'டுபாக்கூர்' என்ற சொல்லை யார்தான் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. அந்த சொல்லுக்கு முழு பொருளாக நமது அரசியல் நாயகர்களைச் சுட்டலாம். அதிலும் குறிப்பாக நூறு விழுக்காடு 'டுபாக்கூர்' சொல்லுக்கு பொருத்தமானவர் திருவாளர் மோடி எனலாம். என்னென்ன டுபாக்கூர் வேலைகளை செய்து ஆட்சிக்கு வர வேண்டுமோ அத்தனை வழிமுறைகளையும் அவர் கையாண்டு வருகிறார். அவருக்கு என்று ஒரு 'தரம்' இல்லாவிட்டாலும் இந்தியரிடையே இமாலய எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கி வருபவர்களுக்காகாவது கொஞ்சமாவது நீதி, நேர்மை விழுமியங்கள் உள்ளனவா என்றால் அது ஜீரோதான்! ரயில் நிலையங்களில் 'சாயா' விற்றவர் இவ்வளவு 'டுபாக்கூர்' திறமைசாலியாக உருவெடுத்திருப்பது வியப்பாக இருக்கிறது.
உண்மைதான்! திருவாளர் மோடியும், அவரை முன்னிறுத்தி இந்தியாவை ஆளத்துடிக்கும் பிஜேபி சங்பரிவார் அமைப்புகளும் மிகவும் மட்டகரமான வழிமுறைகளில் இறங்கிவிட்டுள்ளன. 'ட்ரூத் ஆஃப் குஜராத்' என்ற இணையத்தளம் அண்மையில் நடத்திய ஆய்வில் இந்த 'குட்டு' வெளிப்பட்டுள்ளது. மோடியும், அவரை முன்னிறுத்தியுள்ள பிஜேபியும் தங்களின் பிரச்சாரங்களுக்காக கணக்கிட முடியாதளவு இணையத் தளங்களையும் உருவாக்கியுள்ளன. அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், 'ராஜேஷ் ஜெயின்' என்ற தனிநபர்தான் இந்த 'டுபுக்கு சித்து" வேலைகளை நிர்வகித்து வருபவர் என்றும் தெரிய வந்திருக்கிறது.
'கோப்ரா போஸ்ட்' சமீபத்தில்தான் ஐ.டி. நிறுவனங்கள் போலியான பெயர்களில் அரசியல் கட்சிகளுக்கு சாதகமான ஆதரவாளர்களை உருவாக்கி பேஸ் புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக இணையங்களை தவறாக பயன்படுத்தியதை தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்டது.
தற்போது ட்ரூத் ஆஃப் குஜராத் இணையம் பல்துறைகளைச் சேர்ந்த டுவிட்டர் பயனாளிகளை வகைப்படுத்தி ஆய்வு நடத்தியது. திருவாளர் மோடி, ராஜ்நாத் சிங் மற்றும் திக் விஜய் போன்ற தலைவர்களின் ஆதரவாளர்கள் குறித்து நடத்திய அந்த ஆய்வில், கீழ்க்கண்ட தகவல்கள் வெளிப்பட்டன:
இந்த பட்டியல்கள் அனைத்தையும் ஒப்பிட்டு பார்த்தபோது, திருவாளர் மோடிதான் 'டுபாக்கூர் டுபுக்கு தாஸ்' என்று தெரிந்தது. அவரைப் பின்பற்றியவர்கள் அனைவரும் போலியானவர்கள் என்ற உண்மையும் வெளிப்பட்டது.
மோடியின் டுவிட்டர் கணக்கை ஆய்வு செய்த போது, அவரைப் பின்பற்றியவர்கள் போலியானவர்கள் அதிலும் எண்களையே தங்கள் அடையாளமாகக் கொண்டிருந்தவர்கள் என்றும் அந்த ஆய்வில் தெரிந்தது. அவர்கள் அனைவரும் 'டுவிட்' செய்ததில்லை. அவர்களுக்கான ஆதரவாளர்கள் யாரும் இல்லை. ஆக முகங்களே இல்லாத போலியான 'டுபாக்கூர்'கள் அவர்கள்.
உதாரணமாக கீழ்க்கண்ட பட்டியல் எடுத்து சோதித்துப் பாருங்கள்.
1880089164 7418381443 7508824278 7878497680
7897813526 8000604117 8003223670 8010093275
8053445210 8099232320 8460148050 8527356181
8696479393 8962876064 9000170213 9011883337
9016680805 9028663484 9033210550 9033235765
9033688635 9046363210 9049722078 9133085157
9266535675 9336504544 9370054516 9412613652
9414207240 9427494307 9427663621
9447364581 9503453710 9527665171
9560580341 9561415109 9574880779 9601436788
9631013051 9647413363 9649553815
9671107002 9679543386 9689686704 9700047010
9727225250 9730779233 9740080158 9741033351
9750033982 9764661778 9812432098 9813180007
9813979044 9814844399 9825053782 9828792792
9831327651 9832067358 9842726988 9844500444
9866699043 9879551708 9897033308 9897436666 9898488501
9899464310 9911727724 9913089668 9913789052
9921847978 9924249897 9925023396 9925092487
9928006787 9942652371 9947076315 9948004469
9963716961 9964905378 9967663797 9978811002
9979156134 9979320504 9981916442 9984175246
9991990707 9994307266 9999185498 7351489242
இதுதான் நவீன அரசியல் தாரளமய கொள்கைளின் வடிவம் போலிருக்கிறது.
திருவாளர் மோடி டுபாக்கூரில் 'நம்பர் ஒன்னாக' இருக்கிறார்.
ஆதாரம்: 'ட்ரூத் ஆஃப் குஜராத்'
0 comments:
Post a Comment