29.10.2013 இன்றைய 'The Hindu' ஆங்கில நாளேட்டில் ஒரு மூன்று முக்கிய செய்திகள் கண்ணில் பட்டன.
1.பாட்னா குண்டுவெடிப்புகளில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 'இம்தியாஸின்' வீட்டில் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படும் வெடிமருந்து தயாரிப்புக்கான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பின்லேடன் படம் போட்ட புத்தகம் (ஜிஹாதி புத்தகங்கள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது) வரிசையாக அடுக்கி எடுக்கப்பட்ட புகைப்படம் பக்கம் 10 ல்.
2. தீவிரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் தப்பிவிட்டதாக சொல்லி மீண்டும் மகாராட்டிர தீவிரவாத எதிர்ப்பு போலீஸரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய முஜாஹிதீனைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படும் அப்சல் உஸ்மானியை திங்களன்று மும்பையின் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சி பக்கம் 11 ல்.
3. 2002 ஆம் ஆண்டு மோடியின் தர்பாரில் நடந்த குஜராத் இனப்படுகொலையின் போது கழுத்தில் டயரை மாட்டி உயிரோடு எரித்துக் கொன்ற காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அஹ்ஸன் ஜப்ரி வழக்கு சம்பந்தமானது. ஜப்ரியின் மனைவி ஜக்கியா ஜப்ரி தனது முதுமையையும் பொருட்படுத்தாமல் பத்தாண்டுகளுக்கும் மேலாக தட்டிக் கொண்டிருக்கும் நீதியின் வாசல் கதவுகள் திறக்காமல் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்ட வழக்கு சம்பந்தமானது பக்கம் 11 ல்.
ஒரே நாட்டின் குடிமகன்களுக்கான நீதி - நியமங்களில் காணப்படும் இந்த போக்கை பாரபட்சம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
- சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்படும் ஒரு கூட்டம்.
- கடும் குற்றம் செய்துவிட்டு இந்தியாவின் தலைமைப் பதவிக்காக தேர்தல்களைச் சந்திக்க துணிச்சலுடன் புறப்பட்டுவிட்ட இன்னொரு கூட்டம்.
இதை, மறத்துப் போன மனசாட்சி என்பதா? அல்லது தேசத்தின் மனசாட்சியே மரணித்துவிட்டதாக கருதுவதா?
0 comments:
Post a Comment