NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Monday, March 31, 2014

News in English: Shadows of an encounter


East Delhi, Delhi: On Sunday March 23rd, residents of Okhla woke up to the news of disappearance of four Muslim youths in Jaipur and two in Delhi. These students were picked up by a group of people not wearing any uniform or carrying any warrants for arrest. Soon it came to be known that people who kidnapped these students were members of Delhi Police Special Cell.

The news evoked the memory of Batla House encounter of 2008 in which two Muslim youths and a police inspector was killed which many people of the area and all fact-finding reports have labeled as “fake” or staged.

Within hours of the news that students have gone missing, a crowd led by Amanutulah Khan of Aam Aadmi Party (AAP) assembled at Shaheen Bagh in Okhla blocking the road and demanding immediate release of those arrested. Later that night, the two who were picked up from Delhi were released.

The arrest and finally the release of the two have confirmed to the Muslims that they are right in their thinking that their youths are being harassed in the name of terrorism. “If they were really terrorists or had any link to terrorism then why were they released,” asks Neyaz Farooquee who is writing a book on Batla House Encounter. “Show us the evidence of terrorism, if not to us then at least in the court,” said Farooquee pointing to the acquittals of Muslims years later, he added, “redressal mechanism is not working and therefore the frustration of Muslims has begin to spill over to the streets.”
Batla House Encounter had a political impact as well. Emergence of Rashtriya Ulama Council, a political party led by Muslim Ulema was in direct response to targeting of Azamagarh by media and police after the Batla House incident. Anger against Congress (ruling party in both Delhi and Centre at the time of the encounter) was prominent among Muslims of this constituency. Parvez Hashmi was barely able to win this seat in Delhi Assembly election. Asif Mohammad Khan won the next election on RJD ticket but then switched over to Congress and still managed to win Okhla assembly seat inspite of an AAP wave in Delhi.

Illegal detention and then false accusation of terrorism on Muslim youth is a real issue among Muslims. This encounter will be in the mind of the Muslims of not only this constituency but Muslims in states as far away as Bihar and Maharashtra. But their options unfortunately are limited. Their votes directly or indirectly end up supporting the party that they blame for putting them under this condition. But if the latest Shaheen Bagh episode is any indication, the fight against Muslim witch-hunting is going to be a political one.

Source: TwoCircles.net

Saturday, March 29, 2014

சிறப்புக் கட்டுரை: 'இதோ நாளைய சிற்பிகள்!'


கம்பீரமாய் திறக்கப்பட்ட இரும்புக்கதவுகள்.

வட சென்னையின் பிரபலமான கல்லூரி அது.

மாலை நேரம் சுமார் 6.30 மணி.

எதிரே வாகனங்கள் நெரிச்சலுடன் ஓடிக் கொண்டிருந்தன. கும்பல், கும்பல்களாய் மாலை நேர வகுப்பு மாணவர்கள், "மச்சிகளுடனும், ஜோ.. க்கியா யார்..' களுடனும் மும்மொழியில் வம்பளந்து கொண்டிருந்தார்கள்.

பழைய புகைவண்டிகளை ஞாபகப்படுத்த புகைகளாக கக்கிக் கொண்டிருந்தார்கள். 

நண்பர் ஒருவரின் வருகைக்காக அந்தக் கல்லூரியின் பக்கத்திலிருந்த கடையில் காத்திருந்தேன் நான்.

"டேய் மச்சி..! அதோ! ஒரு இண்ட் ஸீஸிகி ஹெல்மெட் இல்லாம வருது. அதை கொஞ்சம் கலாய்க்கலாமா?" - கும்பலிலிருந்த மாணவர் ஒருவர் நடு ரோடுக்கு வந்தார்.

"சார்... சார்..!"

45 வயது மதிக்கத்தக்க அந்த வாகனமோட்டி உடனே நின்றார். பின்னால் வேகமாக வந்த சைக்கிள் இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமலிருக்க பட்ட சிரமம் "சாவு கிராக்கி!"யாக வெளிப்பட்டது. 

"சார் ..! முன்னாலே ஹெல்மெட் கேஸ் பிடிக்கிறாங்க... பாத்துப் போங்க..!"

மாணவரின் பொய்யை மெய்யென்று நம்பிய அந்த நபர் வண்டியின் வேகத்தைக் குறைத்து பாதையின் முன்னால் எட்டி எட்டி பார்த்துக்  கொண்டே  எச்சரிக்கையுடன் சென்றார்.

இதைக் கண்டதும், மாணவர் கும்பலிலிருந்து "குபீர்" சிரிப்பொன்று வெளிப்பட்டது. 

வாகனமோட்டியை ஏமாற்றிய மாணவரின் முகத்தில் 1000 வாட்ஸ் பிரகாசம்  பளிச்சிட்டது.

அடுத்து அவர்களின் பார்வையில் பட்டது இரண்டு பெண்கள். அவர்களையும் அழாத குறைக்கு கேலி செய்து அனுப்பியது அந்த மாணவர் கும்பல்.

"டேய் .. மச்சி.. அதோ பார்! மாமா.. போறார்..!"

"மாமா... மாமா..!"  - இது சட்டத்தின் காவலர் ஒருவருக்கு வீசப்பட்ட ஏவுகணை. அவரும், "நமக்கேன் வம்பு?" என்று கண்டும் காணாமலும் சென்று விட்டார்.

ஒரு நாட்டிடின் முதுகெலும்பான இளைய சமுதாயம், ஒழுக்கம் குன்றிய மிக மோசமான நிலையில் அனுதினமும் உருவாகிக் கொண்டேயிருக்கிறது.

வருங்காலத்தின் மருத்துவர்கள், சட்ட வல்லுநர்கள், பொறியாளர்கள், சமுதாய சிந்தனையாளர்கள் இவர்கள்தான் என்று எண்ணும்போது, சோகம்தான் ஏற்படுகிறது. 

இளைய வயதிலேயே இறையச்சத்தை ஊட்டி, அதன் விளைவால் உண்டாகும் மேலான ஒழுக்கத்துடன் கூடிய கல்விமுறையைத் தவிர வேறு எதனாலும் இந்த இளந்தளிர்கள் திருந்தப் போவதில்லை. இவர்களால் புதிதிதாக நாட்டிற்கு ஒன்றும் ஆகப்போவதுமில்லை.

மாறுமா இந்த நிலை?

- சமரசம், டிசம்பர் 16-31 - 1987ல், பிரசுரமான கட்டுரை.

Friday, March 28, 2014

நடப்புச் செய்தி: ஊடகங்களின் ஒரு சார்பை எதிர்த்து மாணவர் ஊர்வலம்



ஊடகத்துறையினரின் ஒரு சார்பு போக்கை எதிர்த்து மாணவர்கள் தெருவில் இறங்கியிருக்கிறார்கள். 

27.03.2014 வியாழன் அன்று ராஜஸ்தானின் ஜெய்பூர் 'குளோபல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி' மாணவர்கள்தான் ஜெய்பூரின் தெருக்களில் இறங்கி போராடினார்கள். 

அமைதியாக நடந்த அந்த பேரணியில் பல்வேறு சமூக ஆர்வலர்கள், அமைப்பினர் கலந்து கொண்டனர். 

'இந்திய சிறுபான்மையினரான முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட செய்திகளில் ஊடகங்கள் நடந்து கொள்ளும் ஒரு சார்புடையப் போக்கு அவமானகரமானது, அப்பாவிகளின் வாழ்வுரிமையைப் பறிப்பது, நாங்கள் பொறியாளர்கள், வெடிகுண்டுகள் தயாரிப்பாளர்கள் அல்ல!' - போன்ற பதாகைகளை ஏந்திக் கொண்டு அவர்கள் கோஷமிட்டவாறே சென்றார்கள். 
எத்தகைய ஆதாரமும் இல்லாமல் தன்னிச்சையாக செய்திகளை வெளியிடும் ஊடகத்துறையினர் மீது உடனே நடவடிக்கை எடுக்கும்படியும் அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். இதனால், தேவையில்லாமல் மாணவர்கள் கைது செய்யப்படுவதாகவும், அவர்களின் வாழ்வு சீரழிவதாகவும், கைது செய்யப்படும் அப்பாவிகளுக்கான நீதி தாமதப்படுவது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்றும் அவர்கள் கோஷமிட்டார்கள். 

தேர்தல் சமயங்களில் சொல்லி வைத்தாற்போல, சிறுபான்மையினரை கைது செய்வதும் அவர்கள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை சுமத்துவதும் வழக்கமாகிவருகிறது.

இந்நிலையில் ஒரு சார்பாக திரிக்கப்பட்ட செய்திகள் வெளியிடும் ஊடகங்களால் மாணவர்களின் வாழ்க்கை சீரழிகிறது. புகழ் வாய்ந்த சமூக ஆர்வலர்கள்கூட எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் கைது நடவடிக்கைகளுக்கு ஆளாவதும், அவர்கள் சம்பந்தமாக எவ்வித சட்ட மீறல்கள் இல்லாத நிலையிலும், செய்திகளை ஊடகங்கள் திரித்து வெளியிடுவதும் அதிகரித்துவருகிறது. நமது அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் இது. 
இப்படி கைது செய்யப்படும் அப்பாவிகள் பல ஆண்டுகள் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைத்து வைத்திருப்பதும் பிறகு நிராபராதிகள் என்று விடுதலை செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. இது அவர்கள் இழந்து போன வாழ்வை ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் அப்பாவி சிறுபான்மையின இளைஞர்களை கைது செய்யும் காவல்துறையினர் மீதும்,  அது குறித்து திரித்து செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குளோபல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி மாணவர்கள் வலியுறுத்தினார்கள். இதில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலையிட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

சமய நல்லிணக்கத்துடன் வாழ்வதே ஒவ்வொரு மாணவனின் விருப்பமாகும் என்பதையும் அவர்கள் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

Thursday, March 27, 2014

Vizhigal - Life - வாழ்வியல்

Monday, March 24, 2014

Saturday, March 22, 2014

Thursday, March 20, 2014

Vizhigal - Hunters, 'வேட்டையர்'

Tuesday, March 18, 2014

விருந்தினர் பக்கம்: 'தேர்தல் கால சோதனைகள்: பறிமுதல் செய்யப்படும் பணம், நகைகள்'

 
தேர்தல்களின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தேர்தல் கலாச்சாரமாகவே மாறிவிட்டது.

மற்றும்,கம்மல்,தோடு,புடவை,வேட்டி,குத்துவிளக்கு,குடம் போன்ற இதர பரிசுப் பொருட்களும் உண்டு. பரிசுப் பொருட்களின் போக்குவரத்தையும், பணப் பறிமாற்றத்தையும் முடக்குவதற்காக தேர்தல் ஆணையம் அதிரடி சோதனைகளை செய்து வருகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 108 அவசரவூர்தி மற்றும் அரசு வாகனங்களில் வாகாளர்களுக்கு  கொடுப்பதற்கு பணம் எடுத்துச் சென்ற போது பறக்கும் படையினர் சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனையிட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். தேர்தல்  தேதியை அறிவித்து விட்டால், நாடு முழுமைக்கும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். ஐ.ஏஎஸ் ,ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றுவது, வேட்பாளர்களை தகுதி நீக்குவது, வழக்கு தொடுப்பது என்று அதிக அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, மத்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஒய்.எஸ்.எம் குரேஷி ஹீரோவாக வலம் வந்தார். அவரது பதிலியாக பிரவீண்குமார்  தமிழகத்தில் திறமையாக செயல்பட்டார். இப்போதும் பிரவீண்குமார் தான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து வருகிறார்.

தேர்தலை முன்னிட்டு ரூ 1 லட்சத்துக்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஒரு லட்சத்துக்கும் அதிகமாக வங்கிகளில் பணம் முதலீடு செய்யப்பட்டால் வங்கி மேலாளர் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, காவல்துறையினர் செய்து வரும் சோதனையில் இதுவரை 6 கோடியே 85 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 46 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள தங்க கட்டிகளும் ஒரு கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .
மார்ச் 12 ஆம் தேதி, சென்னையில், மையிலாப்பூர் லஸ்-கார்னரில் ஒரு வாகனத்தை சோதனையிட்டபோது, ஐந்து பொதிகளில் 22 கிலோ தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரியவரிடம் அதற்கான ஆவணம் இல்லாததால் அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆவடி, அயம்பாக்கத்தில் ஒரு காரில் இருந்து 60 லட்சமும், வளசரவாக்கம் ஆழ்வார்திருநகர், சமிக்கை முனையத்தில் (Signal) ஒரு காரில் இருந்து 2 லட்சமும், மூலக்கடை சமீக்கை பகுதியில் ஒரு வாகனத்தில் 10 லட்ச ரூபாயும், கூடுவாஞ்சேரி –நெல்லிகுப்பம் சாலையில் ஒரு காரில் இருந்து 1.5 லட்சம் ரூபாயும், செங்குன்றம் சாலையில் சென்ற கார் ஒன்றில் இருந்து 500 கிராம் தங்கமும் என ஒரே நாளில் 23  கிலோ கிராம் தங்கமும், 78 லட்ச ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நகைகளையும் பணத்தையும் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை காட்டி மீட்டுக் கொள்ளலாம் என்கிறது தேர்தல் ஆணையம். உரிய ஆவணம் இல்லாத காரணத்தால் பறிகொடுத்தவர்கள் கோரவில்லையென்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

2011, தமிழக சட்டமன்ற தேர்தலின் போது, திருச்சியில் ஒரு பேருந்தில் இருந்து 5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. மொத்தமாக 36 கோடி ரூபாய் பிடிபட்டது. பிடிபட்ட தொகையைக் கேட்டு யாரும் வராத காரணத்தால் வருமான வரிதுறையிடம் அந்தப் பணம் ஒப்படைக்கப்பட்டது. இன்றுவரையிலும் யாரும் பணத்தை கேட்டு வரவில்லை. ஆவணம் இல்லாத தொகை, தங்க கட்டிகள் மற்றும் நகைகளும் சட்டவிரோதமானவை என்றே கருதலாம்.

ஐந்து ஆண்டுகள் அல்லது இரண்டு, மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு மாநிலங்களிலோ அல்லது மத்தியிலோ ஒன்று அல்லது இரண்டு முறைகள் தேர்தல்கள் எதிர்படுகின்றன. இத்தகைய தேர்தல் சமயங்களில் மட்டும் இச்சோதனைகள் நடத்தப்பட்டு உரிய ஆவணங்கள் இல்லாத கோடிக்கணக்கான கைப்பற்றப்படுகிறது. அதாவது அரசுக்கு கிடைக்க வேண்டிய பல லட்சக்கணக்கான வரி ஏய்ப்பு நடக்கிறது என்பதே இதன் பொருள். குறிப்பாக நடுத்தர வர்க்க வணிகர்கள் அரசுக்கு முறையாக கணக்கு காட்டுவதும் இல்லை; வரி கட்டுவதும் இல்லை.

 சில மாதங்களுக்கு முன்பாக பெல்லாரி வெங்காயம் பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டபோது, பதுக்கள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வருமான வரித்துறையினர் வியாபாரிகளின் வீடுகளில் சோதனையிட்ட போது, கணக்கில் வராத லட்சக்கணக்கான தொகையைப் பறிமுதல் செய்தனர்.

அரசியல்வாதிகளை ஊழல் செய்வதாக லஞ்சம் வாங்குவதாக பணத்தை பதுக்குவதாக   பொது மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், குற்றம் சாட்டப்படும் மக்களே பணம் மற்றும் அத்யாவசிய பொருட்களை பதுக்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் அரசுக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை உண்டாகிறது. நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் சுனக்கமும் நிதிச்சுமையும் உண்டாகிறது.

பொதுமக்கள் பணம் பதுக்கல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் வங்கிகள் மூலம் முறையான பண பறிமாற்றம் செய்தாலே அரசுக்கு அதிக லாபம் கிட்டும். இது மீண்டும் மக்கள் நலத்திட்டங்களுக் பயனாகி அதன் ஆதாயம் மக்களுக்கே வந்து சேரும். 
 
அதேபோல, இந்தத் தொகை அரசு உள்கட்டமைப்புகள் வலுப்படவும்,  விவசாயம் மற்றும் தொழில்துறைகள் செழிக்கவும் உதவும். நமது நாடும் வல்லரசாகும்.
 
ஆனால் மக்களே வரி ஏய்ப்பு செய்ய நினைத்தால் அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் ஏன் ஊழல் செய்யமாட்டார்கள்.
 
ஆனால் நாள்தோறும் எவ்வித தடைகளும், கேட்பாறுமின்றி இந்திய சாலைகளில் கருப்பு பணமும், சட்டவிரோத ஆபரணங்களும் பல்லாயிரம் கோடிக்கு இடம்மாறிக் கொண்டிருக்கின்றன  என்பதையே தேர்தல் ஆணையத்தின் பறிமுதல்கள் உணர்த்துகின்றன. 
 
அதனால், தேர்தல் ஆணையத்தைப் போல அதிகாரம் கொண்ட ஓர் அமைப்பு நித்தமும் சாலை சோதனைகளில் ஈடுபட்டால் கருப்பு பணம் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம். தங்கம், வெள்ளி கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களையும் கட்டுப்படுத்தலாம். வருவாய்துறைக்கும் நிதிதுறைக்கும் அதிகமான வருவாயையும் ஈட்டுத்தரலாம்.

- ஜி. அத்தேஷ்.

Thursday, March 13, 2014

News In English: 'Is Indian economy really in tatters? Is Narendra Modi THE guy who can ‘fix’ it?


The general perception in the country is that due to its imprudent fiscal policy, the UPA has driven our economy to the ground. While it would be fair to say that the central government could have done a better job, one should avoid getting carried away while judging them. In order to better understand their performance we need to be cognizant of the fact that the UPA has battled a once-in-lifetime near-depression, for almost half of its tenure. And,to get a more holistic picture we need to compare India’s performance with the rest of the world, during the same period. Once we do that, it becomes quite obvious that while things could have been better, they could have very easily been worse.

During his speeches, Narendra Modi often claims that once he becomes the Prime Minister of the country, he would revive the economy that has been severely ‘mismanaged’ by Dr Manmohan Singh and P Chidambaram. The general elections are just a month away and Modi is yet to share his detailed economic plan with us, highlighting how exactly he plans to ‘fix’ the economy (which according to many economists is still fundamentally strong).

After assessing Modi’s performance in managing the finances of his state, I for one am not inclined to believe that he is in possession of a panacea, which could cure anything and everything. (Read: Arvind Kejriwal is right. Narendra Modi’s Gujarat growth story is the biggest public relations con-job of our time)

As on March 2012, Gujarat’s debt was Rs 138,978 cr (projected to reach Rs 176,000 cr in 2013–14), only West Bengal (Rs 192,000 cr) and Uttar Pradesh (Rs 158,000 cr) have a higher debt than Gujarat. The state’s debt when divided among its six crore populace gives a per capita debt of approximately Rs 23,000, the highest among all major states. What is interesting to note is the fact that Gujarat’s debt has increased by more than three times since Modi became chief minister, it was Rs 45,301 cr in 2001–02.

Economists would tell us that high debt on its own may not be a bad thing; several good companies are highly leveraged because they borrow money to invest and create capital assets which in turn contribute to higher revenue. But, in case of Gujarat, a lot of spending has been done on ‘showpiece’ infrastructure projects – while spending on key sectors (such as health and education) has been low.

According to the CAG report on state finances (for the year ending March 2011), the average return on state government’s investments in statutory corporations, rural banks, joint stock companies and co-operatives was 0.25 per cent in the last three years; while the government paid an average 7.67 per cent as interest on its borrowings during 2008–09 to 2010–11.

The CAG report also talks about the poor debt management of the Gujarat government; the state has incurred 41% higher debt than the last financial year and burdened the exchequer with heavy interest liability at a higher rate.The report criticizes the entire state government, but, it is particularly harsh on the finance and public sectors – which are found to be the least efficient.

The financial woes of the state government are further highlighted by their stance on the seventh pay commission. Gujarat is one of the only two states (the other being West Bengal) that have expressed discomfort over implementing the seventh pay commission.The state government has stated that the seventh pay commission would lead to an unsolicited financial strain on the state, which they cannot afford.

When the finances of the state, where Narendra Modi has been the chief minister for the past 12 years, are in dire straits; wouldn’t it be foolish on our part, to expect him to have a magic wand that can ‘fix’ the country’s economy.

Source: India.com

தேர்தல்கள் 2014: மதசார்பற்ற கட்சிகளிடம் பேசத் தயாராக இருக்கிறோம்:வெல்பர் பார்ட்டி


மக்களவை தேர்தல்கள் வருவதற்கு இன்னும் ஒரு மாதமே இருக்க அரசியல் கட்சிகள் இறக்கைக் கட்டிக் கொண்டு பறந்து கொண்டிருக்கும் நேரமிது.

சாக்கடை என்றழைக்கப்படும் இந்திய அரசியல் அரங்கில் ஒழுக்க மாண்புகளே பிரதான கோஷமாகவும், வாக்காளர்களை ஈர்க்கும் ‘வளர்ச்சி’ மந்திரத்துடனும் களமிறங்கியுள்ள அரசியல் கட்சி ‘வெல்பர் பார்ட்டி ஆஃப் இந்தியா (WPI). அதன் ஆந்திர மாநில தலைவர் மலிக் முக்தஸின் கான். இவர் வகுப்புவாதிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற முழு வீச்சுடன் களத்தில் இருக்கிறார். அவருடன் ஒரு நேர்காணல்:

கேள்வி: அண்மையில் மாநிலத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தல்களில் கலந்து கொண்டு கணிசமான முறையில் வெற்றிப் பெற்றிருக்கின்ற அனுபவம் உங்கள் கட்சிக்கு உண்டு. அப்போது, கிராமப்புற மக்களோடு பழகும் போது உங்களுக்கு ஏற்பட்ட பொறுப்புணர்வுகள் என்ன?

பதில்: உண்மையிலேயே அந்த பஞ்சாயத்து தேர்தல்களில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். வாக்காளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக எந்தவிதமான ஒழுக்க விரோதமான செயல்களிலோ, சட்டவிரோதமான காரியங்களிலோ நாங்கள் இறங்கவில்லை.
மக்களும் எங்களின் எளிய நேர்மையான அணுகுமுறையைக் மிகவும் விரும்பினார்கள்.

அதேபோல, மக்களின் முன்னேற்றத்துக்காக நாங்கள் வகுத்திருந்த திட்டங்கள் மீதும் முழுமையாக நம்பிக்கை தெரிவித்தாகள்.
நாங்கள் முன் வைத்த ஒழுக்க மாண்புகளின்  அடிப்படையிலான அரசியலுக்கு அவர்கள் காட்டிய நேர்மறை அக்கறை எங்கள் மனவுறுதியை இன்னும் அதிகரிக்கவே செய்தது.

வரவிருக்கும் தேர்தல்களிலும் நாங்கள் களம் காண தயாராகவே உள்ளோம்.

கேள்வி: வெறும் இரண்டே வயது கொண்ட உங்கள் கட்சி வரவிருக்கும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் தேர்தல்களில் பங்கெடுப்பது அவசரப்படுவதாகாதா? இது சரியானதாக இருக்குமா?

பதில்: தேர்தல்களில் பங்கெடுத்து போராடுவது என்பது தனிநபரது அல்லது கட்சியின் மனஉறுதியை அதிகரிக்கவே செய்யும்.

மக்களுக்கு சேவைச் செய்ய வேண்டும் என்று ஆசையிருந்தால், தீமைகளை எதிர்கொள்ள உங்களுக்குத் துணிச்சலிருந்தால் மற்ற எதுவும் பிரச்னையாக எழாது.

ஒழுக்க மாண்புகளின் அடிப்படையிலான அரசியலுக்கு நாங்கள் உத்திரவாதம் தருகிறோம். அதேபோல எந்த கிரிமினல் பின்னணியும் இல்லாத வேட்பாளர்களையே நாங்கள் தேர்வு செய்கிறோம்.

கேள்வி: TRS, காங்கிரஸ், TDP, MIM மற்றும் YSRCP போன்ற பிரதான கட்சி போட்டியாளகளை களத்தில் எதிர்கொள்வதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: வகுப்புவாத சக்திகளை எதிர்கொள்வதே கட்சியின் நிலைபாடு.

அதனால், நாங்கள் நிச்சயமாக மதசார்பற்ற கட்சிகளுடன் பேசத் தயாராக இருக்கிறோம். வகுப்புவாத சக்திக்கு எதிராக மேடையமைக் கவும்  தயாராக உள்ளோம். மத்தியிலும், மாநிலத்திலும் கிரிமினல் அல்லாத வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்படி வாக்களர்ளை கட்சி வலியுறுத்தும்.

கேள்வி: மோடி அலையும், ஆம் ஆத்மியின் மந்திரக் கோலசைவுகளும்  பெரிதாக பேசப்படும் இத்தருணத்தில் வாக்காளர்களிடம் உங்கள் அணுகுமுறை எப்படி இருக்கும்?

பதில்: இந்தியா போன்ற ஒரு பரந்த, விரிந்த நாட்டில் ஒவ்வொரு பிரபலத்துக்கும் ஆதரவாளர்கள் இருக்கத்தான் செய்வார்கள். மோடிக்கும் நிச்சயம் ஆதரவாளர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்யும். இதை வைத்து அவர் பிரதமராகிவிடுவார் என்று சொல்ல முடியாது.

இந்தியாவின் அரசியல் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் பல்வேறு தருணங்களில் மதசார்பற்றவாதிகளைதான் மக்கள் தங்கள் பிரதமராக தேர்வு செய்துள்ளார்கள்.

மோடி ஊடகங்களால் பெரிது படுத்தப்படுகிறார். ஆனால், உண்மை நிலை அப்படி இல்லை.

ஆம் ஆத்மியை எடுத்துக் கொண்டால், மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்து அது தில்லியில் ஆட்சிக்கு வந்தது. ஒரு சில வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு பெரும்பகுதி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வெறும் 49 நாட்களில் அது ஆட்சியையை விட்டு இறங்கிவிட்டது.

கேஜரிவாலிடமும் அவரது கட்சியினரிடமும் மக்கள் இதை எதிர்பார்க்கவில்லை. அத்தோடு தேசிய அளவிலான பல்வேறு பிரச்னைகளுக்கு ஆம் ஆத்மியிடம் தெளிவான பதில்கள் இல்லை.

கேள்வி: ஆம் ஆத்மி மற்றும் வெல்பர் பார்ட்டியின் தேர்தல் அறிக்கைகளை ஒப்பிட்டால் அவற்றில் பல ஒற்றுமைகள் உள்ளன. இதை வைத்து ஆம் ஆத்மியுடன் வெல்பர் பார்ட்டி தேர்தல் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் உண்டா?

பதில்: ஒத்த கொள்கை, செயல்திட்டங்கள் கொண்ட அரசியல் கட்சிகளுக் கிடையே கூட்டணி ஏற்பட வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதிற்கில்லை. ஆனால், ஆம் ஆத்மியின் தற்போதுள்ள சூழலில் கூட்டணி அமைத்துக் கொள்ளும் வாய்ப்பில்லை.

ஆனால், மக்களுக்கு நன்மைத்தரக்கூடிய விஷயங்களில் ஒத்தக் கருத்துடைய கட்சிகள் தங்களுக்கிடையே ஆதரவளித்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.

நற்பணிகளில் நாங்கள் எல்லா கட்சிகளுடனும் இணைந்திருக்கவே விரும்புகின்றோம்.

கேள்வி: நீங்கள் தனித்தெலுங்கான இயக்கத்திற்கான அதி முக்கிய ஆதரவாளர். ‘தெலுங்கானா கர்ஜனா’ ஊர்வலங்களையும் முன்னின்று நடத்தியிருக்கிறீர்கள். வரவிருக்கும் தேர்தல்களில் ஒருவேளை TRS பாஜாகவுக்கு ஆதரவளித்தால் உங்கள் நிலைப்பாடு எப்படியிருக்கும்?

பதில்: தனி மாநிலம் வேண்டி நடத்தப்பட்ட தெலுங்கானா இயக்கத்தையும், TRS யும் தனித்தனியாகவே நான் பார்க்க விரும்புகின்றேன்.

தெலுங்கான இயக்கத்தில் TRS முன்னணியில் நின்று போராடிய கட்சி.

ஒரு சமூகத்தின் தலைவன் என்ற ரீதியில் அதற்கு நான் ஆதரவு தந்தேன்.

TRS வரவிருக்கும் தேர்தல்களுக்கான நிலைப்பாட்டை இதுவரையிலும் அறிவிக்கவில்லை. அதனால், இந்தக் கேள்வியை தவிர்ப்பதே நல்லது.

கேள்வி: வரவிருக்கும் மக்களவை தேர்தல்களில் நீங்கள் போட்டியிட விரும்புவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. அது உண்மை என்றால், நீங்கள் போட்டியிட இருக்கும் தொகுதி எது?

பதில்: ஆம்.. மக்களவைத் தேர்தல்களில் நான் பங்கெடுக்க இருக்கிறேன். இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படா விட்டாலும், நிஜாமாபாத்தையே நான் தேர்வு செய்திருக்கிறேன். அது எனக்குப் பொருத்தமான தொகுதியும்கூட.
நான் நிஜாமாபாத்தை சேர்ந்தவனாகையால் என் மக்களுக்கு சேவைச் செய்யவே நான் விரும்புகின்றேன்.

கேள்வி: அப்படியானால் என்னென்ன விஷயங்களை தொகுதி வளர்ச்சிக்காக செய்யவிருக்கிறீர்கள்? அதிலும் குறிப்பாக மக்களிடம் வாக்கு சேகரிக்கும்போது தாங்கள் அளிக்க இருக்கும் வாக்குறுதிகள் என்னென்ன..?

பதில்: நிஜாமாபாத் வளர்ச்சிக்கு என்னால் முடிந்தளவு பாடுபடுவேன்.

தற்போது மக்களிடம் வாக்குறுதி அளித்து வெற்றிப் பெற்று வரும் அரசியல்வாதிகள் அற்பமானவற்றை செய்து வளர்ச்சிக்கான சாதனைகள் என்கிறார்கள்.

முன்னுரிமையின் அடிப்படையில் இவற்றை நான் வரிசைப்படுத்தி வைத்திருக்கிறேன்:

>>>சர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிர் அளிப்பது.

>>>நிஜாமாபாத்துக்கும், கரீம்நகருக்கும் ரயில்பாதை அமைப்பது.

>>>உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது.

>>>அரசின் எல்லா நலத்திட்டங்களையும் செயல்படுத்துவது.

>>>சேரிப்பகுதிகளில் வாழும் மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடுவது.

ஒரு பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை இனத்தவன் என்ற ரீதியில் என் சமூகம் போலவே அடிமட்டத்திலிருக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்துப்பட்டவர் நலன்களுக்காக பாடுபடுவேன்.

Source: TwoCircle.net

பெஸ்ட் கிளிக்:'கடற்கழி'

சென்னை, எண்ணூர், கடற்கழி

Monday, March 10, 2014

தேர்தல்கள் 2014: 'இடதுசாரிகளின் தேர்தல் நிலைப்பாடு'

 
ஊழல் நிறைந்த மத்திய காங்கிரஸ் அரசை பதவியிலிருந்து இறக்க வேண்டும். வகுப்புவாத சக்தியான பாஜகாவை வளரவிடக்கூடாது என்ற அடிப்படையிலேயே இடதுசாரிகள் வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்கின்றனர். புதிய பிரதமர் மட்டும் இந்த பிரச்னைக்கு தீர்வாகாது. காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றான கொள்கை கொண்ட மாற்று அரசு என்பதே சரியான தீர்வாகும்.
 
மாற்றுக் கொள்கை கொண்ட அரசு அமைய இடதுசாரிகள் பலப்பட வேண்டும். இடதுசாரி மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், மாநிலங்களவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணியில்லாத அரசியல் கட்சிகளுடன் இடதுசாரிகள் கூட்டணி அமைத்துள்ளனர்.
 
இந்த அடிப்படையிலும், புதுதில்லியில் நடத்தப்பட்ட மதவாத எதிர்ப்புக் கூட்டத்தில் அதிமுக பிரதிநிதி பங்கேற்றார் என்ற அடிப்படையிலும் தமிழகத்தில் இடதுசாரிகள் – அதிமுக கூட்டணி ஏற்பட்டது. தற்போது இடதுசாரிகளுடன் தொகுதி உடன்பாடு இல்லை என்ற நிலையை அதிமுக தன்னிச்சையாக மேற்கொண்டுள்ளது.
 
மாநில அளவிலும், தேசிய அளவிலும் இடதுசாரிகளை ஓரங்கட்டி அல்லது புறக்கணித்து மாற்று அரசை அமைக்க முடியாது.
 
தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து, வரும் மக்களவைத் தேர்தலைச் சந்திக்கின்றன. இடதுசாரிகள் தங்களுக்கான பாதையில் மாற்றுக் கொள்கைகளை முன்னெடுத்து இந்தத் தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளன.
 
தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றாக வெற்றிக் கண்ட கட்சிகளுடன் கைக்கோர்த்து மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி  செய்யும் வகையில் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மாற்று அரசை அமைக்கும் முயற்சிகளை இடதுசாரிகள் முன்னெடுப்பர்”
 
- தேசியப் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

Sunday, March 9, 2014

தேர்தல்கள் 2014: நாடாளுமன்றத்தில் பெண்கள்: 'சாமான்யோர் நாடாள்வது எப்போது?


உலகளவில்  நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான 189 நாடுகளின் பட்டியலில் இந்தியா 111 இடத்தில் உள்ளது. 60 விழுக்காட்டுடன் ருவாண்டா முன்னிலை வகிக்கிறது.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘தி இன்டர்-பார்லிமெண்ட் யூனியன்’ என்ற அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வருகிறது. உலக நாடுகளின் நாடாளுமன்றங்களில் அதிக பெண் உறுப்பினர்கள் கொண்ட நாடுகள் குறித்து ஆண்டுதோறும் இந்த அமைப்பால் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அதன் அடிப்படையில் அறிக்கை வெளியிடப்படுகிறது.

சாமான்யர்கள் நாடாள்வது எப்போது?
08.03.2014 சனிக்கிழமை சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அந்த ஆய்வறிக்கையின்படி, 545 உறுப்பினர்கள் கொண்ட இந்திய மக்களவையில் 62 பெண்கள் இடம்  பெற்றிருக்கிறார்கள். 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் 28 பேர் பெண்கள். இரு அவைகளிலும் 11.4 விழுக்காடு பெண்களே இடம் பெற்றுள்ளனர்.

இதில் எல்லோரும் மூக்கில் விரலை வைத்து வியக்கும் வண்ணம் ஆப்பிரிக்காவின் ருவாண்டா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் 60 விழுக்காடு பேர் பெண்கள். அதைத் தொடர்ந்து அன்டோரா, கியூபா, சுவீடன், தென்னாப்பிரிக்கா நாடுகள் இடம் பிடித்துள்ளன.

பட்டியலின் வரிசைப்படி, அமெரிக்கா 83 இடத்திலும், கனடா 54 இடத்திலும் உள்ளன.

தெற்கு ஆசிய நாடாளுமன்றங்களில் அதிக பெண் உறுப்பினர்கள் கொண்ட நாடாக நேபாளம் திகழ்கிறது. அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் 30 விழுக்காடு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள் 2014:'யாராலும் புறக்கணித்துவிட முடியாது'

 
து.ராஜா,தேசிய செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
கேள்வி: கூட்டணியிலிருந்து இடதுசாரிகளை அதிமுக வெளியேற்றி யுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: அதிமுகவுக்குப் பல அரசியல் காரணங்கள் இருக்கக் கூடும். அந்தக் காரணங்களை நான் ஆராய்ந்து பார்க்க விரும்பவில்லை. மக்களுக்கே அது தெரிய வரும்.

கேள்வி: திமுக கூட்டணிக்கு வருமாறு இடதுசாரிகளை கருணாநிதி அழைத்துள்ளார். அது ஏற்கப்படுமா?

பதில்: கருணாநிதியின் அழைப்பு எங்கள் கவனத்துக்கு வந்தது. மாநில அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளும் சந்தித்துப் பேசியுள்ளனர். அதிமுகவுடன் உறவு முறிந்துள்ள நிலையில் எந்த முடிவு எடுத்தாலும் இடதுசாரி கட்சிகள் இணைந்தே எடுப்பது என முடிவு செய்துள்ளனர். மாநிலக் குழு எடுக்கும் முடிவு, மத்தியக் குழுவின் கவனத்துக்கு வரும். அகில இந்திய அளவில் உள்ள அரசியல் நிலவரத்துக்கு ஏற்ப, மாநில குழுவின் கருத்தை ஏற்கவோ அல்லது வேறு வகையில் வழிகாட்டவோ மத்தியக் குழுவுக்கு அதிகாரம் உண்டு. அதன்படி இடதுசாரிகளின் முடிவு இருக்கும்.

கேள்வி:  இடதுசாரிகள் தலைமையில் தமிழகத்தில் தனி அணி அமையுமா?

பதில்: இடதுசாரிகள் தலைமையில் தனி அணி அமைய வேண்டும் என்பதுதான் எல்லோரின் விருப்பம். ஆனால், உடனடியாக அமைவதற்கு சாத்தியம் இல்லை. எல்லாக் கட்சிகளும் அணியை அமைத்துவிட்டன. எதிர்காலத்தில் அப்படியொரு சூழல் வரலாம். 

கேள்வி: இடதுசாரிகளுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

பதில்: தமிழக அரசியலில் யாராலும் கம்யூனிஸ்ட் கட்சிகளைப் புறக்கணித்துவிட முடியாது. நீண்ட பாரம்பர்யம் கொண்ட இயக்கங்கள். பல்வேறு இடங்களில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாகவே இடதுசாரிகள் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.

நன்றி: தினமணி ( 09.03.2014)
 

Saturday, March 8, 2014

நடப்புச் செய்தி: 'வீர லட்சுமி"


விருது பெற்ற லட்சுமையை அணைத்துக் கொண்டிருக்கும் மிஷெல் ஒபாமா
"நீங்கள் என் முகத்தின் மீது,
திராவகம் வீசவில்லை ;
என் கனவுகள் மீது
வீசப்பட்ட திராவமது.

உங்கள் இதயத்தில் 
அன்பில்லை!
திராவகத்தால் அது
நிறைந்திருந்தது!

நேசத்தை ஒருபோதும்
வெளிப்படுத்தாத கண்கள்..
சுட்டெரிக்கும் பார்வையால்
என்னை எரியூட்டின!

நான் இம்முகத்தை 
சுமந்தலையும்போது,
என் அடையாளத்தின்
ஒரு பகுதியாய் உங்கள்
அரித்தழிக்கும் பெயர்கள்
இணைந்திருப்பது
எனக்கு சோகமூட்டுகிறது!

காலம் என்னை மீட்கவில்லை;
ஒவ்வொரு வியாழனும் 
உங்களை நினைவூட்டிக்
கொண்டேயிருக்கிறது!"

- சர்வதேசவீரப் பெண் விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் லட்சுமி வாசித்த கவிதை வரிகள் இவை. 

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் சர்வதேச வீரப் பெண் விருது ஆப்கனிஸ்தான், பிஜி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவின் லட்சுமிக்கு திராவகத் தாக்குதல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் துணிச்சலாக ஈடுபட்டு வருவதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. அமெரிக்க அதிபரின் மனைவி மிஷெல் ஒபாமா இந்த விருதுகளை வழங்கினார்.

Thursday, March 6, 2014

சிறப்புக் கட்டுரை:'தேர்தல்கள் 2014'


'அடுத்த இந்திய அதிகாரம் யாருக்கு?' - என்று தீர்மானிக்கும் மக்களவைத் தேர்தலுக்கான நாள் குறிப்பிடப்பட்டுவிட்டது. ஏப்.7-ல், தொடங்கி இந்திய தேர்தல்கள் வரலாற்றிலேயே அதிகமான 9 கட்டங்களாக, மக்களவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது.

தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக அதாவது தமிழகம் 39 தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதி என்று மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 24 –ல், வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் அறிவித்தார். ஆலந்தூர் தொகுதியில் பண்ருட்டி ராமச்சந்திரன் தனது எம்எல்ஏ பதவியை ராஜனாமாக செய்துவிட்டதால் அந்த தொகுதிக்கும் ஏப்ரல் 24–ல், இடைத்தேர்தல் தேர்தல் நடைபெறும். 

மக்களவைக்கான மொத்தம் 543 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 16-ல், எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

மக்களவையின் பதவிக் காலம் ஜுன் மாதம் 1-ம், தேதியுடன் நிறைவடைகிறது. அதனால், மே மாதம் 31-ம், தேதிக்குள் புதிய அரசு பதவியேற்றாக வேண்டும். இந்தச் சூழலை முன்வைத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அரசியல் கட்சிகள், மாநில தேர்தல் ஆணையர்கள், பாதுகாப்புத்துறையினர், காவல்துறை அதிகாரிகள் ஆகியோருடன் தேர்தல் ஆணையம் தீவிரமான ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்துள்ளது. 


05.03.2014 புதன் அன்று தில்லியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. தெலுங்கானாவை உள்ளடக்கிய ஆந்திரம், ஒடிஸா, சிக்கிம் மாநில சட்டப் பேரவை தேர்தல்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற வேண்டிய சட்டப் பேரவைக்கான இடைத் தேர்தல்கள் சம்பந்தமான விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. 

இந்த தேர்தல்களில் மொத்தம் 81.4 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய இருக்கிறார்கள். கடந்த 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் இந்த எண்ணிக்கை 71.3 கோடியாக இருந்தது. தற்போது நடைபெறும் தேர்தல்களில் 18 முதல் 19 வயது வரையிலான 2.3 கோடி பேர் புதிதாக வாக்களிக்கும் தகுதியைப் பெறுகிறார்கள். 



  • முதல் கட்டமாக ஏப்ரல் 7-ல், அஸ்ஸாம், திரிபுரா ஆகிய 2 மாநிலங்களின் 6 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்கு பதிவுகள் நடைபெறுகின்றன.
  • இதைத் தொடர்ந்து 2-ஆவது கட்டமாக ஏப்ரல் 9-ல், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளுக்கு தேர்தல் நடைப்பெறும்.
  • 3-வது கட்டமாக ஏப்ரல் 10-ல், 14 மாநிலங்களில் உள்ள 92 தொகுதிகளுக்கும்,
  • 4-வது கட்டமாக ஏப்ரல் 12-ல், 3 மாநிலங்களின் 5 தொகுதிகளுக்கும் வாக்குபதிவு நடைபெறுகிறது.
  • 5-வது கட்டமாக ஏப்ரல் 17-ல், 13 மாநிலங்களின் 122 தொகுதிகளுக்கும்,
  • 6-வது கட்டமாக ஏப்ரல் 24-ல், 12 மாநிலங்களின் 117 தொகுதிகளுக்கும்,
  • 7-வது கட்டமாக ஏப்ரல் 30-ல், நாட்டின் 9 மாநிலங்களின் 89 தொகுதிகளுக்கும் தேர்தல்கள் நடைபெறும்.
  • 8-வது கட்டமாக மே 7-ல், 7 மாநிலங்களில் உள்ள 64 தொகுதிகளுக்கும்,
  • 9-வது இறுதி கட்டமாக மே 12-ல், 3 மாநிலங்களின் 41 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 
 

ஆந்திரத்தில் மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு ஏப்ரல் 30 மற்றும் மே 7-ல், தேர்தல்கள் நடைபெறும். ஏப்ரல் 30-ல், தெலுங்கானா பகுதியில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகள், 119 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் மே 7-ல், சீமாந்திரா பகுதியில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளிலும், 175 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறும். 
 
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால், அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கம் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. 

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்கு கடைசி வாய்ப்பு ஒன்றை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. தங்களது பெயரை சேர்க்க நாடு முழுவதும் 9.30 லட்சம் வாக்குச் சாவடிகளில் மார்ச்ச 9-ல் சிறப்பு முகாமுக்கு அது ஏற்பாடு செய்துள்ளது. 

தேர்தலுக்காக 17 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த உள்ளன. தேர்தல் பணிகளுக்காக 1.1 கோடி அதிகாரிகள் ஈடுபட உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் படையினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று குறிப்பிடும் ‘நோட்டா’ முறை இந்த மக்களவைத் தேர்தல்களில்தான் முதன் முறையாக நாடு முழுவதும் அறிமுகப்படுத்த உள்ளது. 

அதேபோல, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யவும் இந்தத் தேர்தல்களில் வசதி செய்யப்பட்டுள்ளது. 

தேர்தலில் எந்த வேட்பாளருக்கு, எந்தச் சின்னத்தில் வாக்களித்தோம் என்பதை வாக்குச் செலுத்திய உடனேயே வெளிவரும் காகித சீட்டு மூலம் வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் புதிய முறை இது. சோதனை முறையில் மக்களவைத் தேர்தல்களில் இது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்த உடன் அதை உறுதி செய்யும் விதத்தில் காகித சீட்டு ஒன்று வெளியே வரும். அதில் எந்த வேட்பாளருக்கு, எந்தச் சின்னத்தில் வாக்களித்தோம் என்பது தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த காகித சீட்டு பின்னர் அருகில் உள்ள சீலிடப்பட்ட பெட்டிக்கு தானாகவே சென்றுவிடும்.


தமிழகத்தில் மக்களவைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்களை மார்ச் 29 முதல் தாக்கல் செய்யலாம். வாக்குப் பதிவு மே 16 அன்று நடைபெறும். என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

காங்கிரஸின் இயலாமை, வகுப்புவாத்தின் ஆர்ப்பாட்டம், ஆம் ஆத்மியின் போராட்டமுமாய் இந்த தேர்தல் இந்திய வரலாற்றில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


  

Wednesday, March 5, 2014

News In English: '’ Facebook Buying Drones?’

 
Internet giant Facebook is reportedly in talks to buy Titan Aerospace, a manufacturer of solar-powered drones that can stay airborne for five years at a time.

The acquisition of the New Mexico-based company would reportedly be part of the Internet.org initiative, of which Facebook is a founding partner, whose goal is to bring Internet access to parts of the world currently not connected to the web.

TechCrunch, first to report on the potential $60 million-acquisition, wrote that the company would start by building 11,000 of Titan’s Solara 60 “atmospheric satellite” model of solar drones, which would provide a a less expensive alternative to an orbital satellite.

On its website, Titan states that these “atmospheric satellite” are in the development phase.

Titan unveiled its Solara 50 and 60 prototypes in August at the AUVSI Unmanned Systems 2013 conference.

Another web giant, Google, has its own, similar project in the works. Instead of drones, its “Project Loon” would use a network of floating balloons to provide Internet access. Google is continuing testing on its Loon project in California.

Source: Common Dreams

Tuesday, March 4, 2014

சிறப்புக் கட்டுரை: 'இனவெறியை வெட்டி எறியாமல், கட்டி ஆள்பவர்கள்'

 
Sol Campbell
'என் தோல் வெள்ளையாக இருந்திருந்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டனாக இருந்திருப்பேன்' என்று மனம் நொந்து அந்நாட்டு முன்னாள் கால் பந்து வீரர் சோல் கேம்ப்பெல் தெரிவித்திருக்கிறார்.

கேம்ப்பெல், 2012-ம், ஆண்டு சர்வதேச கால்பந்து ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.  இவர் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்ற 73 ஆட்டங்களில் அந்த அணியில் இடம் பிடித்திருந்தவர் என்பத குறிப்பிடத்தக்கது.

1998-ல், பெல்ஜியம் மற்றும் செக் குடியரசுக்கு எதிரான ஆட்டத்திலும், 2005-ல், அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் இங்கிலாந்து அணியின் காப்டனாக இருந்தார். இந்த மூன்று ஆட்டங்களும் நட்பு ரீதியான ஆட்டங்கள்.

தேசிய அணியின் கேப்டனாக செயல்பட நினைத்த தன் கனவு நிறைவேறாதது குறித்து தன் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அதில் அவர் இப்படி சொல்கிறார்:

"கிளப் அணிகளில் கேப்டனாக இருந்ததால் தேசிய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவேன் என நினைத்தேன். ஆனால், கடைசிவரை நியமிக்கப்படவில்லை. இதற்கான காரணம் என்னவென்று எனக்கு நானே பலமுறை கேள்வி எழுப்பிக் கொண்டேன். தோல் நிறம்தான் பிரச்னை என்று பிறகு தெரிந்து கொண்டேன். 



என் தோல் மட்டும் வெள்ளையாக இருந்திருந்தால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக இருந்திருப்பேன். பெரும்பாலான இங்கிலாந்து ரசிகளர்கள் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் கேப்டனாக செயல்படுவதை விரும்ப மாட்டார்கள் என்று கால்பந்து சங்கம் நினைத்து விட்டது" - என கேம்ப்பெல் குறிப்பிட்டுள்ளார்.

கேம்ப்பெல் ஏற்கனவே செப்.27, 2013-ல், 'தி கார்டியனுக்கு' அளித்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. (http://www.theguardian.com/football/2013/sep/27/sol-campbell-racism-england-manager}

கேம்ப்பெல் காலத்தில் கால்பந்து சங்கத்தின் இயக்குனராக இருந்த டேவிட் டேவிஸ் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தாலும் அந்தக் காலக்கட்டது இனவெறியைக் களைய பாடுபட்டதையும் ஒப்புக் கொள்கிறார். 

"கேப்டன் யார் என்பதை மேலாளர்கள்தான் தேர்வு செய்வர். இதில் கால்பந்து சங்கம் தலையிட்டதாக நினைவில் இல்லை. இந்த குற்றச்சாட்டு தவறானது. என் காலத்தில் கால்பந்தில் இருந்த இன வேறுபாட்டை வேரறுக்க வேண்டும் என்பதில் சிலர் உறுதியாக இருந்தனர். இது பெருமை அளிக்கும் விஷயமாகும்" - என்கிறார்.

சூரியன் மறையாத சாம்ராஜ்யம் என்ற பெருமையுடன் என்னதான் உலகைக் கட்டி ஆண்டாலும், இனவெறியை இதுவரையிலும் வெற்றிக் கொள்ள முடியாமல் அந்தப் பேரரசர்கள் கட்டி ஆள்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.


 


பெஸ்ட் கிளிக்:'காக்கா குளியல்'

வாகனப் போக்குவரத்து மிக்க சென்னை, எண்ணூர் நெடுஞ்சாலையில் குளிக்கும் காக்கா.