படம்: இக்வான் அமீர். இடம்: சென்னை - எண்ணூர், காட்டுப்பள்ளி |
செங்காந்தல்
அல்லது காந்தல் (Gloriosa, இலங்கை வழக்கு: கார்த்திகைப் பூ) என்பது ஒரு
பேரினம். இது ஐந்து அல்லது ஆறு சிற்றினங்களைக் கொண்டுள்ளது. இது
கோல்ச்சிசாசியியே (Colchicaceae) எனும் தாவர குடும்பத்தைச் சார்ந்தது.
ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வகையினைத் சேர்ந்த இந்த தாவரம், வெப்ப மண்டல
ஆப்ரிக்கா மற்றும் ஆசியா மற்றும் மலேசியா, இலங்கை, இந்தியா, சீனா, மலாக்கா
தீபகற்பம் போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது.
கார்த்திகைத் திங்களில் இந்தத் தாவரம் பூப்பதால் இதற்கு கார்த்திகைப்பூ என்றொரு பெயரும் உண்டு.
செங்காந்தல்
வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து
அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும். அனைத்துப்
பகுதிகளும் கோல்சிசினே (colchicine) எனும் அல்கலோயட்கள் நிறைந்தது. அதனால்
இவற்றை உட்கொண்டால் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் வேர்
மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது. இதன் இலை மற்றும் தண்டு நம்மேல் பட்டால்
தோலில் அரிப்பு உண்டாகும்.
இதன்
வேர்ப்பகுதியான கண்வலிக்கிழங்கு எனும் கிழங்கு வகை மூலிகையானது காந்தள்
மலர்ச் செடியிலிருந்துப் பெறப்படுகிறது. இக்கிழங்கு கலைப்பைக் கிழங்கு,
வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு என்று பல பெயர்களிலும்
அழைக்கப்படுகிறது. இக்கிழங்கில் உள்ள கோல்ச்சிசினும் சூப்பர்பைனும்
மருத்துவக் கூறுகளாகும். இதன் பல்வேறு மருத்துவ பயன்பாடுகள் இந்தியாவில்
இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆப்ரிக்காவிலும் இது
பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு மாநில
மலரான செங்காந்தல் மலர்கள், தற்போது நீலகிரி மாவட்டம் பந்தலுார்
பகுதியிலும் இன்னும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பயிரிடப்பட்டு
பூத்துள்ளது
0 comments:
Post a Comment