ஜனவரி, 12 - 2014 கோவாவில் பிஜேபியின் தேர்தல் பிரச்சார ஊர்வலம் நடந்தது. அதில் பிஜேபியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், 'ஆம் ஆத்மி'யின் எளிமையான வாழ்க்கை முறைமையை பிஜேபி தலைவர்களுடன் ஒப்பிட்டு பேசினார். "இத்தகைய எளிமையை ஏற்கனவே பிஜேபி தலைவர்கள் பின்பற்றி காட்டியுள்ளனர். முன்னாள் பிரதமர் வாஜ்பேய் தனக்கென்று சொந்தமாக வீடில்லாத ஒப்பற்ற தலைவராகவே வாழ்ந்தார்!"- என்று வழக்கம் போலவே ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டார். இவரது இந்தக் கருத்தைத் சரி பார்த்தபோது, இவர் மற்றொரு முறை, மற்றொரு தேர்தல் ஊர்வலத்தில் தொடர்ந்து நாட்டு மக்களை ஏமாற்றி வருவது தெரிந்தது.
MyNeta.info என்பது பொதுவாழ்வில் உள்ளோரின் ஆவணங்களைப் பாதுகாக்கும் இணையத்தளமாகும். தேர்தல்களில் போட்டியிடும் பல்வேறு எம்.எல்.ஏ, எம்.பிக்கள் அவர்கள் தாக்கல் செய்யும் வேட்புமனுக்களின் அடிப்படையில், அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்கள் உட்பட எல்லா தகவல்களையும் இது பாதுகாத்து வைத்திருக்கிறது.
2004 இல், வாஜ்பேய் மக்களவைக்கு போட்டியிட்ட போது தாக்கல் செய்த வேட்பு மனுவை சரிபார்த்தபோது, புது தில்லியின் கிழக்கு கைலாஷ் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சொந்தக்காரர் என்றும், 2004இல், அதன் மதிப்பு 28 லட்சம் என்றும் அதில் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மே, 2004 வரை வாஜ்பேய் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமராக இருந்தவர்.
நரேந்திர மோடி நாட்டின் பல்வேறு தகவல்களை தப்பும், தவறுமாக சொல்வது ஒருபுறம் இருக்கட்டும், சொந்த கட்சியினர் குறித்தும் தெரிந்து வைத்திருக்காமல் பொய்களாக சொல்வது சகிக்க முடியவில்லை.

Source: truthofgujarat.com
0 comments:
Post a Comment