'தி.மு.க. தோற்கும் என்று நான் சொன்னது, தி.மு.க. தோற்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. நான் கழகத் தலைவர் கலைஞரிடம், இப்படி பலர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். மதுரை மாநகர் கழகம் கலைக்கப்பட்டிருக்கிறது. திருப்பியும் மாநகர் கழகத்தைக் கொண்டு வாருங்கள். அதேபோல மதுரை மாநகரத்திலும், புறநகரிலும் கிட்டதட்ட 10 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களை எல்லாம் மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
அது மட்டுமல்ல, மதுரை மாநகரத்தில் மட்டும் சுமார் ஆயிரம் பேர் பதவியில் இருந்தார்கள். வீட்டுக்கு 5 ஓட்டு என்று வைத்துக் கொண்டால்கூட, 5,000 ஓட்டு நமக்கு இழப்பு ஏற்படும். எனவே, இப்படியே நீக்கிக் கொண்டே போனால், இந்தப் படலம் தொடர்ந்து கொண் போனால் தி.மு.க. தோற்கும் என்றுதான் சொன்னேன்.
நான் என்ன எண்ணத்தில் சொன்னேன் என்றால், வீட்டிலே ஒரு பிள்ளையை, "நீ உருப்பட மாட்ட" - என்று தாயோ, தந்தையோ சொல்வது, அந்தப் பிள்ளை உருப்படாமல் போகட்டும் என்பதற்காக அல்ல. நல்லா வரணும் என்பதற்காகத்தான் அப்படி சொன்னேன்.
ஆசிரியர்கள், "நீ உருப்பட மாட்டடா!" - என்று கிளாஸ்ல சொல்வாங்க இல்ல; அது மாதிரி நல்ல எண்ணத்துலே சொன்னதுதான் அது. நான் அப்படித்தான் சொன்னேன். ஆனா, நீங்க (பத்திரிகைகள்) அதை கொஞ்சம் மாற்றிப் போட்டுட்டீங்க!"
"போட்டி வேட்பாளரை நிறுத்தாவிட்டாலும்கூட தி.மு.க. தானாகவே தோற்றுவிடும்!" - என்று சென்னையில் சொன்னீர்களே... இன்று கூடியுள்ள கூட்டத்தை அதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் எண்ணம் உள்ளதா?" - என்று மதுரையில், பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு மு.க.அழகிரி சொன்ன பதில் இது.
(ஆதாரம்: தி இந்து- 28.01.2014)
0 comments:
Post a Comment