கடந்த அக்.22 இல், தஹ்ரானின் 'மால்' ஒன்றில் பெண்களிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களுக்கு வியாழன் அன்று தம்மாம் நீதிமன்றத்தால் சிறை மற்றும் சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட இளைஞர் ஒருவருக்கு 5 மாத சிறைதண்டனையும், இருவருக்கு 3 மாத சிறைதண்டனையும், நாலாவது நபருக்கு ஒரு மாத சிறைதண்டனை மற்றும் சவுக்கடியும், அடுத்தவருக்கு 2 மாத சிறைதண்டனையும் அளிக்கப்பட்டது. 18 வயது நிரம்பாத சிறுவர் ஒருவர் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
குற்றச் செயலுக்கு ஆதாரமாக காவல்துறையினர் தாக்கல் செய்திருந்த 2 நிமிட வீடியோவை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டு, சௌதியில் மகளிருக்கு எதிரான 2,797 குற்றச் செயல்கள் பதிவாகி தண்டனை அளிக்கப்பட்டன.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களில் சௌதி நாட்டவர் 60 விழுக்காடு 40 விழுக்காடு வெளிநாட்டவர் ஆவர். இதில் ரியாதில் 650 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு முதன்மை இடத்தில் உள்ளது. ஜித்தா 250 வழக்குகளும், கிழக்கு பகுதிகளில் 210 வழக்குகள், மக்கா 180, மதீனா 170 வழக்குகளும் பதிவாகி உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
(Source: Arab News)
0 comments:
Post a Comment