பல்வேறு கட்சிகளை சேர்ந்த மக்களவை உறுப்பினர்களில் 76 பேர் கடும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு நீதிமன்ற தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளார்கள். அவர்கள் மீதுள்ள குற்றங்கள் ஊர்ஜிதமாகி இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமான தண்டனைப் பெற்றால் அவர்கள் மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
இந்த கிரிமினல் பட்டியலில் 18 பேருடன் முன் வரிசையில் பிஜேபி நிற்கிறது. அதற்கடுத்ததாக காங்கிரஸ் 14 உறுப்பினர்களுடனும், சமாஜ்வாடி கட்சி 8 பேர், பிஎஸ்பி 6 பேருடனும், அஇஅதிமுக 4 பேர் ஜேடி (யூ) 3 பேர், சிபிஐ எம் 2 பேர் மற்றும் உதிரி கட்சிகளிலிருந்து 17 பேரும் இந்த பட்டியலில் இடம் பெறுகிறார்கள்.
மோடியின் வலது கரமாய் விளங்கும் அமித் ஷா 2014 தேர்தல்களில் மக்களவை அரியணையை யாசிக்கிறார். இவர் மூவர் கொலைவழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தில்லி நீதிமன்றம் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ரஷீத் மஸ்ஊதையும், ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் லல்லு பிரசாத் யாதவையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து மக்களவை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்த தகுதி நீக்கம் செய்தது அனைவரும் அறிந்ததே.
0 comments:
Post a Comment