1887 இல், பிரிட்டீஷ்
ஆளுகைக்கு உட்பட்டவர்களிடையே பேச்சு வார்த்தை நடந்தது.
1917 இல் பிரிட்டீஷ்
காமன்வெல்த் நாடுகள் என்ற பெயர் ஜான் ஸ்மட்ஸ் முன்மொழிந்தார்.
இரண்டாம் உலகப்
போருக்குப் பிறகு பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்திடமிருந்து விடுதலைப் பெற்ற காலனிகள் காமன்வெல்த்தில்
அங்கம் வகிக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா குடியரசானபோது,
'காமன்வெல்த்தின் தலைமையை பிரிட்டீஷ் ராஜகுடும்பம் வகிப்பதில் கருத்து வேறுபாடு இல்லை!
ஆனால், சுதந்திர நாடாகவே உறுப்பினர் பதவி வகிக்க முடியும்!'- என்று நிர்பந்திக்கவே பிரிட்டீஷ்
என்ற வார்த்தை அகற்றப்பட்டது. 'காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு' என்று பெயர் மாற்றம்
செய்யப்பட்டது.
காமன்வெல்த் நாடுகளின்
மொத்த உறுப்பினர்கள் 53 நாடுகள். இதில் 16 நாடுகளுக்கு இப்போதும் பிரிட்டீஷ் ராணிதான்
பேரரசியாக உள்ளார். அதேபோல, இன்னும் ஐந்து நாடுகளுக்கு அவரவர் அரசு குடும்பங்கள் தலைமை
வகிக்கின்றன. 32 நாடுகள் குடியரசுகள்.
பிரிட்டீஷ் காலனி
ஆதிக்கத்தில் இருந்தும் எகிப்து, இராக், ஜோர்டான், பலஸ்தீனம் (இஸ்ரேல் உட்பட), மியான்மர்,
ஏமன், சோமாலியா, குவைத், பஹ்ரைன், ஓமன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள்
காமன்வெல்த்தில் இன்னும் உறுப்பினர்கள் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, 'ஏட்டுச்
சுரைக்காய் கறி சமைக்க உதவாது!'- என்பது போல, காமன்வெல்த் நாடுகளிடையே வெளியுறவுக் கொள்கையில்
இணக்கம், வணிகம் மற்றும் பயணம் போன்ற திட்டங்கள் பேசப்பட்டாலும் அவை நடைமுறைப் படுத்தப்படுவதில்லை.
மாநாடுகள் நடப்பதும்,
அவற்றுக்கான எதிர்ப்புகள் தொடர்வதும், விளையாட்டுப் போட்டிகளுக்கான இடங்கள் தேர்வு செய்யப்படுவதும்
பிறகு அவற்றை எதிர்ப்பதும் தற்போது நடைமுறையில் நடந்து கொண்டிருக்கும் 'காமனான' அம்சங்களாகும்.
0 comments:
Post a Comment