நம்ம குளச்சல்காரர் ஏற்கனவே வாரப் பத்திரிகையில் இருக்கும் போதே கதை கதையாய் கதைப்பவர். இப்போது நாளேட்டில் கேட்கவும் வேண்டுமா?
செய்திகள், செய்திகளாக புனையப்படாமல் இருக்க வேண்டும். மக்களின் பக்கம் நின்று செய்திகளைத் தர வேண்டும். காவல்துறையின் ஊதுகுழலாக இருக்கக் கூடாது.
இனி வழக்கு எண் 0001, இன்றைய நிகழ்வு இதோ!
தி இந்து'வின் இந்த செய்திக்கு கருத்து பகுதியில் நான் பதிந்த கருத்தை படித்து விட்டு நீங்களும் ஒரு கருத்தை பதிந்து விட்டு செல்லுங்கள்.
ReplyDeleteஎனது கருத்து...
// நீங்கள் சொல்லும் இந்த குற்றச்சாட்டுக்கள் அணைத்தும் காவல் துறையின் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறுமா..? அவ்வாறு இடம் பெறாத பட்சத்தில் சட்டம் மற்றும் நீதித் துறையின் நடவடிக்கையில் நீங்கள் குறுக்கீடு செய்வதாக தான் அர்த்தம்.ஏனெனில் கடந்த காலங்களில் தீவிரவாத பழி சுமத்தி நீண்ட காலங்களுக்கு பின்னர் நிரபராதி என விடுவிக்கப் பட்டவர்களின் விசயத்தில் கூட உங்களைப் போன்ற பத்திரிகைகள் பக்கம் பக்கமாக இது போன்ற கதைகளை எழுதி தீர்த்த சம்பவங்கள் எல்லாம் உண்டு.உதாரணம் குணங்குடி ஹனீபா.//