தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஓலைகுளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். 55 வயதாகும் இவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். ஆடுகள் வளர்த்து பிழைப்பு நடத்தி வருபவர். இதே ஓலைகுளம் தெற்கு தெருவில் வசிக்கும் சிவசங்கு என்பரும் ஆடுகள் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த, 8 ஆம் தேதி கண்மாய்க்குள் பல ஆட்டு மந்தைகள் , மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது சிவசங்கின் மந்தைக்குள் பால்ராஜின் ஆடுகளில் ஒன்று, நுழைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கு தரப்பினர், பால்ராஜை தாக்கி அனைவர் முன்னிலையில், அவரை சிவசங்கு காலில் விழுந்து, மன்னிப்பு கேட்க செய்துள்ளனர். இந்தக் காட்சியை காணொளியாக்கி சமூக ஊடகங்களில் பரப்பினர்.
இதையறிந்த பால்ராஜ், 11 ஆம் தேதி மாலை கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனையடுத்து கயத்தாறு போலீசார், பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, சிவசங்கு உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து, இன்று 13.10.2020 (செவ்வாய்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தி சிறையில் அடைத்தனர்.
0 comments:
Post a Comment