பங்களா தேஷ் அரசு,
‘ஷஹீத் அப்துல் காதர் முல்லாஹ்’வை காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்ததை ஜமாஅத்தே
இஸ்லாமியின் தலைவர் (பொறுப்பு) மக்புல் அஹ்மத் கடும் கண்டனம் தெரிவித்தர். 15, டிசம்பர்
15இல் நாடுமுழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் ஜமாஅத்தின்
‘இணையதளத்தில்’ தெரிவித்துள்ளார்.
மக்புல் அஹ்மத்
விடுத்துள்ள கண்டனச் செய்தி:
பல்வேறு தரப்பினரிடமிருந்தும்,
உலக சமூகத்தாரிடமிருந்தும் எழுந்த எதிர்ப்பையும், கண்டனங்களையும் பொருட்படுத்தாமல்,
ஏற்கனவே போட்ட சதி திட்டத்தின்படி காட்டுமிராண்டித்தனமான அரசு மனிதாபிமானமற்ற முறையில்
இயக்கத்தின் துணைப் பொது செயலாளரை 12.12.2013 அன்றைய இரவு 10.01 க்கு படுகொலை செய்ததை
ஜமாஅத்தே இஸ்லாமி வன்மையாகக் கண்டிக்கிறது. (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அரசின் சதி திட்டத்து
படுகொலையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். அநீதியான முறையில் அரங்கேற்றிய இந்த படுகொலையின்
மூலமாக அரசாங்கம் தனக்குத் தானே படுகுழியை தோண்டிக் கொண்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட
அந்த நல்-ஆத்மாவின் ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும்
அதற்கு காரணமானவர்கள் பதில் சொல்லியேயாக வேண்டும்.
இவர்களின் வீழ்ச்சியும், இறுதி அழிவும் தவிர்க்க இயலாதவை. அக்கிரமக்காரர்களின் முடிவை நாடு கண்ணாரக் காணப் போகிறது.
சர்வாதிகார அரசுக்கு
எதிராக தற்போதையை சூழலை பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையுடன் எதிர்கொள்ளும்படி கேட்டுக்
கொள்கிறேன். இதுவே நாம் படுகொலை செய்யப்பட்டவரின் இறுதி விருப்பத்துக்கு செலுத்தும்
மரியாதையாகும்.
வெகுவிரைவில் இஸ்லாமிய,
சட்டதிட்டங்களின்படி அமையவிருக்கும் அரசால்
இதற்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்பதை மீண்டும், தெள்ளத் தெளிவாக
நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சர்வாதிகார அரசாங்கத்தை ஆட்சி பீடத்திலிருந்து
இறக்குவது பெரிய சிரமமான காரியமேயல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
கட்டுக்கதைகளும்,
பொய் சாட்சிகளுமாய் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் வெகுவிரைவில்
சட்ட ரீதியாக விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மண்ணில் அப்துல்
காதர் முல்லாஹ் சிந்திய குருதியிலிருந்து இஸ்லாமிய கொடி பட்டொளி வீசிப் பறக்கும். இஸ்லாத்தையும்,
இஸ்லாமிய இயக்கத்தையும் இந்த மண்ணிலிருந்து எந்த கொடுங்கோலர்களாலும் அகற்ற முடியாது.
நாடு கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. நாட்டு மக்களை பிளவுப்படுத்த
நினைக்கும் அரசாங்கத்தின் சூழ்ச்சிகளை மக்கள் முறியடிப்பார்கள்.
தூக்குக் கயிற்றை
முத்தமிடுவதற்கு அந்த இறுதி கணங்களில் அப்துல் காதர் முல்லாஹ் தம்மைப் பற்றி கிஞ்சித்தும்
கவலைப்படாமல், நாட்டின் இறையாண்மை, இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய இயக்கத்தின் பாதுகாப்பு
குறித்தே பெரும் கவலையுடன் இருந்தார்.
நாட்டு மக்கள்
அனைவரும் ஒன்று திரண்டு தங்கள் பங்களிப்பை இஸ்லாமிய இயக்கத்துக்கு அளிப்பதன் மூலமே
இத்தகைய ஒரு மாபெரும் தலைவரின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதாக இருக்கும் என்று உங்கள்
அனைவரையும் நான் அழைக்கிறேன்.
இறைவன் அன்னாரின்
அறப்போராளி என்ற அந்தஸ்தை ஏற்பானாக! அன்னாருக்கு சுவனத்தில் உயர்ந்த இடங்களைத் தந்தருள்வான!
அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கு அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக!
இதைத் தொடர்ந்து
மக்புல் அஹ்மத் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகளை அறிவிப்பு செய்தார்:
- நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், ஜீம்ஆ நாளன்று ‘காயிப் ஜனாஸா’ நடைபெறும்.
- 14 டிச.2013 சனிக்கிழமை ‘அறிவுஜீவி அறப்போராளி’ நாளாக கொண்டாடப்படும். அப்துல் காதர் முல்லாஹ் உட்பட இதுவரை நாட்டுக்காக உயிர் துறந்தவர்களுக்கு பிரத்யேக பிரார்த்தனைகள் செய்யப்படும்.
- 15 டிச.2013 விடியலிருந்து அஸ்தமனம் வரை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும்.
- 16 டிச. 2013 வெற்றி நாளா கருதப்பட்டு நாடு முழுவதும் விவாத அரங்கங்கள் ஏற்பாடு செய்யப்படும்.
“மேற்கண்ட நிகழ்ச்சிகள்
அனைத்தும் அமைதியுடன் நடைபெற நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அரசாங்கத்தின் ‘சட்ட ரீதியான’ இந்த படுகொலைக்கு எதிராக நாட்டு மக்களும், சர்வதேச சமூகத்தினரும்
ஒன்று திரள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்!” – என்றும் ஜமாஅத்தின் தலைவர் மக்புல்
அஹ்மத் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment