NewsBlog

Wednesday, October 30, 2013

செய்திகள்: 'வாசிப்பது ... பாமரன்'



முஸ்லிம்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜனவரி 28 இல், சிறைநிரப்பும் போராட்டம் நடத்த இருக்கிறது. கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவளிக்க தயார் என்கிறார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன்.



தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இனிப்புகளின் விலை 30 விழுக்காடு அளவு உயர்ந்துள்ளது. உற்பத்திச் செலவு அதிகரிப்புதான் காரணம் என்கிறார்கள் ஓட்டல் உரிமையாளர்கள்.



வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாள் 31.10.2013. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அக்.1 முதல் அக். 31 வரை வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தங்களுக்காக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

தனியார் வங்கிகள் தொடங்கு வதற்கான அனுமதியை பரிசீலனை செய்ய ரிசர்வ் வங்கி தீவிரம் காட்டிவருகிறது. வங்கிகள் தொடங்க இதுவரை 26 தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஜனவரி மாதம் அனுமதி பெறும் நிறுவனங்களின் பட்டியல் வெளியாகும் எனத் தெரிகிறது. டாடா குழுமம், ரிலையன்ஸ், பிர்லா குழுமம், எல் அண்ட்டி, பஜாஜ் போன்ற 26 நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


சியாரா லியோன் சர்வதேச கப்பல் பதிவுக் கழகம் இந்தியக் கடலோரக் காவல் படைக்கு தூத்துக்குடியில் பிடிபட்ட அமெரிக்க கப்பல் சம்பந்தமாக ஒரு கடிதம் எழுதியுள்ளது. “அமெரிக்க கப்பலை இந்தியா சட்டவிரோதமாக பிடித்து வைத்துள்ளது. கப்பலையும், அதில் இருந்தோரையும் உடன் விடுவிக்க வேண்டும்! புழல் சிறையில் இருக்கும் கப்பல் ஊழியர்களுக்க சரியான உணவு வழங்கப்படவில்லை! சரியான மருத்துவ வசதிகள் செய்து தரப்படவில்லை!”- என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.



முன்பு 100 ரூபாய் கொடுத்து வாங்கிய அதேபொருளை இப்போது 108 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டால் அந்த 8 விழுக்காடு பணவீக்கம் அதிகரித்துள்ளது என்று பொருள். பணவீக்கத்தை கணக்கிட உலகம் முழுவதும் இரண்டு முறைமைகள் கையாளப்படுகின்றன. 1) மொத்த விற்பனை விலைப்பட்டியல் பணவீக்கம் அதாவது Whole Sale Price Index Inflation சுருக்கமாக WPI. 2) நுகர்வோர் விலைப்பட்டியல் பணவீக்கம் அதாவது Consumer Price Index Inflation சுருக்கமாக CPI. நமது நாட்டில் மொத்த விற்பனை விலைப்பட்டியல் பணவீக்கம் (WPI) முறைமை பயன்படுத்தப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் நுகர்வோர் விலைப்பட்டியல் பணவீக்கம் (CPI) முறைமையை பயன்படுத்துகிறார்கள்.

0 comments:

Post a Comment