் பிரிக்கப்பட்டு அணிவகுத்து பல்கேரியாவுக்கு அனுப்பினார்.

சிறையிலிருந்து விடுதலையான கைதிகளை வரவேற்க காத்திருந்த பல்கேரிய மன்னன் சாமுவேல் பார்வையிழந்து தட்டுத்தடுமாறி நடந்து வந்த கைதிகளை கண்டார். அதிர்ச்சியடைந்தார். அடுத்த இரண்டு நாளிலேயே அவர் உயிரிழந்தார்.

பாஸில் சக்கரவர்த்தி படம்: நன்றி-விக்கிபீடியா.