திடுக்கிடும் தகவல் இது.
'அண்டை நாடுகளான இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் மூளுமானால் சுமார் 200 கோடி பேர் கொல்லப்படுவார்கள்!'- என்று சர்வதேச மருத்துவர்களின் அணு ஆயுத போர் தடுப்பு கூட்டமைப்பின் (ஐ.பி.பி.என்) இணைத் தலைவர் ரா ஹெல்பன்ட் கூறியுள்ளார். இது சம்பந்தமாக அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதை தெரிவித்துள்ளார்.
- உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் அதாவது 200 கோடிக்கும் அதிகமான மக்கள் கொல்லலப்படுவார்கள்.
- தெற்காசியாவில் அணு குண்டு வெடித்தால், அமெரிக்காவின் வேளாண் உற்பத்தி 10 விழுக்காடு குறைந்துவிடும்.
- சீனாவின் கோதுமை உற்பத்தி 50 விழுக்காடு பாதிக்கப்பட்டு அந்நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும்.
- அணு குண்டு கதிர்வீச்சால் 100 கோடி பேர் கொல்லப்பட்டால், அதற்கு பிறகு சுற்று வட்டாரங்களில் ஏற்படும் உணவு பஞ்சத்தால் மேலும் 100 கோடி பேர் கொல்லப்படுவார்கள்.
- உலகின் எந்த மூலையாக இருந்தாலும் 100 அணு குண்டுகள் வெடித்தாலல் அது ஒட்டு மொத்த உலகை பஸ்பமாக்கிவிடும். உலகளவில் பருவநிலை மாற்றம், வேளாண் உற்பத்தி சரிவு என்று பேரழிவு ஏற்படும்.
ஜப்பானின், ஹிரோஷிமா - நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்காவால் வீசப்பட்ட அணு குண்டுகளால் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். இவற்றைவிட சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் தற்போது உலக நாடுகளிடம் உள்ளன. அவற்றின் ஆபத்தை உணர்ந்து உலக நாடுகள் தங்கள் வசம் உள்ள அணுகுண்டுகளை தாமாகவே முன்வந்து அழிக்க வேண்டும் என்றும் ரா ஹெல்பன்ட் கேட்டுக் கொண்டார்.
உலகின் முக்கியமான அணு ஆயுத நாடுகளும் அவை பெற்றுள்ள அணு ஆயுதங்களும்:
- அமெரிக்காவிடம் 7700 அணு ஆயுதங்களும்,
- ரஷ்யாவிடம் 8500 ம்,
- பிரிட்டனிடம் 225 ம்,
- பிரான்ஸ் 300 ம்,
- சீனா 240 ம்,
- இந்தியா 100 ம்,
- பாகிஸ்தான் 90 ம்,
- வடகொரியா 10 அணு ஆயுதங்களும் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- இஸ்ரேல் ரகசியமாக அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது. அதனிடம் 200 அணு ஆயுதங்கள் உள்ளதாகவும் நம்பப்படுகிறது.
0 comments:
Post a Comment