குண்டு வெடித்தது
எங்கோ..!
மனம் ‘பக்’கென்றது
செய்தி கேட்டு..!
‘ட்ரக்..ட்ரக்.. தடித்த பூட்ஸீகள்
‘டக்..டக்..லட்டி சத்தங்கள்..
“ஒத்துக்கோ..! ஒத்துக்கோ..!!”
உருட்டிய விழிகளில்
நெருப்புக் கோளங்கள்!
தடித்த உருவங்களில்
காக்கிச் சட்டைகள்
ஒவ்வொரு வீட்டின்
கதவைத் தட்டும்!
மருளும் விழிகள்..!
முயலாய் காதுகள்..!
இரவு யுகங்கள்
இருளில் கரைந்து..
பொழுது புலரலில்
பெருமூச்சொன்று..
நீண்டு ஒலிக்கும்..!
பெற்றவள் மகனைப் பார்க்க..
தனயன் தம்பியை நோக்க..
தந்தையின் தலையோ
தரையைப் பார்க்கும்..!
“யார் பலி ஆடு..?
நீயா..? நானா..?
யார்
தீர்மானிப்பது?”
‘தடா’ சட்டங்களில்
இன்னும்
சிறைகள் நிரம்பும்!
கம்பிகள் பின்னே
உண்மை உறங்கும்!
கனத்த நெஞ்சுடன்
என்
‘முறையை’ எதிர்நோக்கி
‘அற்ப ஜீவி’
'முஸ்லிமாய்' நான்!
0 comments:
Post a Comment