NewsBlog

Friday, October 4, 2013

காலப்பெட்டகம்: 'கேட்பார் யாருமில்லையே இறைவா!'



27.08.2002 அன்று.

அந்த கர்ப்பிணி தாய் 'போலன் பஜார்' என்னும் தெருவில் தன் வயிற்றை பிடித்தவாறு ஓட முடியாமல் ஓடிக் கொண்டிருக்கிறாள். அவளை துரத்திக் கொண்டிருக்கிறது மனித வெறி பிடித்த ராட்சஸ கும்பல். 

அந்த கும்பல்தான் அவள் தந்தையையும், கணவனையும் சற்று நேரத்துக் முன் கொன்றிருந்தது. அந்த கொலை வெறியிலிருந்து தப்பிப் பிழைக்க தன் உயிரையும் அதைவிட முக்கியமாக தன் வயிற்றில் சுமந்து கொண்டிருந்த குழதையின் உயிரையும் காப்பாற்றிக் கொள்ள அபலை அவள் ஓடிக் கொண்டிருந்தாள். 

இதோ..! வந்தாகிவிட்டது. நிச்சயம் தான் காப்பாற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் பேதை அவள் காவல் நிலையம் நோக்கி ஓடினாள். "காப்பாற்றுங்கள்..! காப்பாற்றுங்கள்..!" - என்று காவல் நிலையத்தை நோக்கி மரண ஓலமிட்டவாறே நெருங்கினாள். மனித இதயங்களைத் துளைத்தெடுக்கும் அந்த ஓலம் காவல்நிலையத்திலிருந்த காவலர்களை பாதித்ததாக தெரியவில்லை. ஏதோ எந்திர மனிதர்களாய் வெளியே எட்டிப் பார்த்த அவர்கள் காவல்நிலைய கதவுகளை தாழிட்டுக் கொண்டார்கள்.

கல்லையும் கரையச் செய்யும் அந்தத் தாயின் கதறல்களுக்கு செவி சாய்ப்போர் அங்கு யாருமில்லை. ஆள்வோரின் கட்டளைக்கு காவல்துறையினரும். அரசு எந்திரமும் செவிச்சாய்த்திருந்தன் விளைவு அது. மனித தன்மையை முற்றிலும் இழந்திருந்து போயிருந்த சூழல் அது. 

தன்னை சூறையாடும் அந்த மிருகங்களிடமிருந்து காத்துக் கொள்ள தாய் கெஞ்சினாள். கதறினாள். துச்சாதன்களாக மாறிய அவர்கள் அபலை அவளை அந்த கயவர்கள் குதறி கிழித்தார்கள். அத்தோடு விட்டார்களா. பாவிகள்! உயிருடன் அவள் வயிற்றைக் கிழித்து, பச்சிளம் சிசுவை எடுத்து, பெட்ரோல் ஊற்றி தீயிட்டி எறித்தனர் அரக்கன்கள். உயிர் பிரிந்து கொண்டிருந்த அந்த கடைசி நேரத்தில் தன் அன்புக்குரிய உயிர் தன் கண்ணெதிரிலேயே பெட்ரோல் அபிஷேகத்துக்கு ஆளாகி தீய்ந்து கருகிப் போவதைக் கண்டு அவள் ஜீவன் பிரிந்தாள். 

அவளுடைய கடைசி நேரத்து இறைநம்பிக்கையின் வெளிப்பாடாக..  "அல்லாஹ்.. அல்லாஹ்.." என்ற ஓலம் ஓராயிரம் பொருளோடு.. இயலாமையோடு.. சாபங்களை உதிர்ந்து மூச்சடங்கிப் போனது. 


அந்த அபலைத் தாயின் பெயர் நூர் பாத்திமா.

போலன் பஜார், குஜராத்தின் கோத்ராவுக்கு அருகில் உள்ள பகுதி. 

குஜராத் இனகலவரத்தில் வருங்கால பிரதமர் கனவுகளுடனிருக்கும் கொடிய பயங்கரவாதி மோடியின் குஜராத் அரசு ஆவணங்களில் பதிவாகியிருக்கும் ஆயிரமாயிரம் சம்பவங்களில் ஒரு கொலைக்குற்ற சம்பவம் இது.

ஆனால், இந்தக் கொடூரக் கொலை மற்றும் கற்பழிப்பு குற்றத்துக்கு காரணமானவர்கள் அல்லது தூண்டியவர்கள் மீது இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை மண்ணையும், நதிகளையும் பெண்ணாக பாவித்து மதிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட தலைவர்தான் இந்திய பிரதமருக்கான வேட்பாளர்!

"யாருக்கு தெரியும்? இந்தக் கொடிய கொலைக்காரர்களின் தலைவர்.. நாளைய இந்தியாவின் பிரதமராகக் கூட ஆகலாம்"!!

 - தகவல்: யூஸீஃப் ஜமாலி.

0 comments:

Post a Comment