NewsBlog

Wednesday, January 15, 2014

பாசிஸத்தின் கோர முகங்கள்: 'பிஜேபியின் ஸ்தாபகர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜியை மோடி, 1930 இல் கொலை செய்தாரா?'


நவம்பர் 10, 2013 குஜராத்தின் பாலஸ்ஸினாரில் மருத்துவமனையின் திறப்பு விழா ஒன்றில் பிஜேபியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் ஆற்றிய சிறப்புரையில், "1930இல், ஜெனீவாவில் மரணமடைந்த சுதந்திரப் போராட்ட தியாகி ஷ்யாம் பிரசாத் முகர்ஜியின் அஸ்தியைக் கூட கொண்டு வரவில்லை!" - என்று காங்கிரஸை கடுமையான குரலில் விமர்சித்தார்.

குழுமியிருந்த பார்வையாளர்களை நோக்கி, "ஷ்யாம் பிரசாத் முகர்ஜி குஜராத் மண்ணின் புகழ் மிக்க மைந்தன். ஷ்யாம் பிரசாத் முகர்ஜி, விவேகானந்தரிடமும், தயானந்த சரஸ்வதியிடமும் நெருக்கமான தொடர்பிலிருந்தவர்!"- என்று இன்னும் பல்வேறு தகவல்களையும் கர்ஜனையோடு  முழங்கினார்.  

ஆனால், முகர்ஜி பிறந்தது, 1901 ஆண்டு; விவேகானந்தர் மரணமடைந்தது 1902 ஆம் ஆண்டு. உண்மைதான், ஷ்யாம் பிரசாத் முகர்ஜி மிகச்சிறந்த அறிஞர்தான் போலும்! ஏனெனில் ஒரு வயது குழந்தைப் பருவத்திலேயே விவேகானந்தரிடம் உரையாற்றிய பெருமகனாராயிற்றே அவர்! 

கடைசியாக தனது உரையில் மோடி, "நல்லவேளை ஷ்யாம் பிரசாத் முகர்ஜியின் அஸ்தி 2003இல் ஜெனீவாவிலிருந்து கொண்டு வர முடிந்தது!" - என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார்.

இவர்தான் நமது நாட்டின் எதிர்காலப் பிரதமராக பிஜேபியால் நியமிக்கப்பட்டிருப்பவர். கற்பனைச் செய்து பாருங்கள்... ஒரு ஞானசூனியத்திடம் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தால் என்னவாகும்?

Dead Body of Shyama Prasad Mukherjee who died on 23 June 1953

தனது தாய் அமைப்பான ஜனசங்கத்தின் ஸ்தாபகரின் வரலாறு தெரியாதவர் மோடி! டாக்டர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி 1953 ஆம் ஆண்டு காஷ்மீரில் மரணமடைந்தார். ஆனால், அவரை மோடி ஜெனீவாவில் ஏற்கனவே 1930 இல் கொன்றுவிட்டார்! ஜனசங் ஜனிக்கும் முன்பே அதன் ஸ்தாபகரை சாம்பலாக்கி விட்டார். 

இதே மோடிதான் பிரதமர் மன்மோகன் சிங்கின் சத்தீஷ்கர் உரையை விமர்சிக்கும்போது, "காங்கிரஸ் வரலாறுகளை சிதைத்துவிட்டது!" - என்றார். 

உண்மையில், வரலாற்றை சிதைத்தவர் மோடிதான்! ஷ்யாம்ஜீ கிருஷ்ணா வர்மாதான் 1930 இல் ஜெனீவாவில் மரணமடைந்தவர். அவரது அஸ்திதான் 2003இல் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

சமீபத்தில்தான் மோடி பாட்னாவில் அலெக்சாண்டரை வம்புக்கு இழுத்திருந்தார். பீகார் மக்களால் அவர் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டதாக சரடு விட்டார். ஆனால், உண்மையில் அலெக்சாண்டர் கங்கையை கடக்கவேயில்லை. மோடி தக்க்ஷசீலத்தையும் அது பாகிஸ்தானின் பகுதியாக இருந்தும் பீகார் என்று குறிப்பிட்டார். இவர் நமது நாட்டின் பிரதமராக ஒருவேளை தப்பித் தவறி ஆகிவிட்டால்.. நாடுகளுக்கு மத்தியில் ரணகளமாக்காமல் விடமாட்டார்.

23ஆம், புலிகேசி வடிவேலுவை நினைவுறுத்தும், இத்தகைய அறிவீலிகளின் பேச்சுக்களை இன்னும் எத்தனைக் காலம்தான் தேசம் சகித்துக் கொண்டிருக்குமோ தெரியவில்லை?

Source: truthofgujarat.com

0 comments:

Post a Comment