இரண்டாண்டுகளுக்கு
முன்னர் அடையாறு புற்றுநோய் நிலையம் நடத்திய ஆய்வில் இதுவரையும் வெளிப்படாத அதிர்ச்சிகரமான
தகவல் ஒன்றை கண்டறிந்தது. இரண்டாம் வகுப்பு பயிலும் சிறார்கூட புகையிலைக்கு அடிமைப்பட்டிருந்த
சோகமே அது.
சென்ற
வாரம் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பணிப்புரியும் தலைமையாசிரியர் வகுப்பில் புகையிலையை
மெல்லும் சில மாணவர்களை கையும்-களவுமாக பிடித்தது இன்னும் கவலையை அளிக்கிறது.
புகையிலைக்கு
அடிமைப்படுவோரின் வயது நாளுக்கு நாள் குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அரசு
மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10-15 வயதுக்குட்பட்ட மாணவர்களிடையே நடத்தப்பட்ட
ஆய்வின் முடிவுகள் சமூக நலனில் அக்கறையுள்ளோருக்கு கவலைத் தருபவையாகும்.
- 3.2 விழுக்காடு மாணவர்கள் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தகிறார்கள்.
- இன்னும் 1.6 விழுக்காடு பேர் புகையிலைப் பொருட்களால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
- 2.4 விழுக்காடு மாணவர்கள் 14 வயதிலிருந்தும்
- 2.9 விழுக்காடு பேர் 10-13 வயதிலிருந்தும் புகையிலையை பயன்படுத்துகிறார்கள்.
- 3.6 விழுக்காடு பேர் 15 வயதிலும்
- 3.7 விழுக்காடு பேர் தங்களின் 12 வயதிலும் இன்னும்
- 5.8 விழுக்காடு மாணவர்கள் தங்களது 11 வயதிலும் புகையிலைக்கு வசப்பட்டிருக்கிறார்கள்.
இதில்
பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் குடும்பம் மூலமாக புகையிலைக்கு அடிமைப்பட்டிருந்தது
தெரிந்தது. இன்னும்
28.6 விழுக்காடு பேருக்கு புகையிலை பெற்றோருக்கு அதை வாங்கி தருவதன் மூலம் பரிச்சயமானது.
புகையிலைப்
பொருட்களை அடுத்தவர் பயன்படுத்துவதைப் பார்ப்பதால்.. புகையிலை எளிதில் கடைகளில் கிடைப்பதால்..பெற்றோருக்கு
புகையிலைப் பொருட்களை வாங்கி வருவது இவை எல்லாமே இந்த பழக்கத்துக்கு இளந்தலைமுறையினரை
தள்ளியுள்ளது.
நுங்கம்பாக்கத்தில்
இயங்கும் பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர் சொல்கிறார்: “எங்கள் பள்ளியின் அருகிலேயே
நிறைய பெட்டிக் கடைகள் உள்ளன. அங்கு எப்போதும் புகைப்பவர்கள் அதிகம். எங்கள் பள்ளியின்
மாணவரிடையே புகையிலையை பயன்படுத்தும் பழக்கம் இல்லாவிட்டாலும் இந்த சூழல் இவர்களை பாதித்துவிடுமோ
என்று அச்சமாக உள்ளது!”
இந்த
அச்சம் சமூகம் முழுக்க பரவ வேண்டும். ஏனென்றால்.. புகையிலை என்னும் நச்சால் பாதிக்கப்படுவது
இந்தியாவின் இளைய சிற்பிகள். ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்கால தலைவர்கள்.
SOURCE : THE HINDU - 22.04.2013.
0 comments:
Post a Comment