பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில் உள்ளது ரஹ்மான் பாபா ‘கபர்ஸ்தான்’. மிகப்பெரிய மண்ணறை வளாகத்தின் பொறுப்பாளராக இருப்பவர் தாஜ் முஹம்மது. அவருக்கு வயது 43. அவரது இரண்டு மகன்களுமே அவருக்கு உதவியாக அவருடன் இதே பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்று தாஜ் முஹம்மதுக்கு வித்யாசமான நாள். ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட புதைக்குழிகளைத் தோண்டியதால், அவரது உடலெங்கும் மணல் படிந்திருந்தது. முகத்தில் வியர்வை முத்து முத்தாய் துளிர்த்திருந்தது. இருண்ட முகத்துடன் பெரும் கவலையுடன் அவர் காட்சியளித்தார்
என்றைக்கும் இல்லாத விதத்தில் அன்றைக்கு அவர் மிகவும் பரபரப்பாக, பதட்டமாகவும் காணப்பட்டார். கிடைத்த ஒரு சிறு இடைவெளியில் தேநீர் அருந்தியவாறே அதற்கான காரணத்தையும் சொல்லலானார்: "இதுவரை நூற்றுக்கணக்கான ‘ஜனாஸாக்களை’ (உடல்களை) அடக்கம் செய்துள்ளேன். அதேநேரத்தில், ஒருபோதும் கண்ணீர் சிந்தியதில்லை. ஏனென்றால் மரணத்தின்போது, அழக்கூடாது என்பது இஸ்லாத்தின் பொது விதி.
ஆனால், எனது பணிக்காலத்தில் அந்த விதிமுறைகள் தகர்ந்து போனது இன்றுதான். என்னால், அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. தாங்க முடியாத துக்கத்தால் அழுது விசும்பினேன். இன்னும் அழுது கொண்டிருக்கிறேன். காரணம், நான் அடக்கம் செய்தது ஒருபாவமும் அறியாத நூற்றுக்கணக்கான குழந்தைகளை! இன்று பெஷாவர் கபரஸ்தானுக்கு வரிசையாக வந்து சேர்ந்தன குழந்தைகளின் உடல்கள்.!”
இதை சொல்லும்போதே தாஜ் முஹம்மதுவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது.
சற்று நேர மௌனத்திற்கு பிறகு தொடர்கிறார்: “ என் கைகளால் சின்னச்சிறு குழந்தையின் ஜனாஸாவிலிருந்து, வளர்ந்திருந்த குழந்தையின் ஜனாஸாவரை ஒவ்வொன்றாக அடக்கம் செய்ய வேண்டிய அவலநிலைக்கு நான் தள்ளப்பட்டேன்!.
மரணமுற்ற குழந்தைகளில் மிகச்சிறிய குழந்தையின் உடலைத் தூக்கும்போது இதுவரை நான் சுமந்திராத அளவு அதிக கனத்தை உணர்ந்தேன்.கொல்லப்பட்ட குழந்தையின் உடல் கனத்துடன் மனதின் கனமும் சேர்ந்து கொண்டதே அதற்குக் காரணம் என இப்போது எனக்கு புரிகிறது.
எட்டு குழந்தைகளுக்கு தகப்பனான என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவேயில்லை!" – என்கிறார் தாஜ் முஹம்மது.
உடலை அடக்கம் செய்யும் நல்லடக்க பணிகளுக்காக ஒவ்வொரு உடலுக்கும் தாஜ் முஹம்மதுவுக்கு 2000 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரை கிடைக்கும். ஆனால், பெஷாவர் தாக்குதலில் பலியான குழந்தைகளை அடக்கம் செய்யவதற்கு அவர் ஒரு பைசாவும் பெறவில்லை.

பெஷாவரில் ராணுவப் பள்ளிக்கூடத்தில் அண்மையில் தெஹ்ரிக் ஏ தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 மாணவர்கள் உள்பட 149 பேர் கொல்லப்பட்டனர்.
0 comments:
Post a Comment