சென்ற ஞாயிறு மற்றும் திங்கள் (19.01.2014 மற்றும் 20.01.2014) இரண்டு நாட்கள் வேலூர் மற்றும் பெங்களூரு
வழக்கில் சிறைப்பட்டுள்ள சகோதரர்களை காண சென்றிந்தோம்.
வேலூர் வழக்கில், பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் இருவரும் தனித்தனி பிளாக்கில்
உள்ளனர்.
பண்ணா இஸ்மாயில் போலிஸ் காவலில் ராமநாதபுரத்தில் உள்ளார்.
மூவரும்
சந்தித்து பேச அனுமதி கிடையாது.
வழக்கறிஞர் சந்திப்பிலும் தனி தனியாகத்தான்
சந்திக்க முடியும்.
தனிமை சிறையில் வைத்துள்ளனர்.
"யாருடனும் பேச முடியாமல்
பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறது! எனது செல்லுக்கு அருகில் விஷ ஜந்துக்கள்
வேறு நடமாடுகின்றன. சமீபத்தில் கூட இரண்டு பாம்புகளை
அடித்தேன்!" - என்றார் போலீஸ் பக்ருதீன்.
இவர் மீது குடியாத்ததில் ஒரு நகை கடையை கொள்ளயடித்தாக புதிய பொய்
வழக்கு ஒன்றை போட்டுள்ளனர்.
"தடா ரஹீம் பாய் உயர் நீதி மன்றத்தில் என்னை
பார்ப்பதற்காக மனு போட்டுள்ளராம். அதை தடுப்பதற்காக நான் சிறை அதிகாரிக்கு
மிரட்டல் விடுததாக ஒரு புதிய வழக்கு போட்டுள்ளனர். இப்படியே வழக்குக்கு மேல்
மேல் வழக்கு போட்டு எங்கள் வாழ்நாளை சிறையிலேயே கழித்து விட வேண்டும்
என்பதுதான் போலீசின் எண்ணம்!" - என்றார் இவர் தொடர்ந்து.
அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, "பெங்களூருக்கு செல்கிறோம்!" - என்றவுடன், "உற்சாகமாக எல்லோருக்கும் சலாம்
சொல்லுங்கள்!" என்றார்.
பெங்களூரில் உள்ள புகாரி உள்ளிட்ட எட்டு
சகோதரர்களையும் சந்தித்தோம்.
புகாரி மெலிந்து போய் இருந்தார். "சிறைக்கு
வந்ததில் இருந்து 20 கிலோ குறைந்து விட்டேன். போலீஸ் காவலில் அடித்தனால் ஒரு
கால் நடக்கவே சிரமமாக இருக்கிறது. எனினும் சிறை வாழ்க்கை எனக்கு புதிதல்ல.
சிறை வாழ்க்கைக்கு புதிதான சகோதரர் பஷீருக்கு ஆறுதல் சொல்லுங்கள். எதற்கு
வந்தோம் என்றே தெரியாமல் தினந்தோறும் அழுது புலம்பியபடி இருக்கிறார்!" - என்று
கூறினார்.
சமீபத்தில் இந்த வழக்கில் விடுதலையான பீர் மொய்தீன் உடைய மச்சான்
தான் பஷீர். பாவம்! ஆள் மெலிந்து நீரிழிவு நோய் வந்தவர்
போலிருந்தார்.
எல்லோருக்கும் ஆறுதல் சொல்லி விட்டு கூட்டமைப்பு விரைவில்
பெங்களூருக்கு வந்து சந்திக்க இருப்பதையும் சட்ட ரீதியாக எடுக்கப்பட்டு
வரும் முயற்சிகளையும் விளக்கி விட்டு திரும்பினோம்.
முஸ்லிமாக
பிறந்ததை தவிர எந்த தவறையும் செய்யாத இந்த சகோதரர்கள் விரைவில் விடுதலையாக
பிரார்த்திக்கும்படி கேட்டக் கொள்கிறேன்.
தகவல்: வழக்குரைஞர் காஞ்சி ஜெய்னுல் ஆபிதீன்.
0 comments:
Post a Comment