NewsBlog

Wednesday, November 6, 2013

சிறப்புக் கட்டுரை: வெற்றியின் தருணங்கள்!'


05.11.2013 பிற்பகல் 2.00 மணி. பரபரப்பானது நமது விழிகளின் படபிடிப்புக் குழு. இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஒரு பிரிவு வடசென்னையின் இறுதி எல்லையான எண்ணூர் நெட்டுக்குப்பம், முகத்துவாரத்தின் அருகிலும், இன்னொரு பிரிவு, முகத்துவாரக்குப்பத்தின் அருகிலும் காத்திருந்தது. 


பிற்பகல் 2.30 மணி, ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகளைவிட பதட்டம் சூழ்ந்து கொண்டது. 
 

மங்கள்யான் புறப்படவிருக்கும் ஶ்ரீஹரிகோட்டாவின் பக்கம் குத்துமதிப்பாக காமிராவைத் திருப்பி துள்ளிவிழும் உற்சாகத்துடனான காத்திருப்புடன் படகில் அமர்ந்திருந்த எமக்கு, சொதப்பலில்லாமல் வெற்றிகரமாக விண்கலம் விண்ணில்  செலுத்தப்பட வேண்டுமே என்ற கவலை பற்றிக் கொள்கிறது. 


இருகுழுவினரும் இடையிடையே பொன்னான அந்த தருணங்களை நழுவவிடக் கூடாது என்று பரஸ்பர தகவல் பரிமாற்றங்களின் ஊடேயோன ஒரு காத்திருப்பு அது.


எதிரே ஒரு படகில் எம்தேசத்தின் கொடி கம்பீரமாய் பட்டொளி வீசி பறக்க பிற்பகல் 2.36 -- 2.38 க்கு இடைப்பட்ட நேரத்தில் சர்ரென்று சின்ன ராக்கெட் தீம்பிழம்பாய்... விண்ணை நோக்கி மங்கள்யான் சீறிப்பாய்ந்த அந்த தருணங்கள் வார்த்தைகளில் வடிக்க இயலாதவை! 


இந்த வெற்றியின் பலன் வலிமை மிக்க இந்தியாவை உருவாக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், நமது அரசியல்வாதிகளின் பிழைப்புக்கு நிச்சயம் உதவும் இது. "அடுத்த தேர்தல்,வாக்குறுதியாக, செவ்வாயில் குடிக்க நீர், இருக்க இடம் தருவதாக!' சொல்லப்படும்!" - என்கிறது 'தி ஹிந்து' ஆங்கில நாளேட்டின் நையாண்டி கேலிசித்திரம்.

செஞ்சாலும், செய்வாங்க நம்ம மகராசாங்க!



0 comments:

Post a Comment