'வக்கிர வாழ்க்கையால் கொலையான வங்கி அதிகாரியும், அவரைப் பழி தீர்த்த சிறுவர்கள்!'- என்றும் இன்றைய 'தி இந்து' நாளேட்டில் முதல் பக்கத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஒரு தீமை தீமையாகவே முடிந்து போனது விசித்திரமல்ல.
ஆனால், அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பெட்டிச் செய்தி ஒன்று முக்கியமானது. அந்த பெட்டிச் செய்தியின் தலைப்பு இதுதான்: 'மிளகாய் பொடியும், மோப்ப நாயும்' அதாவது கொலையாளிகள் அறை முழுவதும் மிளகாய் பொடியைத் தூவி சென்றுள்ளனர். இது மோப்ப நாயைத் திசைத் திருப்பும் முயற்சியாகும்.
இந்த மிளகாய் பொடி தூவலை கற்றுத் தந்தவர் 'கில்லி' படத்தின் நாயகன் விஜய். அதை ஹாஸ்யமாக்கிப் பரப்பியவர் வடிவேலு. இவையும் இந்த செய்தியிலேயே இடம் பெற்றுள்ளன.
ஆக, குற்றம் நிகழ்வதற்கு முதற் காரணமான கில்லிப் படத்தின் நாயகன் மற்றும் அதன் தயாரிப்பாளர், கதை - வசனம் எழுதியவர், இயக்கியவர் அந்தப் படத்துக்கு பாலாபிஷேகம் செய்து விசிலடித்த ரசிகர்கள், அதை வெளியிட்ட திரையரங்கு உரிமையாளர் கடைசியாக தணிக்கை துறையினர் என்று குற்றவாளிகளின் பட்டியல் தொடருகிறது அல்லவா? இதற்கு சட்டம் என்ன சொல்லப் போகிறது?
ஹாஸ்யத்தின் மூலமாக மிளகாய் பொடி விவகாரத்தைப் பரப்பிய சிரிப்பு நடிகருக்கும் தண்டனை தர வேண்டும் அல்லவா?
குற்றவாளிகளைவிட குற்றம் நிகழ உந்துதலாய் இருப்பவர்கள்தான் முழு முதற்குற்றவாளிகள் என்பது இந்த 'பாமரனின்' கருத்து. பல வழக்குகளில் நீதிமன்றங்களும் இதைத் தான் குறிப்பிட்டுள்ளதாக நினைவு.
ஏவியவர்களை விட்டு நாம் அம்புகளை பழித்துக் கொண்டிருக்கிறோம்!
0 comments:
Post a Comment