NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Tuesday, July 30, 2013

Monday, July 29, 2013

என் கேள்விக்கு என்ன பதில்? - 'இதுதான் பதில்!'


ஒரு முறை மாபெரும் மார்க்க அறிஞரும் இஸ்லாமிய இயக்கத் தலைவருமான மௌலானா ஜலாலுத்தீன் உமரி அவர்கள் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார்.

அதே கூட்டத்தில் கலந்துகொள்ள முஸ்லிமல்லாத வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ஒருவரும் வந்திருந்தார். மௌலானாவும் பேராசிரியரும் பேசிக்கொண்டிருந்தபோது, முகலாயர் மன்னர்கள் குறித்தும், அவர்களின் செயல்கள் குறித்தும்தங்களின் கருத்து என்ன என்று மௌலானாவிடம் கேட்டார் பேராசிரியர்.

முகலாய மன்னர்களுக்கு ஆதரவாக மௌலானா பேசுவார், அதை வைத்து அவரை மடக்கி விடலாம் என்று அந்தப் பேராசிரியர் திட்டமிட்டிருந்தார். மௌலானா அவர்களோ எந்தப் பதற்றமுமின்றி அமைதியாகப் பதில் கூறினார்:

“பேராசிரியர் அவர்களே..! நான் குர்ஆன்-ஹதீஸ் துறையில் ஆய்வுகள் செய்து பட்டம் பெற்றவனே தவிர வரலாற்றுத் துறை மாணவன் அல்லன். நீங்கள் வரலாற்றுத் துறை பேராசிரியராக இருக்கிறீர்கள். 



எந்தெந்த முஸ்லிம் மன்னர் என்னென்ன செய்தார் என்று நீங்கள் சொன்னால், அந்தச் செயல்களை இஸ்லாம் ஆதரிக்கிறதா இல்லையா என்பதை நான் சொல்வேன். அதன் மூலம் நீங்களே முகலாய மன்னர்கள் குறித்து ஒரு முடிவுக்கு வரலாம்.”

பேராசிரியர் வாயடைத்துப் போய்விட்டார்

அந்தப் பேராசிரியருக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் முஸ்லிம்களின் சில செயல்பாடுகள் குறித்து குதர்க்கமாகவும் குத்தலாகவும் வினாக்கள் எழுப்புபவர்களுக்கும் இதுதான் பதில்.
 
சகோ.சிராஜுல்  ஹஸன்
தகவல்: சிராஜுல் ஹஸன்

Sunday, July 28, 2013

விருந்தினர் பக்கம்: 'வலி' ஒன்றல்லோ..?


ஸ்வர்ணமால்யா ஒரு பெண், அதனால் அவருக்கு 'வலிக்காமல்' அவரை கண்டிக்க வேண்டுமென்றால்……..

பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட அனுராதாரமணன் ஒரு பெண்ணில்லையா?

காஞ்சி சங்கரமடத்தில் அடைத்து வைக்கப்பட்டு தொடர்ந்து பாலியல் வல்லுரவிற்கு உட்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் உஷா ஒரு பெண்ணில்லையா?

முளை சலவை செய்யப்பட்டு, பாலியல் சுரண்டலுக்கும், மீடியா ரவுடிகளால் அவமானத்திற்கும் உட்படுத்தப்பட்ட நடிகை ரஞ்சிதா ஒரு பெண்ணில்லையா?

இளம் வயதில் தாலியறுத்து முண்டச்சியாக்கப்பட்ட சங்கர்ராமனின் மனைவி ஒரு பெண்ணில்லையா?

சின்னஞ்சிறு வயதில் அநாதையாக்கப்பட்ட சங்கர்ராமனின் மகள் ஒரு பெண்ணில்லையா?

அவர்களுக்கெல்லாம் வலித்தால் பரவாயில்லை, ஆனால் ஸ்வர்ணமால்யாவுக்கு வலிக்கக்கூடாதா?

நன்றி: வெங்கடேஷ் ஆங்கைஸ்நெட்.

Venkatesh Angaisnet

Friday, July 26, 2013

VIZIGAL - MERCHANT - வியாபாரி

விருந்தினர் பக்கம்: 'சோறு போடும் பெண்கள் புறக்கணிப்பு..!'

தற்போதைய புள்ளிவிவரங்கள்படி நிமிடத்திற்கு 32 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதில் தற்கொலை செய்து கொண்ட பண்ணை மகளிர் (பெண் விவசாயிகள்) குறித்த கணக்கை சேர்ப்பதில்லை.


உண்மையில்,பெண்கள் 19 வகையான வேளாண் பணிகளைச் செய்கின்றனர்.  

சர்வதேச உணவு மற்றும் வேளாண் நிறுவனம்,  

வேளாண்துறையில் - 

வருடத்துக்கு ஒரு ஹெக்டர் நிலத்தில்,


  •  மாடுகள் 1064 மணி நேரமும்,
  • பெண்கள் 3485 மணி நேரமும்,
  • ஆண்கள் 1212 மணி நேரமும்

பணியாற்றுகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

வளரும் நாடுகளில் உணவு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பு 60 முதல் 80 சதவீதமாகவும் உலக அளவில் 50 சதவீதமாகவும் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அரசு மற்றும் வருவாய்த் துறையில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது நிலத்தின் பட்டா அவர்களின் பெயரில் இல்லாத காரணத்தால் அவர்கள் இழப்பீடுகள் பெற முடியவில்லை. வேளாண் கடன்கள் வங்கிகளில் பெற முடியவில்லை. வேளாண்துறையில் அதிக பங்களிப்பை செய்யும் பெண்களுக்கு விவசாயிகளுக்கான அங்கீகாரம் வழங்க தொடர்ச்சியாக போராட வேண்டும்.

(கடலூரில் நடக்கும் விவசாயிகள் சங்க அகில இந்திய மாநாட்டில் 26.07.2013 அன்று தோழர் வாசுகி உமாநாத் ஆற்றிய வாழ்த்துரையிலிருந்து..)

தகவல்: Sindhan Ra

Sindhan Ra
 

Tuesday, July 16, 2013

காலப்பெட்டகம்: 'மோடியின் அரியணைக்காகத் தொடரும் நரபலிகள்!'


மும்பராவில் உள்ள இஸ்ரத் ஷேக்கின் வீடு இருட்டாக இருந்தது. பத்தொன்பதே வயதான அந்த அப்பாவிப் பெண் வகுப்புவாதிகளின் அரியணைகளுக்குப் பலியாகிப் போனவள். மின் தடை அந்த வீட்டாரைப் பாதித்ததாகத் தெரியவில்லை. அவர்கள் மனங்கள் உள்ளுக்குள் விம்மிக் கொண்டிருந்தன. “அழகான பெண்! தான் உண்டு; தன் வேலை உண்டு.. – என்று கல்லூரியும், வீடுமாய் வாழ்க்கையை ஓட்டியவள்! அப்படிப்பட்டவளுக்கு நரேந்திர மோடியின் குஜராத் போலீஸார் சூட்டியப் பெயர் ‘லஷ்கரே தொய்பா’ தீவிரவாதி! அதுவரை அந்தப் பெயரைக் கேட்டதும் இல்லை என்கிறார்கள் குடும்ப உறுப்பினர்கள். இஸ்ரத்தும் அவளுடனிருந்த நான்கு பேரும் அதற்கு முந்தைய நாள்தான் நரேந்திர மோடியைக் கொல்ல வந்தவர்கள் என்று போலீஸாரால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
வழக்கம் போலவே, போலீஸ் ஏ.கே.56 துப்பாக்கி, வெடிப்பொருள் என்று காருக்குள்ளிருந்து ஏதேதோ கண்டுபிடித்தது.
“என்னோட மகள் சராசரியான ஒரு கல்லூரி மாணவி. அவளுக்கு எந்த விதமான தீவிரவாத அமைப்போடும் தொடர்பில்லை!” – என்று புலம்புகிறார் ஷமீமா ஷேக். இஸ்ரத்தின் தாயாரான அவரை குடும்ப உறுப்பினர்கள் சமாதானப்படுத்துகிறார்கள். ஐந்து சகோதரிகள், இரண்டு சகோதரர்களும் பிரமைப் பிடித்தவாறு இருக்கிறார்கள்.
தங்களது அருமை மகள் கொலை செய்யப்பட்ட செய்தியை அவர்கள் பத்திரிகையைப் பார்த்துதான் தெரிந்து கொண்டார்கள்.
இஸ்ரத் மாதுங்காவிலுள்ள ‘குருநானக் கல்சாஹ் கல்லூரியின்’ பி.எஸ்.சி. இரண்டாமாண்டு மாணவி. நல்லவேளை, அவள் தன்னோடு தனது கல்லூரி அடையாள அட்டையை வைத்திருந்தாள். அது உடனே அவளை அடையாளம் காண உதவியது.
“எனது மகள் நன்றாகப் படித்து சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். ‘லஷ்கரே தொய்பாவுடன்’ தொடர்புபடுத்தி போலீஸார் சுமத்தும் குற்றச்சாட்டை எங்களால் நம்பவே முடியவில்லை. இப்படி யாரை வேண்டுமானாலும் ‘தீவிரவாதி’ என்று முத்திரைக் குத்தி போலியான ‘என்கௌண்டர்’ – இல், கொல்வது எளிதானது!” – ஷமீமா அழுது புலம்புகிறார்.
குருநானக் கல்லூரியின் முதல்வர் அஜீத் சிங் சொல்லும்போது, “நடுத்தரக் குடும்பத்துப் பெண். மிகவும் எளியவள். அவள் நல்ல நடத்தைக் கொண்டவள்!” – என்கிறார் சோகமாக.
இஸ்ரத்தின் சகோதரர் ஷேக் அன்வர், பத்தாம் வகுப்பு படிக்கிறார். “நாங்கள் சட்டத்துக்கு கட்டுப்பட்டு வாழும் குடிமக்கள். எங்களுக்கு எந்த தீவிரவாத அமைப்போடும் தொடர்பில்லை. எதற்காக இவளோட உடலை சல்லடையாகத் துளைத்தெடுத்தார்கள்?” – என்று ஆவேசமாகக் கேட்கிறார்.
இஸ்ரத்தின் குடும்பத்தினருக்கு தற்போது நிழலாக ஆதரவு தருவது அண்டை – அயலார் மற்றும் சமூக ஆர்வலர்கள். அந்த புதன்கிழமை அவரது வீட்டைச் சுற்றியும் மக்கள் குழுமி விட்டனர்.
“எனக்கு இந்தக் குடும்பத்தைப் பற்றி பத்தாண்டுகளுக்கும் அதிகமாகத் தெரியும். இஸ்ரத்தின் தந்தையார் சிறியளவிலான வீட்டு கட்டுமானப் பணிகளை எடுத்து செய்து வந்தவர். அவருடைய மரணத்துக்குப் பிறகு சமூக நல அமைப்புகளின் உதவியுடன்தான் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் வசிக்கும் எங்களால் குஜராத் போலீஸாரின் இந்தக் ‘கதையை’ ஏற்றுக் கொள்ளவே முடியாது!” – என்கிறார் காங்கிரஸ் ஊழியரான ஷகிலா கான்.
அவர் தொடர்ந்து சொல்லும்போது, “…. இந்தப் படுகொலையைச் சும்மா விடப் போவதில்லை!” – என்றும், நீதிமன்றத்தை அணுக எல்லாவிதமான உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம்!” – என்கிறார். “… ஓர் அப்பாவிப் பெண்ணை கொலை செய்த அதிகாரிகளின் தவறை நாங்கள் வெளிப்படுத்த விரும்புகிறோம்!”- என்கிறார் தொடர்நது.
“சனிக்கிழமை எனது மகள் சில நாள் வெளியூர் செல்ல விருப்பத்தைத் தெரிவித்தாள். அவள் பாதுகாப்புடனேயே திரும்பி வருவாள் என்று நாங்கள் நினைத்திருந்தோம். கடைசியில், அவள் பிணமாக திரும்பி வருவாள் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை!”- என்கிறார் ஷமீமா அழும் கண்களோடு!
புனையைச் சேர்ந்த ஜாவித் காரை ஓட்டிவர, அவருடன் இஸ்ரத் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தார். காரில் பாகிஸ்தானின் பிரஜைகளான ‘ஜிஸ்ஹான் ஜோஹர், அம்ஜத் அலி அக்பர் அலி எனப்படும் இருவரும் இருந்ததாகத் தெரிய வந்ததாகவும், இவர்களை விரட்டி வந்த போலீஸார், அஹமதாபாத்தின் ‘வடல் வாட்டர் ஒர்க்ஸ்’ அருகில் காரை நிறுத்தும்படி சொன்னதாகவும், ஜிஸ்ஹான் ஜோஹர் உடனே காரிலிருந்து ஏ.கே.56 ரகத் துப்பாக்கியை எடுத்துச் சுட ஆரம்பித்ததாகவும், பதிலடியாக போலீஸாரும் சுட்டதாகவும் போலீஸ் தெரிவிக்கிறது. 
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில சிறுபான்மையினர் ஆணையம், இஸ்ரத் ஜஹான் கொல்லப்பட்டதற்கு சி.பி.ஐ. விசாரணையைக் கோரியுள்ளது.
“குஜராத் முதல்வர் மோடி அவரது சகாக்களாலேயே கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள நிலையில், அவரை அரசியல் ரீதியாகக் காப்பாற்றவே இந்த ‘என்கௌண்டர்’ நடந்துள்ளது. சிறுபான்மையினருக்கும் மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுக்கும் களங்கம் கற்பிக்கும் சதிச் செயலாகும் இது!” – என்கிறார் மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் முஹம்மது நஸீம் சித்தீகி.
“… சி.பி.ஐ விசாரணை ஒன்றே உண்மையை வெளிக்கொணரும். அப்பாவிகளைக் காப்பாற்றும்!” – என்கிறார் இவர்.
மும்பரா சென்று இஸ்ரத்தின் குடும்ப உறுப்பினர்கள், அண்டை – அயலார்கள், கல்லூரி நண்பர்கள், ஆசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள் என்று பல்வேறு தரப்பினரைச் சந்தித்த பின், “பாவம்..! இந்தப் பெண்! மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள்! எந்த கிரிமினல் பின்னணியும் இல்லாதவள்!” – என்கிறார் நஸீம் சித்தீகி.
தேசிய மனித உரிமை ஆணையமும், ‘நால்வர் படுகொலைச்’ சம்பந்தமான அறிக்கையை போலீஸிடம் கேட்டுள்ளது.
அதேபோல, தனது மகள் அப்பாவி என்று ஜாவித்தின் தந்தையும் கூறியுள்ளார். அஹமதாபாத்தில் தனது மகன் ‘ஜாவித் குலாம் முஹம்மது ஷேக் எனப்படும் பிரனேஷ் குமார் பிள்ளை’ கொல்லப்பட்டதை அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார் இவர். ‘மணலாடி’ – ‘தேக்கேதில் ஹவுஸ்’ ஆழப்புழையின் தாமரைக் குளத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கோபாலன் பிள்ளை. போலியான மோதலில் தனது மகன் கொல்லப்பட்டதாகவும், உண்மையில் அவர் அப்பாவி என்று சொல்கிறார்.
தனது மகன் புகைப் பிடித்தல், மது அருந்துதல் போன்ற எந்த கெட்டப் பழக்கமும் இல்லாதவர் என்றும், அவருக்கு எந்த தீவிரவாத அமைப்புடனும் தொடர்பு இல்லை என்றும் தெரிவிக்கிறார். அவரது வீட்டில் திரண்டிருந்த அக்கம் பக்கத்தில் வசிப்போரும் இதை உறுதிப்படுத்துகிறார்கள்.
தற்போது பிள்ளை, ஜனாதிபதி அப்துல் கலாமுக்குக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் சி.பி.ஐ. விசாரணை வேண்டி மனு தரவிருக்கிறார்.
என் மகன் உண்மையில் தீவிரவாதியாக இருந்தால் அவன் கொடுமையான தண்டனை அடைவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், அவன் அப்பாவி! உண்மைய வெளிக் கொணரத்தான் வேண்டும். அதனால், அநீதிக்கு எதிராகப் போராட தீர்மானித்துவிட்டேன்!” – என்று போர்க்குரல் எழுப்பியுள்ளார்.
பிள்ளையும் பத்திரிகைளைப் பார்த்துதான் தனது மகன் கொல்லப்பட்டதை அறிந்து கொண்டார். அதற்கேற்ப ‘டாடா இண்டிகா’ காரும் வீட்டுக்கு அருகில் உள்ள ‘ சாருமோடு’ என்ற இடத்திலுள்ள கடையில் வாங்கி அணிந்த உடைகளும் மகனின் உடலை அடையாளம் காண உதவின.
ஆக, மோடி என்ற வகுப்புவாதியின் பதவிக்கு ஆபத்து வரும் போதெல்லாம்.. தீவிரவாதிகள் என்ற பெயரில் குஜராத்தில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது வழக்கம்.

ஏற்கனவே மோடி ‘கவுரவ யாத்ராவில்’ கொலை முயற்சிக்கு தப்பியதாகச் சொல்லி போலீஸ், ‘லஷ்கரே தொய்பாவின்’ பெயரால் சிலரைக் கைது செய்து சிறையிலடைத்தது. அதன் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டார்கள்.
இது அப்பட்டமான மனித உரிமை மீறல் செயல்களாகும். ஐ.நா. மன்றத்தின் பிரகடனங்களை புறந்தள்ளும் கொடுமையாகும். கொல்லப்பட்டவர்களின் உண்மை நிலவரங்கள் வெளிக் கொணரப்பட வேண்டும். அப்பாவி உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் உடன் தண்டிக்கப்படுவதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு தகுந்த நஷ்ட ஈட்டைத் தர வேண்டும். இந்த கொலைகளுக்கான அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலைகளுக்குத் தூண்டுதலாக இருந்த வகுப்புவாதி நரேந்திர மோடியையும், அவருக்கு உதவியாக இருந்து செயல்பட்டோரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும்.
நடைபெற்ற ‘போலி மோதலை’ லேசாகக் கருதினால்… நாளை துப்பாக்கி குண்டுகள் சட்ட ரீதியாகவே நமது மார்புகளை நோக்கிப் பாயும். வாயில் நுழையாத தீவிரவாத இயக்கப் பெயர் சூட்டி மனித உயிர்கள் பறிபோகும்.
வகுப்புவாதிகளின் மீது கடும் அதிருப்தியில் இருந்ததாலேயே காங்கிரஸீக்கு முடிசூட்டி மகிழ்ந்தார்கள் முஸ்லிம்கள். இந்த நம்பிக்கையை மத்திய அரசு வீணாக்கக் கூடாது!

இந்தக் கட்டுரை அப்பாவி இஸ்ரத் போலீஸாரின் போலி மோதலில் கொல்லப்பட்டபோது, மக்கள் உரிமை வார இதழில் (ஜுன் 25 - ஜுலை 01, 2004) எழுதப்பட்ட முகப்புக் கட்டுரையாகும்.


Friday, July 12, 2013

வாழ்வியல்: " இதுதான் சாமார்த்தியம் "



அது ஒரு முன்னணி விற்பனை நிலையம். 

அதில் வேலைக்காக வந்தவரிடம் அதன் மேலாளர், "விற்பனைத்துறையில் முன் அனுபவம் உள்ளதா?” – என்று விசாரித்தார். 

"நான் ஏற்கனவே சேல்ஸ் மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் வந்தவர். 

"சரி.. நாளை முதல் நீங்கள் வேலையில் சேர்ந்து கொள்ளலாம்!- என்றார் மேலாளர். 

முதல் நாள்.

விற்பனை நிலையம் மூடும் நேரம் மேலாளர் வருகிறார்.

"இன்று எத்தனை நபர்களிடம் விற்பனை செய்தீர்கள்?” – என்று விசாரிக்கிறார்.

"ஒரே ஒருவரிடம் மட்டும்…" – என்று புதிதாக பணிக்கமர்ந்த அந்த பணியாளரிமிருந்து பதில் வருகிறது.

"என்ன? ஒரே ஒருவர் மட்டுமா? உங்களோடு பணிப்புரியும் சகாக்கள் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 நபர்கள்வரை விற்பனை செய்யக் கூடியவர்கள் தெரியுமா?” – என்றார் மேலாளர்.

“உங்களின் பணி  நிரந்தரமாக்கப்பட  வேண்டுமானால்  நீங்களும் மற்றவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும்!”- என்று அறிவுறுத்திய அவர் தொடர்ந்து விசாரித்தார்: “சரி இன்று எவ்வளவு டாலருக்கு விற்பனை செய்தீர்கள்?”

பத்து லட்சத்து ஐம்பதாயிரம் டாலர்!” – அமைதியாக சொன்னார் புதிதாக பணிக்கமர்ந்தவர்.

"என்ன..!” - என்று வியப்பு தெரிவித்த மேலாளர் மீண்டும் கேட்டார்: “ஒரே ஒரு நபரிடமா இவ்வளவு பெரும் தொகைக்கான விற்பனை நடந்தது?”

ஆம்..!” - என்று தலையாட்டிவிட்டு அவர் சொல்ல ஆரம்பித்தார்:

அய்யா, நமது விற்பனை நிலையத்துக்கு வந்தவரிடம் சிறிய தூண்டில் இருப்பதைக் கண்டு அது குறித்து விசாரிக்க ஆரம்பித்தேன். இன்னும் கொஞ்சம் பெரிய தூண்டிலை வாங்கினால்.. இன்னும் பெரிய மீன்களை பிடிக்கலாமே என்று ஆலோசனையும் சொன்னேன். அதை ஏற்றுக் கொண்ட அந்த வாடிக்கையாளர்.. கூடவே பிஷிங் ராட்.. பிஷிங் கியர் போன்ற மீன்பிடி சாதனங்களையும் சேர்த்து வாங்க தொடங்கினார்.

அதன் பிறகு நான் அவரிடம்,நீங்கள் எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று விசாரித்தேன். அதற்கு அவரோ ‘கரையில் அமர்ந்து மீன் பிடிக்கும் தகவலையும் சொன்னார். 

நடு ஆற்றில் படகில் சென்று மீன் பிடித்தால் பல இடங்களில் மீன் பிடிக்கலாம். படகில் ஓய்வும் எடுக்கலாம் அல்லவா என்று ஆலோசனை சொன்னதும் அதை ஏற்றுக் கொண்ட அவர் ஒரு படகுக்காக ஆர்டர் கொடுத்தார்.

நானும் நமது ‘படகு விற்பனைத்துறைக்கு அவரை அழைத்துச் சென்று நல்லதொரு படகை வாங்கிக் கொடுத்தேன். 

படகை வாங்கி முடித்த கையோடு அந்த வாடிக்கையாளர் “தம்பி, என்னுடைய இதோ இந்த கார் இப்பொழுது வாங்கிய ‘போட்டை’ இழுக்குமா என்று தெரியவில்லையே!” – என்று சந்தேகம் தெரிவித்தார்.

அவருடைய காரை பரிசோதித்தபோது உண்மையில் அது படகை இழுக்க தகுதியனாதல்ல என்று நான் சொன்னதை அவரும் அங்கீகரித்தார். எனது சிபாரிசை ஏற்று புது காரை வாங்கவும் முடிவெடுத்தார். 

புதிதாக பணிக்கமர்ந்த அந்த இளைஞர் சொல்வதை ஆச்சரியத்துடன் மேலாளர் கேட்டுக் கொண்டிருக்க தொடர்ந்தார் அவர்:

“… நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக்கை அவருக்குக் காட்டினேன். அதனுடைய பல்வேறு சிறப்பம்சங்களையும் அவருக்குக்கு விளக்கினேன். மகிழ்ந்து போன அவர் அந்த காரையும் வாங்கிக் கொண்டார்.

பின்னர் அவரிடம், “ அய்யா,  நீங்கள் எங்கு தங்கியிருக்கிறீர்கள்?” – என்று விசாரித்தபோது, “இப்போதைக்கு நிரந்தரமான இடம் கிடைக்காமல் தவிக்கிறேன்!” – என்று வருத்தப்பட்டார்.

நான் அவருக்கு நான்கு பேர் தங்கக் கூடிய ஒரு அழகிய செயற்கைக் கூடாரத்தையும் நமது நிறுவனத்திலிருந்து வாங்கிக் கொடுத்தேன்!” – என்றதும் மேலாளர் வியப்புடன், “.... என்ன  ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?" – என்றார். 

"அய்யா அவர் வாங்க வந்ததோ தலைவலிக்கான மாத்திரை.நான்தான் அவரிடம் மீன் பிடித்தலை பொழுது போக்காக்கிக் கொண்டால் மனதுக்கு உற்சாகம் கிடைக்கும். அதன் பிறகு தலைவலி உங்கள் பக்கம் எட்டிக் கூட பார்க்காது என்று சொன்னேன்!” – என்றார் படு அமைதியாக.

இதுதான் சாமார்த்தியம் என்பது.

அதன் பிறகு என்ன?

புதிதாக பணிக்கமர்ந்தவர் "கிடு கிடு" வென்று பதவி உயர்வு பெற்று வாழ்வில் முன்னேறினார் என்பதை சொல்லவும் வேண்டுமா?
 

Tuesday, July 9, 2013

சிறப்புக் கட்டுரை: 'சதித் தீப்பிழம்புக்குள் பிரமிடு!'


தங்கள் அரசியல் உரிமைகள் நிலைநாட்டப்பட எகிப்தியர்கள் மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார்கள். உலகமே வியக்கும் வண்ணம் நடக்கும் இராணுவத்துக்கு எதிரான சாமான்யர்களின் இந்த 'ஜனநாயக' மீட்புப் போராட்டம் அசாதாரணமானதுதான்! அதேநேரம், பெரும் உயிர் சேதத்தை விளைவிப்பதுகூட.

சமுத்திரமர்க திரண்டிருக்கும் இந்த ஜனத்திரளுக்கு முழு காரணம் இராணுவம்தான்! மக்களின் பேராதரவு பெற்று ஆட்சிக்கு வந்த ஒரு ஜனநாயக அமைப்பை உதாசினம் செய்து.. துப்பாக்கி முனைகளில் இராணுவம் கிரீடம் சூட்டிக் கொண்டதன் விளைவு இது.

தற்போது எகிப்தின் வீதிகள் தோறும் வாக்கு பெட்டிகள் போன்றும், இராணுவ ஹெலிகாப்டர்களோ வாக்குச் சீட்டுகளை எண்ணும் கருவிகள் போன்றும், முடிவுகளை அறிவிக்கும் நபர்களாய் சீருடை அணிந்த இராணுவமாய் களத்தில் எங்கும் பரபரப்பு சூழ்ந்து கொண்டிருக்கிறது.

எகிப்து இன்று எதிர்கொண்டிருக்கும் பேராபத்தை வார்த்தைகளால் வடிக்க இயலாது. 

எகிப்தின் அரசியல் அமைப்பு பெரும் ஆபத்தில் உள்ளது.

ஜனவரி 25, அன்று நடந்த புரட்சியின் போது இருந்த நிலையில் இன்று இராணுவம் இல்லை. தோளோடு தோள் இணைந்து எகிப்து மக்கள் 18 நாட்கள் நடத்திக் காட்டிய வரலாற்றுப் புகழ் பெற்ற புரட்சி அது. 30 ஆண்டு காலம் தங்களை அடக்கி ஆண்ட ஒரு சர்வாதிகாரியை வீழ்த்த அல்ல தற்போது நடக்கும் போராட்டம். இரு குழுக்களாய் சிதறிப் போயிருக்கும் மக்கள். ஆயுதத்தை கையில் ஏந்தி சொந்த மக்களுக்கு எதிராய் திருப்பியிருக்கும் மூர்க்கத்தனமான இராணுவம்.

மூன்று கட்டங்களாய் நடந்த தேர்தல்களிலும், இரண்டு முறை நடந்த 'வாக்குக்கணிப்பிலும்' (ரெப்ரெண்டம்) பல மணி நேரம் வேலை மெனக்கெட்டு மக்கள் வாக்களித்தனர். ஹெலிகாப்டர்களில் வானில் சுற்றியவாறு வட்டமிட்டு இதைக் கண்காணித்தது இராணுவம். திரண்டிருந்த அந்தந்த பகுதி மக்களின் எண்ணிக்கையைக் கொண்டு ஆட்சிக்கு வர இருப்பவர் யார் என்று ஏற்கனவே அறிந்தும்  கொண்து. அதேபோல, பெரும்பான்மை மக்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் இஸ்லாமிய இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததும் 'ஷரீயா' என்னும் இஸ்லாமிய அமைப்பு அரியணையில் ஏற வேண்டும் என்பதற்குதான்!


இது இப்படியிருக்க தற்போது கைதுகளும், ஊடகத் தடைகளுமாய் இராணுவம் தனது இரும்பு கரங்களால் ஜனநாயக அமைப்பின் குரல்வலையை நசுக்க முனைகிறது.வேறொரு முகமூடியோடு முபாரக்கின் அதிகாரம் மீண்டும் அரியணையில் ஏறப் பார்க்கிறது. 

முபாரக்கின் ஆதரவாளர்களும், எதிர்கட்சி தலைவரான டாக்டர் முஹம்மது பராடியின் ஆதரவாளருமாய் சேர்ந்துதான் ஜுன் 30 இல், தெருக்களில் திரண்டு மோர்ஸிக்கு எதிராய் குரல் எழுப்பினார்கள். மேற்கத்திய ஊடகங்களை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தண்ணீராய் பணத்தை இறைத்து மிகவும் திட்டமிட்டு மோர்ஸிக்கு எதிராய் ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள். 

கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு எல்லைகளில் தன் நாட்டு மக்களை கருவறுக்க காத்திருக்கும் கடும் எதிரிகளை கண்காணித்து சமாளிக்க வேண்டிய எகிப்து இராணுவமோ ஜனநாயகத்தை புறந்தள்ளியதோடு மட்டும் நில்லாமல் சொந்த மக்களின் நெஞ்சங்களில் குண்டுகளை பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், ஆயிரக்ணக்கில் தெருக்களில் திரண்டுவரும் மோர்ஸியின் ஆதரவாளர்கள் இராணுவம் அரங்கேற்றிய ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக போராடி வருகிறார்கள். 


உலகத்துடனான ஊடகத் தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு.. இராணுவத்தால் ஊடகங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில்.. சமூக வலைத்தளங்களின் உதவியாலும், சில தனியார் செயற்கைக் கோள்களின் உதவியாலும் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.

நிமிடத்துக்கு நிமிடம் எகிப்திய தெருக்களில் திரண்டுவரும் மக்கள் வெள்ளம் எகிப்தை மீண்டும் சதுக்கத்தில் திரட்டிவிடும் என்பதில் ஐயமில்லை! இதற்கான விலை சற்று அதிகமானலும் அதைவிட முக்கியம் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு எகிப்தியரும் நன்கறிந்து உள்ளார்கள்.

Sunday, July 7, 2013

ஆய்வுக் கட்டுரை: 'தக்ரீர் சதுக்கத்திலிருந்து தக்ஸீம் சதுக்கம்வரை..'


 
 இந்த இரண்டு சதுக்கங்களை ஒப்பிட முடியாதுதான்!

ஆம்..! எகிப்தின் கெய்ரோ தக்ரீர் சதுக்கத்தையும், துருக்கியின் தக்ஸீம் சதுக்கத்தையும் ஒப்பிடவே முடியாதுதான்! இரண்டும் வெவ்வேறு காரணங்களுக்காக மக்களைத் திரட்டிய சதுக்கங்கள். ஆனாலும், இரண்டையும் ஒன்று போலவே ஒப்பீடு செய்து செய்திகள் வெளியிடுவதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன்; அதுவும் வழக்கம் போல ஒரு கோரஸ் குரலில்.

2011 - ஆம், ஆண்டு எகிப்தில் நடந்த மக்கள் எழுச்சி 'அரபு வசந்தம்' என்று பெயர் சூட்டிக் கொண்டது. அறிவு ஜீவிகள் இந்த பெயரைக் கேட்டு சகிக்க முடியாமல் "வசந்தமாம்...! வசந்தம்..!" - என்று நீண்ட நாட்களுக்கு முணு முணுத்துக் கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து துருக்கியரின் போராட்டம் ஆரம்பித்தது. மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். 

மீண்டும் ஒப்பீடு ஆரம்பித்தது.

அறிவு ஜீவிகளின் விமர்சனங்கள் வெளிப்படையாக.. தெளிவாக வெளிப்படாமல் சந்தர்ப்ப வாதங்களாயின. அதுவும் மேற்குலகின் அரசியல் விரிவாக்க திட்டங்களை ஒட்டிய பிரதிபலிப்புகளாகவே அவை விளங்கின.


'அரபு வசந்தம்' அரசியல் ரீதியாக மத்திய கிழக்கத்திய நாடுகளை வடிவமைக்கும் என்று அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சு போன்ற நாடுகளை பீதிக் கொள்ளச் செய்தது. அதனால் வெடிக்க இருக்கும் மக்கள் புரட்டிசிகளை கண்டு அவை திகிலடையவே செய்தன.

அரபுலக சர்வாதிகாரிகளோ பெரும் பகுதி அமைதி வழியில் போராடிய மக்களை 'நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போராகவே' கருதி இரும்பு கரம் கொண்டு அடக்கலாயினர். அரபு கொடுங்கோலர்களின் இந்த அடக்குமுறை 'NATO' படைகள் தலையிடும்வரை தொடர்ந்தது.

லிபியாவில் இப்படிதான் நடந்தது.  'NATO' படைகளின் வரையரைக்குட்பட்ட ஒத்துழைப்பும்.. சொற்ப அளவிலான ஆயுதம் வழங்கலும் சர்வாதிகாரியின் முழுமையான ஆயுதப்படையினரோடு எதிர்க்க வைத்தது. இதன் விளைவாக ஆயிரக் கணக்கான மக்கள் படுகாயமுற்றனர்... கொல்லப்பட்டனர். ஆயிரக் கணக்கானோர் காணாமல் போயினர். லிபியாவின் மீது நடத்தப்பட்ட போரோ புவியியல் ரீதியாக நிலபரப்பையே பாழாக்கி மாற்றி அமைத்தது. ஒவ்வொரு இனமும் இனப்படுகொலை செய்யப்பட்ட கொடுமையும் நடந்தது. 

மத்திய கிழக்கத்திய நாடுகள் மீதான மேற்கத்திய நாடுகளின் 'மனிதாபிமான' தலையீடு மேற்கத்திய நாடுகளின் தன்னலங்களைக் கொண்ட அரசியல் பாணியாகும். துருக்கியில் அண்மையில் நடந்த மக்கள் போராட்டங்களின் போது இதுதான் நடந்தது. இத்தகைய மேற்கத்திய தலையீடுக்கு வழிவகுத்த நாடுகளில் துருக்கி முதலிடத்தை வகிக்கிறது என்றால் அது மிகையல்ல.

சிரியாவில் குருதி ஆறு பெருக்கெடுத்து ஓடும் நிலையில் அரபு வசந்தம் துருக்கியின் மேற்கு பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டது. துருக்கியின் வெளிவிவகார கொள்கையையே இது மறு சீரமைப்புக்கு உட்படுத்தியது. மேற்கத்திய முகாம்களுக்கு அருகில் துருக்கி வரும்விதமாக இது மாற்றியமைக்கப்பட்டது. 'அங்காரா' 'NATO'-வின் கொள்கை கோட்பாடுகளை முழுமையாக பின்பற்ற ஆரம்பித்தது.

'NATO'-வின் கொள்கை - கோட்பாடுகள் நயவஞ்சகத்தனமானவை. 

 
உதாரணமாக, 2011, செப். 17 - இல், 'வால்ட் ஸ்டீரீட் இயகத்தின்' போரட்டத்தை காவல்துறை கடுமையாக இரும்புகரம் கொண்டு அடக்கியது. போராட்டங்களில் ஈடுபட்ட நிரயுதபாணியான மக்களின் மீது மிருகத்தனமான அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டு கைதுகளோடு நிற்காமல் அடித்து துவம்சம் செய்தது. போராட்டக்காரர்களை கண்காணித்துக் கொண்டிருந்த 'FBI' மற்றும் 'Department of Homeland Security' படையினரும் இணைந்து ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க அதிரடி படைவீரர்களை ஏவினர். இதை எதிர்த்து 'Naomi Wolf ' கடந்தாண்டு டிச. 29 இல், 'தி கார்டியன் நாளேட்டிலும்' எழுதவும் செய்தார்.

இந்த மேற்கத்திய மனித நேயப் போராளிகள்தான் அண்மையில் பெரும் ஊழலில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் 'National Security Agency' (NSA) பாதுகாப்பு என்ற போர்வையில் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களை ஏவுப்பார்த்ததே அது. இந்த கொடிய குற்றம் உப்பு - சப்பில்லாமல் போனது. இவையெல்லாம் அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளான மேற்கத்திய நாடுகளுக்கும் சகஜமானது. 'தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்!'- என்ற பழமொழிக்கு பேர் போன நாடுகள் இவை. 

அரபு நாடுகள் எல்லாம் போர்களால் சீரழிக்கப்பட்ட நாடுகள் என்ற நிலையிலும், அந்நாடுகளின் மொத்த தலைமுறையும் பாதிக்கப்பட்வர்கள் என்ற உண்மையையும் உணராத அதன் சர்வாதிகார தலைவர்கள் டேவிட் கேமரோனோடும், பிரான்ஸின் 'பிரான் ஓயிஸ் ஹோலண்ட்' மற்றும் பராக் ஒபாமாவுடனும் சேர்ந்து நின்று கையாட்டி மகிழ்ந்து திளைக்கிறார்கள். இஸ்ரேலின் பாதுகாப்பில் இவர்களின் நிகழ்காலம்.. எதிர்காலம் ஆகியவை அடங்கியுள்ளதை இந்த பதவி வெறியர்கள் புரிந்து கொள்வதாயில்லை. 



மேற்கத்திய அதிகார மேலாண்மையே அரபு நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மையை தீர்மானிக்கிறது. முஸ்லிம் நாடுகளை இயக்கிக் கொண்டிருக்கிறது.  மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் விதியை தீர்மானிப்பதும் இந்த அளவு கோல்தான்! 

அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் அரசியல் நலன்களையொட்டிய நிகழ்வுகள்தான் அனைத்தும்... தற்போதைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்து அதிபர் மூர்ஸியின் ஆட்சி கவிழ்ப்பு உட்பட! 

ஆனால், பதவி வெறிபிடித்த ஆட்சியாளர்களுக்கும், கொள்கைக்காக அர்ப்பணித்துக் கொண்ட இயக்கவாதிகளுக்கும் இடையே பெருத்த வேறுபாடு உண்டு. மலைக்கும் - மடுவுக்கும் இடையிலான வேறுபாடு அது. ஆட்சியாளர்களை அரியணைகளைக் காட்டி விலைக்கு வாங்க முடியும்! பயமுறுத்தி ஒடுக்கவும் முடியும். இயக்கவாதிகளை இப்படி செய்யவே முடியாது. அவர்கள் மீண்டும்.. மீண்டும் களத்தில் நின்றுகொண்டுதான் இருப்பார்கள்; தங்கள் இலக்குகளை எட்டும்வரை!