NewsBlog

Thursday, December 19, 2013

முக்கிய செய்திகள்: வாசிப்பது மிஸ்டர் பாமரன் - சர்ச்சைக்குரிய திரைக்கதையும், தஸ்லிமாவும்'



ஆகாஷ் ஆத் வங்க மொழி தொலைக்காட்சி சானல். இதில், சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் எழுதிய திரைக்கதையின் அடிப்படையில் ஒரு தொடர் வியாழன் அன்று ஒளிப்பரப்பாக இருந்தது. இந்நிலையில் தங்கள் உணர்வுகள் பாதிக்கப்படுவதாக முஸ்லிம் சமயத்தாரிடையே எழுந்த எதிர்ப்பையொட்டி இந்த தொடர் நிறுத்தப்படுவதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை காரணம் காட்டி காவல்துறையும் அத்தொடரை நிறுத்தும்படி அறிவுறுத்தியது.

Dusahobas என்னும் அத்தொடரின் தயாரிப்பாளர் முகநூலில், 'ஆகாஷ் ஆத் தொலைக்காட்சி, ஒளிப்பரப்ப தயாராக இருந்தும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் நாங்கள் அத்தொடரை நிறுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். நேயர்கள் தங்களுக்கு நேர்ந்த சங்கடங்களை பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். இது சம்பந்தமான விவரங்களை தொடர்ந்து முகநூலில் பதிவேற்றம் செய்கிறோம்!" - என்று தெரிவித்துள்ளார்.


பெண்ணுரிமைகள் குறித்தும், பெண்ணாதிக்கம் குறித்தும் பேசும் இத்தொடர் நிறுத்தப்பட்டது குறித்தும் தில்லியில் இருக்கும் தஸ்லீமா நஸ் ரீனுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் டுவிட்டரில், "முஸ்லிம் பழமைவாதிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து எனது மெகா சீரியல் தடை செய்யப்பட்டது சௌதியில் வசிக்கும் உணர்வையே எனக்கு தருகிறது!" - என்று கூறியுள்ளார்.


தஸ்லீமாவின் 'Dusahobas' தொடருக்கு 22 முஸ்லிம்  அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. கொல்கத்தா திப்பு சுல்தான் மசூதியின் தலைமை இமாம், மௌலானா நூருற் றஹ்மான் பர்கத்தி ஆகியோர் இதில் அடங்குவர்.


'மில்லத் இத்திஹாத் பரிஷத்' முஸ்லிம் அமைப்புகள் கூட்டமைப்பாகும். இது கொல்கத்தாவிலிருந்து செயல்படுகிறது. இந்த அமைப்பின் பிரதிநிதிகள் 'Dusahobas' தொடரின் தயாரிப்பாளரான அசோக் சுரானா மற்றும் அவரது மகள் இஸ்ஹிதா சுரான ஆகியோரை நேரிடையாக சந்தித்து சர்ச்சைக்குரிய தொடரை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார்கள்.  பின்னர் செய்தியாளார்களை சந்தித்த அவர்கள், "தஸ்லிமா மலிவான விளம்பரத்துக்காக அத்தொடரை எழுதினார் என்றும், தொலைக்காட்சி நிறுவனமும் தனது  TRP (Television Rating Point) க்காக அதை ஒளிபரப்பியதாகவும்" - குற்றம் சாட்டினார்கள்.

'Dusahobas' என்பதற்கு 'தாங்க இயலாத பிணைப்பு' (unbearable cohabitation) என்பது பொருளாகும்.

( Source: Twocircles.net and http://indiatoday.intoday.in/)




 







0 comments:

Post a Comment