அமெச்சூர் போட்டோகிராபர் ஒருவர் ஒருமுறை அழகிய வண்ணத்துப் பூச்சிகளை மிக மோசமாக படமெடுத்து வந்து காட்டினார். வண்ணத்துப்பூச்சிகள் போன்றவற்றை எப்படி எடுக்க வேண்டும் என்பதோ, அதற்கெனத் தனிக் கருவிகள் தேவை என்பதோ, அக்கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதோ அவருக்குத் தெரியவில்லை.
ஒரு காமிராவை எப்படி, எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்று ஒரு வரம்பு உண்டு.
நீங்கள் முதலில் ஒரு காமிரா வாங்கும்போது, அந்தக் காமிராவை எந்த வரம்புவரை கையாள முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வரம்மை மீறி அதனைக் கையாளக்கூடாது.
நீங்கள் வாங்கும் காமிராவைக் கொண்டு உங்கள் வீடு, வாசல், தோட்டந்துரவு, குடும்பத்தார்களைப் படம் எடுக்கலாம். உல்லாசப் பயணம் போனால் படமெடுத்து மகிழலாம். அத்தகைய சந்தர்பங்களில் அக்காமிராவை எப்படிக் கையாள்வது என்ற சில அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
- ஆரி மில்லர்
ஆரி மில்லர் |
0 comments:
Post a Comment