வழக்கம் போல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதற்காக வெற்றியாளர்கள் கிட்டதட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக உழைக்க வேண்டி வந்தது. சர்வதேச அளவில் பரந்து விரிந்த செயல்பாடுகளின் கருத்துருவாக்கம் ஒரு முக்கிய காரணமாயினும், அதுவே வெற்றிக்கான முழுமை என்று சொல்ல முடியாது.
- நன்கு திட்டமிடப்பட்ட வழிமுறைகள்
- நவீன தகவல் ஊடகங்களின் பயன்பாடுகள்
- ஒவ்வொருவருக்கான தனித் தனி பங்களிப்பான திட்டங்கள்
- அத்திட்டங்களை எவ்வித மோதலும் இல்லாமல் செயல்படுத்த முழுமையான முனைப்புகள்
- சமூகத்தின் அடிமட்ட மனிதன் வரை கொள்கையை கொண்டு சேர்க்க செய்த அர்ப்பணங்கள்
- உடலாலும், உயிராலும், பொருளாலும் செய்த அறப்போர்கள்
என்று அவர்களின் 'கலிமாவை' அதாவது சொல்லை மேலோங்கச் செய்ய செய்த இடைவிடாத முயற்சிகளின் பலனுக்காக இறைவன் அளித்த வெற்றி இது.
இந்த வெற்றியைக் கண்டு முஸ்லிம்கள் சுய விமர்சனங்கள் செய்வதை விட்டு இறைவனின் திருசந்நிதியில் பதில் சொல்ல வேண்டிய அளவு சொல்லாலும், செயலாலும் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருப்பது வருத்தத்துக்குரியது.
- நமது கொள்கை என்ன?
- இதை செயலுருவம் கொடுக்க செய்துள்ள வழிமுறைகள் என்ன?
- கொள்கையை எட்டுவதற்கான இலக்கு என்ன?
- அதை கொண்டு சேர்ப்பதற்கான சாதனங்கள் என்னென்ன?
- நம்மிடம் உள்ள இறைவனால் வினாத் தொடுக்கப்படும் அமானிதங்கள் என்ன?
- அவற்றை ஒருங்கிணைத்து ஒரு கூட்டமைப்பாய் செயல்படுத்துகிறோமா?
- முடியாவிட்டால் ஏன் முடியவில்லை என்று விமர்சனங்கள் செய்கிறோமா?
- விமர்சனங்களின் அடிப்படையில் குறைகள் களையப்படுகின்றனவா?
- களையப்படாத அந்த பிரச்னைகளுக்கு தீர்வுகளாய் இறைவனும், அவனுடைய திருத்தூதரும் வகுத்துள்ள வரையரைகள் என்னென்ன என்பதையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய பெரும் பணி இது.
அது விடுத்து ஆவேசமான பேச்சுகளும், உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் சொல்லாடலும் வலிமையைக் குறைத்துவிடும். இறைவனின், இறைத்தூதரின் கோபத்தையும் பெற்றுத் தருமேயன்றி வெற்றியைத் தராது.
நம்புங்கள் இது இறைவனின் மார்க்கம்.
இது சம்பந்தமாக இன்னும் படிக்க:
http://mrpamaran.blogspot.in/2013/04/blog-post_23.html
http://mrpamaran.blogspot.in/2013/12/blog-post_6.html
http://udayathaaragai.blogspot.in/2013/01/blog-post.html
http://udayathaaragai.blogspot.in/2012/12/18.html
http://udayathaaragai.blogspot.in/2012/12/17.html
0 comments:
Post a Comment