இந்திய முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான 'ஆல் இண்டியா முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரத்', பங்களா தேஷ், ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்த தலைவர் அரசியல் சார்புடைய போர்க்குற்ற தீர்ப்பாயகத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பால் படுகொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
முஷாவரத்தின் தலைவர் டாக்டர் ஜபருல் இஸ்லாம் கான் கூறும்போது, "ஜமாஅத்தின் மூத்த தலைவரான அப்துல் காதர் முல்லாஹ்வுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை மக்களிடையே பிரசித்திப் பெறாத, வெகுவிரைவில் வரவிருக்கும் தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட இருக்கிற அரசாங்கத்தின் அரசியல் ரீதியான ஊழலாகும்; கடும் குற்றமாகும்!" - என்றார்.
"எவ்வித மதிப்புமற்ற, அரசியல்மயமான தீர்ப்பாயகத்தால் மௌலானாவுக்கு அவசர கதியில் வழங்கப்பட்ட தீர்ப்பானது எதிர்கட்சிகளை அச்சுறுத்தவே அன்றி வேறில்லை!
40 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட வழக்குகளை, பங்களா தேஷின் முதல் ஜனாதிபதியின் முடிவை புறக்கணித்து அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு அநீதியானது. நீதியின் பெயரால் நடத்தப்பட்டுள்ள படுகொலை தற்போதைய பங்களா தேஷ் ஆட்சியாளரின் பெரும் பாவமாகவும், தவறான நடத்தையாகவும் வரலாற்றில் பதியப் போகிறது!" - என்றார் கான்.
"சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, பங்களா தேஷ் அரசின் மதிப்பற்ற தீர்பாயகத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும். நல்லறிவும், நல்லுபதேசங்களும் தற்போதைய ஆட்சியாளர்களிடம் எடுபடாத நிலையில் இந்த முடிவை உடன் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு எடுக்க வேண்டும்!" - என்றும் டாக்டர் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment