NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Thursday, October 31, 2013

விருந்தினர் பக்கம்: 'ஆகவேதான் சொல்கிறேன்'



“ஒற்றை மத ஆதிக்கமும், ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பும் நாட்டின் பன்முகப் பண்பாட்டு அழகைச் சீர்குலைப்பவை. 

பசுவதைத் தடைச்சட்டம் என்பதன் பெயரால், இந்துக்கள் என்று இவர்கள் அடையாளப்படுத்துகிற மக்களிலேயே தலித்துகள் உள்ளிட்ட ஒரு பெரும்பகுதியினரின் மாட்டுக்கறி உணவுப் பழக்கத்தை இழிவுபடுத்துகிறார்கள். 

தகுதிக்கே வாய்ப்பு என்று கூறி இட ஒதுக்கீட்டு நியாயங்களை மறுப்பதன் மூலம் சமூக நீதியை ஒழித்துக்கட்டி, இந்துக்கள் என்று இவர்கள் அடையாளப்படுத்துகிறவர்களிலேயே பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர் ஆகியோரின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறவர்கள்...

காங்கிரஸ் ஆட்சி மக்கள் மீது திணிக்கிற மோசமான பொருளாதாரக் கொள்கைகளை அப்படியே ஆதரிப்பவர்கள். அதன் அடிப்படையிலும் இவர்கள் பெரும்பான்மை மக்களின் நலன்களுக்குப் பகையாளிகள்.

ஆகவேதான் சொல்கிறேன், ஆர்எஸ்எஸ் - பாஜக கொள்கைகள் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களுக்கும் எதிரானவை.”

-தொலைக்காட்சி விவாதங்களில் இக்கருத்தை நான் சொல்கிறபோதெல்லாம் பாஜக பிரமுகர்கள் இது தவறானது என்று சொல்வதில்லை, தங்களது கொள்கைகளின் நியாயங்களைச் சொல்வதில்லை. 

மாறாக அவர்களுடையே ஒரே எதிர்வாதம் என்ன தெரியுமா? “கம்யூனிஸ்ட்டுகள் போலித்தனமானவர்கள்...!”

-  குமரேசன் அசாக்
Kumaresan Asak

செய்திகள்: 'வாசிப்பது பாமரன்'

‘இனவெறி இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து நீக்க வேண்டும்!’ - என்ற கோரிக்கையை முன்வைத்து 31.10.2013 பிற்பகலில், சென்னை, எண்ணூர், அசோக்லேலண்ட் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜான் (எ) முருகப்பிரியன் முன்னிலை வகித்தார். என்.எஸ். விஜயக்குமார் தலைமை வகிக்க வீர.இராமலிங்கம் வரவேற்புரையாற்றினார். 'உச்சிதனை முகர்ந்தால்' திரைபடத்தின் இயக்குநரான புகழேந்தி தங்கராஜ் சிறப்புரையாற்ற பிரபாகர் நன்றி நவின்றார். கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக இரா.வந்தியத்தேவன் இருந்தார். கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தில் திரளாக தொழிலாளர் தோழர்கள் கலந்து கொண்டனர்.


தமிழக அமைச்சரவை 11 ஆவது முறையாக மாற்றம். முன்னாள் சுகாதாரக்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பள்ளிக்கல்வித்துறை அமைச்சரானார். 


சுகாதாரத்துறையின் புதிய அமைச்சராக, சி.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளியன்று இவர்கள் ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.




அடுத்த மாதம் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கிறார். காங்கிரஸ் உயர்நிலைக்குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.



செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை ஏவுவதற்கான ஒத்திகை நவ. 3 இல், ஆரம்பிக்கிறது. இதற்கான 56 மணி நேர கவுண்ட் டவுன் தொடங்கியது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான பொத்தானை அழுத்துவதை தவிர்த்த மற்ற அனைத்து நடைமுறைகளும் இந்த ஒத்திகையில் மேற்கொள்ளப்படும் என்று பி.எஸ்.எல்.வி - சி -25 திட்ட இயக்குனர் பி.குன்னி கிருஷ்ணன் கூறினார்.


காலப்பெட்டகம்: 'மனதைப் பிழிந்த அந்த இரண்டு கடிதங்கள்!


அரசியல், ஆன்மிகம், குழந்தை இலக்கியம், வேளாண்மை, வணிகம், சிறுகதைகள் என்று பன்முகங்களில் தினமணியில் எழுதிக் கொண்டிருந்த 1990-களின் ஒருநாள். 

அன்றைய தினமணியின் ஆசிரியர் காலஞ்சென்ற திரு இராம சம்பந்தம் சிரித்துக் கொண்டே ஒரு கடிதத்தின் நகலொன்றை என்னிடம் நீட்டினார். முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டார்.

அந்த கடிதத்தைப் படித்துப் பார்த்த நான் பரிதவித்துவிட்டேன். கடும் வார்த்தைகளால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருந்த கடிதம் அது. அதை பிரேம்போடாத குறையாக இன்னும் பாதுகாத்து வருகின்றேன். இதனுடைய நகல்கள் மணிச்சுடர் நாளிதழின் ஆசிரியர் காலஞ்சென்ற மூதறிஞர் அப்துல் சமது சாஹெப்புக்கும், சமரசம் ஆசிரியர் மதிப்பிற்குற்குரிய எனது சகோதரர் சிராஜுல் ஹஸனுக்கும் அனுப்பப்பட்டிருந்தன.

மனம்  நொந்துப் போயிருந்த எனக்கு சிராஜுல் ஹஸன் ஆறுதலாய் சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது. ரொம்பவும் சின்ன வார்த்தை, "இக்வான் அவர்களுக்கு உங்களைப் பற்றி என்ன தெரியும்? விடுங்கள் அதை!" இதுதான்.

என்ன நடந்தது என்று சொல்லவில்லை அல்லவா?

நடந்தது இதுதான்: 'தும்பை ஒரு அற்புத மருந்து' -  என்னும் தலைப்பில் தினமணி சிறப்புப் பகுதிக்கு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அந்த பகுதிக்கான பொறுப்பாசிரியர் கட்டுரையின் துவக்கத்தில் சில வரிகளைச் (எதேச்சையாக நடந்தது இது) சேர்த்திருக்கிறார். அந்த நான்கைந்து வரிகளை காரணம் காட்டி மொத்தமாக காழ்ப்புணர்ச்சியுடன் அந்தக் கடிதம் வசவுகளாய் கொட்டித் தீர்த்திருந்தது.


மேலே உள்ளது நான் தினமணிக்கு  கொடுத்த கட்டுரைக்கான தட்டச்சுப் பிரதியின் முதல் பக்கம். 


மேலே உள்ளது வேளாண்மணிக்கான சிறப்பாசிரியர் எடிட் செய்தபின் பிரசுரமான கட்டுரை.


மேலே உள்ளது கடும் விமர்சனத்துடன் வந்திருந்த கடிதத்தின் நகல். 

அடுத்தது நான் பணிப்புரியும் நிறுவனம் சம்பந்தமாக தினமணியில் எழுதிய கட்டுரைக்கு நிறுவனத்தின் அன்றைய நிர்வாக இயக்குநர் திரு. சேசஷாயி  அவர்கள் பாராட்டு தெரிவித்து தம் கைப்பட எழுதி அனுப்பியிருந்த கடிதம். .


 இந்த இரண்டு விதமான நேர்பார்வைகள் என் எழுத்துலகப் பயணத்தை தளராமல் முன்னெடுத்து  செல்லவும் விமர்சனங்களைத் தாங்கவும் பக்குவப்படுத்திய கடிதங்களாக இதுவரையிலும் போற்றி பாதுகாத்துவருகின்றேன்.

ஒருகாலமும் உணர்ச்சிவசப்படக் கூடாது என்று எச்சரித்துக் கொண்டிருக்கும் ஒரே கலங்கரை விளக்கின் இரு வேறு வெளிச்சங்கள் இவை.


Wednesday, October 30, 2013

செய்திகள்: 'வாசிப்பது ... பாமரன்'



முஸ்லிம்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜனவரி 28 இல், சிறைநிரப்பும் போராட்டம் நடத்த இருக்கிறது. கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவளிக்க தயார் என்கிறார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன்.



தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இனிப்புகளின் விலை 30 விழுக்காடு அளவு உயர்ந்துள்ளது. உற்பத்திச் செலவு அதிகரிப்புதான் காரணம் என்கிறார்கள் ஓட்டல் உரிமையாளர்கள்.



வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாள் 31.10.2013. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அக்.1 முதல் அக். 31 வரை வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தங்களுக்காக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

தனியார் வங்கிகள் தொடங்கு வதற்கான அனுமதியை பரிசீலனை செய்ய ரிசர்வ் வங்கி தீவிரம் காட்டிவருகிறது. வங்கிகள் தொடங்க இதுவரை 26 தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஜனவரி மாதம் அனுமதி பெறும் நிறுவனங்களின் பட்டியல் வெளியாகும் எனத் தெரிகிறது. டாடா குழுமம், ரிலையன்ஸ், பிர்லா குழுமம், எல் அண்ட்டி, பஜாஜ் போன்ற 26 நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


சியாரா லியோன் சர்வதேச கப்பல் பதிவுக் கழகம் இந்தியக் கடலோரக் காவல் படைக்கு தூத்துக்குடியில் பிடிபட்ட அமெரிக்க கப்பல் சம்பந்தமாக ஒரு கடிதம் எழுதியுள்ளது. “அமெரிக்க கப்பலை இந்தியா சட்டவிரோதமாக பிடித்து வைத்துள்ளது. கப்பலையும், அதில் இருந்தோரையும் உடன் விடுவிக்க வேண்டும்! புழல் சிறையில் இருக்கும் கப்பல் ஊழியர்களுக்க சரியான உணவு வழங்கப்படவில்லை! சரியான மருத்துவ வசதிகள் செய்து தரப்படவில்லை!”- என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.



முன்பு 100 ரூபாய் கொடுத்து வாங்கிய அதேபொருளை இப்போது 108 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டால் அந்த 8 விழுக்காடு பணவீக்கம் அதிகரித்துள்ளது என்று பொருள். பணவீக்கத்தை கணக்கிட உலகம் முழுவதும் இரண்டு முறைமைகள் கையாளப்படுகின்றன. 1) மொத்த விற்பனை விலைப்பட்டியல் பணவீக்கம் அதாவது Whole Sale Price Index Inflation சுருக்கமாக WPI. 2) நுகர்வோர் விலைப்பட்டியல் பணவீக்கம் அதாவது Consumer Price Index Inflation சுருக்கமாக CPI. நமது நாட்டில் மொத்த விற்பனை விலைப்பட்டியல் பணவீக்கம் (WPI) முறைமை பயன்படுத்தப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் நுகர்வோர் விலைப்பட்டியல் பணவீக்கம் (CPI) முறைமையை பயன்படுத்துகிறார்கள்.

Tuesday, October 29, 2013

நடப்புச் செய்தி: ' என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!..'

29.10.2013 இன்றைய 'The Hindu' ஆங்கில நாளேட்டில் ஒரு மூன்று முக்கிய செய்திகள் கண்ணில் பட்டன.

1.பாட்னா குண்டுவெடிப்புகளில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 'இம்தியாஸின்' வீட்டில் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படும் வெடிமருந்து தயாரிப்புக்கான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பின்லேடன் படம் போட்ட புத்தகம் (ஜிஹாதி புத்தகங்கள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது) வரிசையாக அடுக்கி எடுக்கப்பட்ட புகைப்படம் பக்கம் 10 ல். 


2. தீவிரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் தப்பிவிட்டதாக சொல்லி மீண்டும் மகாராட்டிர தீவிரவாத எதிர்ப்பு போலீஸரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய முஜாஹிதீனைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படும் அப்சல் உஸ்மானியை  திங்களன்று மும்பையின் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சி பக்கம் 11 ல்.


3. 2002 ஆம் ஆண்டு மோடியின் தர்பாரில் நடந்த குஜராத் இனப்படுகொலையின் போது கழுத்தில் டயரை மாட்டி உயிரோடு எரித்துக் கொன்ற காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அஹ்ஸன் ஜப்ரி வழக்கு சம்பந்தமானது. ஜப்ரியின் மனைவி ஜக்கியா ஜப்ரி தனது முதுமையையும் பொருட்படுத்தாமல் பத்தாண்டுகளுக்கும் மேலாக தட்டிக் கொண்டிருக்கும் நீதியின் வாசல் கதவுகள் திறக்காமல் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்ட வழக்கு சம்பந்தமானது பக்கம் 11 ல்.


ஒரே நாட்டின் குடிமகன்களுக்கான நீதி - நியமங்களில் காணப்படும் இந்த போக்கை பாரபட்சம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

  • சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்படும் ஒரு கூட்டம். 
  • கடும் குற்றம் செய்துவிட்டு இந்தியாவின் தலைமைப் பதவிக்காக தேர்தல்களைச் சந்திக்க துணிச்சலுடன் புறப்பட்டுவிட்ட இன்னொரு கூட்டம்.

இதை, மறத்துப் போன மனசாட்சி என்பதா? அல்லது தேசத்தின் மனசாட்சியே மரணித்துவிட்டதாக கருதுவதா?



சிறப்புக் கட்டுரை: 'இதோ நாளைய சிற்பிகள்'



'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வானொலி, தினமணி மற்றும் துக்ளக் போன்ற பத்திரிகைகளில் வாசகர் கருத்துக்கள் வெளியாகி இருந்தாலும் அநேகமாய் எழுத்துலகில் எனக்கு ஆரம்பமாக இருந்தது இந்த கட்டுரைதான்! ஒரு இன்லேண்ட் கடிதத்தில் எழுதி சமரசத்துக்கு அனுப்பி பிரசுரமான இதை பாமரன் வாசகர்கள் பார்வைக்கு வைக்கிறேன் - இக்வான் அமீர் 
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
கம்பீரமாய் திறக்கப்பட்ட இரும்புக்கதவுகள். சென்னையின் பிரபலமான கல்லூரி அது! மாலை நேரம், சுமார் 6.30 மணி.

எதிரே வாகனங்கள் நெரிச்சலுடன் ஓடிக் கொண்டிருந்தன. கும்பல், கும்பல்களாக மாலை நேர வகுப்பு மாணவர்கள், ‘மச்சிக்களுடன், ஜோ.. க்யா யார்…’ களுடனும் மும்மொழி வம்பளந்து கொண்டிருந்தனர். பழைய புகை வண்டிகளை ஞாபகப்படுத்த புகைகளாக கக்கிக் கொண்டிருந்தனர்.

நண்பர் ஒருவரின் வருகைக்காக பக்கத்திலிருந்த ஒரு கடையில் காத்திருந்தேன் நான்.

“டேய்.. மச்சி! அதோ..! ஒரு இண்ட் ஸீஸிகி ஹெல்மெட் இல்லாம வருது. அதை என்ன செய்றேன் பார்.. இப்போ.” – கும்பலிலிருந்து மாணவர் ஒருவர் நடுரோட்டிற்கு வந்தார்.

“சார்.. சார்”

45 வயது மதிக்கத்தக்க நபரை சுமந்து வந்த ‘இண்ட் ஸீஸிகி’ கிறீச்சிட்டது. 

பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த சைக்கிள் அதன் மீது மோதி, “சாவு கிராக்கி!” என்று உதிர்த்துவிட்டு சென்றது.

“சார்..! முன்னாலே ஹெல்மெட் கேஸ் பிடிக்கிறாங்க.. பார்த்துப் போங்க!” 

–மாணவரின் பொய்யை நம்பிய அந்த நபர் வண்டியின் வேகத்தை குறைத்து, பாதையின் முன்னாள் எட்டி எட்டி பார்த்துக் கொண்டே எச்சரிக்கையுடன் சென்றார்.

மாணவர் கும்பலிலிருந்து “குபீர்” சிரிப்பொன்று கிளம்பியது. வெற்றிகரமாக ஏமாற்றிய மாணவரின் முகத்தில் 1000 வாட்ச் பளிச்சிட்டது.

அடுத்து அவர்களின் பார்வையில் பட்டவர்கள் இரண்டு பெண்கள். 

அவர்களையும் அழாத குறைக்கு கேலி செய்து அனுப்பியது அக்கும்பல்.

“டேய்..! ஜோ..அதோ பார்! மாமா போறார்!”

“மாமா..! மாமா..!” இது சட்டத்தின் காவலர் ஒருவருக்கு வீசப்பட்ட ஏவுகணை.

அவரும், "நமக்கேன் வம்பு?” – என்று கண்டும் காணாமலும் சென்றுவிட்டார்.

ஒரு நாட்டின் முதுகெலும்பான இந்த இளைய சமுதாயம், ஒழுக்கம் குன்றிய மிக மோசமான நிலையில் அனுதினமும் உருவாகிக் கொண்டேயிருக்கிறது.

வருங்காலத்தின் மருத்துவர்கள், சட்ட வல்லுநர்கள், பொறியாளர்கள், சமுதாய சிந்தனையாளர்கள் இவர்கள்தான் என்று எண்ணும்போது, சோகம்தான் ஏற்படுகிறது. இளையவயதிலேயே இறையச்சத்தை ஊட்டி, அதன் விளைவாக உண்டாகும் மேலான ஒழுக்கத்துடன் கூடிய கல்வி முறையைத் தவிர வேறு எதனாலும் இந்த இளந்தளிர்கள் திருந்தப் போவதுமில்லை..!  அப்படி திருந்தாத இவர்களால் புதிதாக நாட்டிற்கு ஒன்றும் ஆகப் போதுமில்லை..!

மாறுமா இந்த நிலை..?


Sunday, October 27, 2013

நடப்புச் செய்தி:'மதுவுக்கு எதிரான முழக்கம்'


இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(SIO) சார்பாக மது எதிர்ப்பு பிரச்சார வாரம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை அல்-அமீன் காலனியில்  தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.  

இந்நிகழ்வில் கோவை மாநகர SIO தலைவர் சகோ.சபீர் அலி மது சம்பந்தமான விழிப்புணர்வு உரையாற்றினார்.