ஒருவர் திடீரென ரயில் பயணத்தை ரத்து செய்துவிட்டால், அவருக்குப் பதிலாக அந்த குடும்பத்தைச் சேர்ந்த மற்றொருவர் இனி பயணிக்கலாம். குடும்ப உறுப்பினர்களின் பெயர் ரேஷன் கார்டில் உள்ளவர்கள் மட்டுமே பெயர் மாற்றம் செய்யப்பட்டு இப்படி பயணிக்க முடியும்.
- 24 மணி நேரத்துக்கு முன்னதாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். பயணிகள் பெயர்ப் பட்டியல் (சார்ட்) தயாரான பிறகு யாரும் பெயர் மாற்றம் செய்ய முடியாது.
- சலுகைக் கட்டணத்தில் முன்பதிவு டிக்கெட் எடுத்திருந்தால், சலுகைக் கட்டண பயணத்துக்கு தகுதி இல்லாதவர், பெயர் மாற்றம் செய்து பயணிக்க முடியாது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் உள்ள தலைமை முன்பதிவு மேற்பார்வையாளரிடம் உரிய காரணத்தைத் தெரிவித்தும், ரத்த சொந்தம் என்பதற்காக ரேஷன் கார்ட்டை காண்பித்தும் பயணிப்பவருக்கான பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.
மற்ற ரயில் நிலையங்களாக இருந்தால், உதவி வர்த்தக மேலாளரிடம் பெயர் மாற்றம் செய்து தரும்படி கோரலாம்.
(ஆதாரம்: தி இந்து, முதல் பக்கம்)
0 comments:
Post a Comment