NewsBlog

Tuesday, October 8, 2013

காலப்பெட்டகம்: 'உயிர்ப்பில்லாதவர்களால் பதில் சொல்ல முடியாது!'


பத்திரிகையாளர்கள் மீது பாய்ச்சல்!

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட பிலால் மாலிக் குறித்து செய்தி சேகரிக்க நிருபர்கள் குவிந்தனர். புகைப்படக்காரர்கள் படங்களை எடுத்துத் தள்ளினர். இதில் எரிச்சலடைந்த மாலிக், "எவ்வளவோ நேரம்டா படம் எடுப்பீங்க. என்ன சினிமாவா காட்டப் போறீங்க? 'அப்படி' 'இப்படின்னு' செய்தியைப் போட்டு உங்களாலதான்டா என் வாழ்க்கையே நாசமாய் போச்சு!" - என எரிந்து விழுந்தார்.

- இது 'தி இந்து' தழிழ் நாளேட்டின் இன்றைய முகப்பு செய்தியின் வெளியான ஒரு முக்கியப் பகுதி.

பிலால் மாலிக் சொன்னதில் என்ன தவறிருக்கிறது? அவர் உண்மையிலேயே குற்றச் செயல்கள் செய்திருந்தால் அந்த குற்றங்களுக்கு தூண்டுக்கோல்கள் ஊடகங்கள்தான் என சொல்வதில் என்னதான் தவறிருக்கிறது?

ஆக, "தீவிரவாதிகள் தானே உருவாவதில்லை. அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்!"- என்ற சூத்திரம் சரியா? தவறா?

அது சரியென்றால்.. தீவிரவாதிகளை கற்பனையில் உருவாக்கி அப்பாவிகளின் வாழ்வை சீர்குலைக்கும் ஊடகங்களுக்கு என்ன தண்டனை?

மனசாட்சி மறத்துப் போனவர்களுக்கு அல்ல.. மனசாட்சி உள்ளவர்களுக்கான கேள்வி இது.

பிலால் மட்டுமல்ல.. கோவிந்தனோ.. குப்பனோ அல்லது அந்தோணியோ யாராகவும் இருந்து இந்த கதறல்களை எழுப்பியிருந்தாலும் ஒரு மனசாட்சி உள்ள மனிதன் என்ற ரீதியில் என்னால் அந்த அவலக் குரலை மறக்கவே முடியாது!

" எவ்வளவோ நேரம்டா படம் எடுப்பீங்க. என்ன சினிமாவா காட்டப் போறீங்க? 'அப்படி' 'இப்படின்னு' செய்தியைப் போட்டு உங்களாலதான்டா என் வாழ்க்கையே நாசமாய் போச்சு!"

உண்மையில், உயிர்ப்பில்லாதவர்களால் இதற்கு பதில் சொல்ல முடியாது! அடுத்தவர் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடியாது! 

ஜடங்களுக்கு பேச வாயிருக்காது! கேட்க காதுமிருக்காது!

1 comment:

  1. எவ்வளவோ நேரம்டா படம் எடுப்பீங்க. என்ன சினிமாவா காட்டப் போறீங்க? 'அப்படி' 'இப்படின்னு' செய்தியைப் போட்டு உங்களாலதான்டா என் வாழ்க்கையே நாசமாய் போச்சு!"

    உண்மையில், உயிர்ப்பில்லாதவர்களால் இதற்கு பதில் சொல்ல முடியாது! அடுத்தவர் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடியாது!

    ஜடங்களுக்கு பேச வாயிருக்காது! கேட்க காதுமிருக்காது!

    ReplyDelete