ஆழம் தெரியாமல் காலைவிட்டால் என்னவாகும்? இத்தாலி மாலுமிகள் விஷயத்தில் ஆனாதுதான் நடக்கும்.
அங்கிள் சாம்.. சர்வ வல்லமையுள்ளவர். தூணில், துரும்பில் இருப்பவற்றையெல்லாம் துருவித் துருவி வேவு பார்க்கும் 007 ஒற்றன்! அந்த வேவு பார்த்ததற்கே ஒன்றும் செய்ய முடியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்க வேண்டியதாயிற்று. அத்தோடு, இத்தாலி மாலுமிகள் விஷயத்தில்பட்ட கசப்பான அனுபவங்கள் வேறு. இவை போதாதென்று இப்போது அங்கிள் சாமோடு 'கப்பல்' விவகாரத்தில் மோதல்!
அரசாங்கம் முழிக்கிறது போதாதென்று .. வருங்கால அரசாங்க அங்கத்தினர்களின் கூப்பாடு வேறு! அட சாமி தாங்கலேப்பா..! போங்க..!
சொந்த மீனவர்களை சிறைப் பிடித்தும்
அவர்களின் ஜீவாதார வாழ்வுரிமையைப் பறித்துக் கொண்டிருக்கும் இலங்கை
ஆட்சியாளர்களை அதட்ட ஆசியாவின் வல்லரசான நமக்கு துப்பில்லை! இப்போது
அமெரிக்காவின் கப்பலையும், அந்நாட்டின் மாலுமிகளையும் சிறைப்பிடித்து
வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று தலையெழுத்து..!
சொன்னால் பொல்லாப்பு.. நடப்பதை எட்டியிருந்து பார்ப்போமா?
0 comments:
Post a Comment