NewsBlog

Thursday, December 5, 2013

நடப்புச் செய்தி: 'மனிதநேயத்தின் மறு பெயர் சலீம்!''


 
கோவையில், 'ஜீவசாந்தி' அறக்கட்டளை என்றாலே ஆதரவற்றோர் கூட தாயைப் பார்த்தது போல அகமகிழ்வர். காரணம் ஜீவசாந்தியின் நிறுவனர் சலீம். 

மருத்துவம் பயின்ற சலீம், மக்கள் சேவைகளையே ஜீவனாகக் கொண்டிருக்கிறார். அதில் கிடைக்கும் பேரமைதி - பெரும்சாந்தி அளவிட முடியாதது என்கிறார். 

சீராட்டி வளர்த்த பெற்றோரையே பிள்ளைகள் தெருவில் அநாதைகளாய் திரிய விடும் காலமிது. அத்தகைய சமூக அமைப்பில் ஆதரவற்றவர்களுக்கு உறவாய் திகழ்கிறார் டாக்டர் சலீம். உறவின்றி மரிப்பவர்களை உறவாய் நின்று அடக்கம் செய்வதே இவரின் முதற்சேவையாக உள்ளது. தன்னைப் போலவே மனிதர்களை நேசிப்பவர்களை உருவாக்க வேண்டுமென்பதே இந்த மருத்துவரின் இலட்சியமாக உள்ளது.

பல்வேறு சமூக விழிப்புணர்வு செயல்பாடுகளில் டாக்டர் சலீம் ஈடுபட்டு வருகிறார். உட்கார்ந்த இடத்திலேயே லட்சங்களை சம்பாதிப்பதை விட்டு விட்டு தெருக்களில் இல்லாதாரோரின் நிழலாய் தொடர்கிறார் இவர்.

மனித சேவைகள் இறைவனின் சேவைகள் என்பதால் இது குறித்து விளக்கவும் டாக்டர் சலீம் ஆர்வமாக உள்ளார். 

இந்நிலையில், ஜீவசாந்தியின் சேவையை பாராட்டி சுதேசி பத்திரிக்கை 2013-ஆம், ஆண்டிற்கான 'துருவா' விருதினை சலீம் மற்றும் அவரது குழுவினருக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.

டாக்டர் சலீமின் இல்லத்துணைவியார், கணவரது எல்லா நற்செயல்களிலும் பெரும் துணையாக நிற்கிறார். இவர் ஒரு வழக்குரைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

(குறிப்பு: முகநூலில் Saleem Cbe, Jeeva Shanthy Trust என்ற கணக்கு பெயர்களில் சலீமை தொடர்பு கொள்ளலாம்)

- தகவல்: Meeramaideen Jamal
Meeramaideen Jamal

0 comments:

Post a Comment