NewsBlog

Monday, November 11, 2013

வழக்கு எண் - 0001: எழுதப்பட்ட தீர்ப்புகளா? விழிப்புணர்வற்ற சமூகத்தின் இயலாமையா?'

ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரை ரகசியமாக அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்போவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்குரைஞர் ஜாஹிர் அஹ்மது பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவற்றின் முக்கிய பகுதிகள் இவை:


"பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் இருவரையும் சேலம் சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து கடந்த 10 நாள்களாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கான காவல் திங்கட்கிழமை (11.11.2013) மாலையுடன் முடிவடைகிறது.

இதையடுத்து, சேலம் 4 - ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அப்போது, அவர்களது காவலை நீட்டித்து வழங்கும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீஸார் திட்டடமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும். இருவரையும் வேறு மாவட்ட அல்லது கர்நாடக மாநில போலீஸார் விசாரரணைக்கு அழைத்துச் செல்ல அனுமதி கோரலாம் என்றும் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட இருவருடனும் ஞாயிறு மாலை அவர்களின் வழக்குரைஞர் பேச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. நீதிமன்ற உத்திரவின்படி இந்த சந்திப்பின்போது, போலீஸார் உடன் இருக்கக் கூடாது. ஆனால், சிபிசிஐடி டிஎஸ்பி. ராஜன், ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் நீதிமன்ற உத்திரவை மதிக்காமல் சந்திப்பு நடைபெற்ற இடத்திலேயே இருந்தனர். அந்த சந்திப்பையும் வீடியோவில் பதிவு செய்தனர்.

இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவலில் இருக்கும்போது, போலீஸார் செய்த சித்திரவதைகளை அறிந்து கொள்ள இயலவில்லை. 

அதேபோல, கடந்த மாதம் 31-ஆம் தேதி, இருவரும் (பக்ருதீன், பிலால் மாலிக்) சேலம் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, செய்தியாளர்களிடம் பேச முயன்றனர். இதையடுத்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். 


இந்நிலையில், பக்ருதீன், பிலால் மாலிக் இருவரையும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நீதிபதியின் வீட்டுக்கோ, நீதிமன்றத்துக்கோ அழைத்துச் சென்று ஆஜர்படுத்த போலீஸார் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

நீதிமன்றக் காவலில் இருக்கும் நேரத்தில் பக்ருதீன், பிலால் மாலிக் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்து நடைபெற்ற உண்மைகளைக் கூற ஆவலுடன் உள்ளனர். இதைத் தடுக்கவே போலீஸார் அவர்களை ரகசியமாக அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர்."

 - பக்ருதீன், பிலால் மாலிக்கின் வழக்குரைஞர் ஜாஹிர் அஹ்மது. இந்த பேட்டியின் போது வழக்குரைஞர் ஷாஜஹானும் உடனிருந்தார்.

இதை ஒரு சமுதாயத்தை களங்கப்படுத்த ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்புகள் என்பதா? அல்லது அரசியல் சதுராட்டத்தின் சாதாரணங்கள் என்பதா? அல்லது விழிப்புணர்வற்ற சமுதாயத்தின் இயலாமைதான் என்பதா?

0 comments:

Post a Comment